டிரக் மோதியும் கல்லு மாதிரி நின்ற டாடா டியாகோ கார்... பயணிகள் பத்திரம்!

தானே நகரில் டிரக்குடன் மோதி டாடா டியாகோ கார் பயங்கர விபத்தில் சிக்கியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

By Saravana Rajan

இடவசதிக்கு பெயர் பெற்ற டாடா கார்கள் இப்போது கட்டுமானத்திலும் சிறப்பானதாக இருப்பதற்கு சமீபத்தில் நடந்த சில விபத்து நிகழ்வுகள் சான்றாக மாறி இருக்கின்றன. அந்த வகையில்,தானே நகரில் டிரக்குடன் மோதி விபத்தில் சிக்கிய டாடா டியாகோ கார் பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளித்திருப்பது தெரிய வந்துள்ளது.

நண்பேண்டா... தவறு செய்தாலும் உரிமையாளரை காத்தருளிய டியாகோ கார்!

தானே நகரில் உள்ள கோத்பந்தர் என்ற சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த டிரக் ஒன்றை டாடா டியாகோ காரின் ஓட்டுனர் முந்த முயன்றுள்ளார். கார் ஓட்டுவதில் அனுபவமில்லாத அவர் இடதுபக்கமாக அந்த டிரக்கை முந்தியுள்ளார்.

நண்பேண்டா... தவறு செய்தாலும் உரிமையாளரை காத்தருளிய டியாகோ கார்!

டிரக்கை முந்தும்போது தவறுதலாக கணித்து உடனடியாக வலது பக்கம் காரை திருப்பி விட்டார். அப்போது, காரின் பின்பகுதி டிரக்குடன் இடித்து நிலைகுலைந்தது. அத்துடன், முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீதும் பலமாக மோதியது.

Recommended Video

2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
நண்பேண்டா... தவறு செய்தாலும் உரிமையாளரை காத்தருளிய டியாகோ கார்!

இந்த சூழலில் பின்னால் வந்த டிரக்கும் காரின் பின்புறத்தில் பலமாக மோதியது. நடுவில் மாட்டிக் கொண்ட டாடா டியாகோ கார் கடுமையாக சேதமடைந்தது. இந்த பயங்கர விபத்தில் காரில் பயணித்த அனைவரையும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நண்பேண்டா... தவறு செய்தாலும் உரிமையாளரை காத்தருளிய டியாகோ கார்!

டாடா டியாகோ காரில் ஏர்பேக்குகள் உரிய நேரத்தில் விரிவடைந்ததும் பயணித்தோர் உயிர் தப்பிக்க காரணமாக இருந்ததுடன், காரின் உட்பகுதியில் மோதல் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. எனவே, அனைவரும் தப்பினர்.

நண்பேண்டா... தவறு செய்தாலும் உரிமையாளரை காத்தருளிய டியாகோ கார்!

அதேநேரத்தில், டிரக் ஓட்டுனர் இந்த பயங்கர விபத்தில் காயமடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பேண்டா... தவறு செய்தாலும் உரிமையாளரை காத்தருளிய டியாகோ கார்!

டாடா டியாகோ காரை ஓட்டியவரே விபத்துக்கு முக்கிய காரணமாக தெரிய வருகிறது. இருப்பினும், காரின் சிறப்பான கட்டுமானத்தால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருப்பதும் இந்த சம்பவம் மூலமாக தெரிய வந்துள்ளது.

நண்பேண்டா... தவறு செய்தாலும் உரிமையாளரை காத்தருளிய டியாகோ கார்!

அதிக மைலேஜ் பெறும் நோக்கில் கார்களின் எடை வெகுவாக குறைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், டாடா உள்ளிட்ட சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே, காரின் கட்டுமானம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், காரின் எடை குறைப்பில் சமரசம் செய்யாமல் தரமான ஸ்டீல் பேனல்களுடன், சிறந்த கட்டுமானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.

நண்பேண்டா... தவறு செய்தாலும் உரிமையாளரை காத்தருளிய டியாகோ கார்!

இதனால், வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த பாதுகாப்பு தரமுடைய கார்களை பெற முடிகிறது. வேறு சில பிராண்டுகளின் கார்களாக இருந்தால், நிச்சயம் இதுபோன்ற விபத்துக்களில் உயிரிழப்புகள் என்பது தவிர்க்க முடியாத விஷயமாக கருத வேண்டியிருக்கும்.

Source: Shifting gears

English summary
Tata Tiago Crash In Thane.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X