சந்தோஷம் தரும் பட்ஜெட்டில் வரும் டாடா டியாகோ காரின் புதிய ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல்!

Written By:

டாடா டியாகோ காரில் குறைந்த விலை ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் பற்றிய புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதனை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

சந்தோஷம் தரும் பட்ஜெட்டில் வருகிறது டாடா டியாகோ காரின் புதிய ஏஎம்டி மாடல்!

டிசைன், வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துவிட்ட டாடா டியாகோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட போது மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே வந்தது.

சந்தோஷம் தரும் பட்ஜெட்டில் வருகிறது டாடா டியாகோ காரின் புதிய ஏஎம்டி மாடல்!

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பெட்ரோல் மாடலில் மட்டுமே ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

சந்தோஷம் தரும் பட்ஜெட்டில் வருகிறது டாடா டியாகோ காரின் புதிய ஏஎம்டி மாடல்!

அத்துடன், டாடா டியாகோ காரின் எக்ஸ்இசட் என்ற டாப் வேரியண்ட்டில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கிறது. இதனால், டியாகோ காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கனவுடன் காத்திருந்தவர்களுக்கு, பட்ஜெட் அளவில் ஏமாற்றத்தை தந்தது. மேலும், இந்த மாடலின் விற்பனையும் எதிர்பார்த்த அளவு இல்லை.

சந்தோஷம் தரும் பட்ஜெட்டில் வருகிறது டாடா டியாகோ காரின் புதிய ஏஎம்டி மாடல்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், குறைவான விலை கொண்ட ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலை டியாகோ காரில் அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு இருக்கிறது. அடுத்த மாதம் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சந்தோஷம் தரும் பட்ஜெட்டில் வருகிறது டாடா டியாகோ காரின் புதிய ஏஎம்டி மாடல்!

எக்ஸ்டிஏ என்ற பெயரில் குறைவான விலை வேரியண்ட்டாக விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாதம் 300 கார்களும், அடுத்த மாதத்திலிருந்து மாதத்திற்கு 500 கார்கள் என்ற வீதத்திலும், இந்த டாடா டியாகோ காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.

சந்தோஷம் தரும் பட்ஜெட்டில் வருகிறது டாடா டியாகோ காரின் புதிய ஏஎம்டி மாடல்!

மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் எக்ஸ்இசட் என்ற ஏஎம்டி வேரியண்ட்டை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளளவும் முடிவு செய்துள்ளதாக டீம் பிஎச்பி தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதனால், டியாகோ காரின் குறைந்த விலை ஏஎம்டி மாடல் வருகை குறித்து வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Source: Team BHP

English summary
Tata Motors launched the Tiago with the Automatic Manual Transmission (AMT) gearbox on the top variant XZ in March 2017 and was available only in the petrol and not in the diesel model.
Story first published: Monday, August 14, 2017, 18:22 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark