டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

Written By:

பேட்டரியில் இயங்கும் புதிய டாடா டியாகோ கார் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு சூசகமாக இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறது.

டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

வரும் செப்டம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில், பேட்டரியில் இயங்கும் புதிய மின்சார கார் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்துள்ளது. அது டாடா டியாகோ கார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

Recommended Video - Watch Now!
Tata Nexon Review: Specs
டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

தற்போது விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் டாடா டியாகோ கார் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், டாடா டியாகோ காரின் மின்சார மாடலும் விரைவில் அறிமுகமாக இருப்பது பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே காட்சிக்கு அறிமுகப்படுத்திய பேட்டரியில் இயங்கும் போல்ட் காரின் தொழில்நுட்பங்கள்தான் இந்த புதிய டாடா டியாகோ காரில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

இந்த காரில் லித்தியம் அயான் பேட்டரி மற்றும் மின் மோட்டார் போன்றவை ஏற்கனவே போல்ட் காரில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், அது இலகுவாக டியாகோ காரிலும் இடம்பிடித்துள்ளது. இந்த கார் ஐரோப்பாவில்தான் முதலில் அறிமுகம் செய்யப்படும். அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

ஏனெனில், அங்கு எலக்ட்ரிக் கார்களுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவை வழங்கி வருகின்றன. அங்கு எலக்ட்ரிக் கார்களுக்கான சிறப்பான சூழலும், வரவேற்பும் இருப்பதால், அங்கு முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் குறைவான விலை கார் தயாரிப்புக்கான புதிய பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே, மின்சார கார் மார்க்கெட்டில் டாடா டியாகோ கார் நிச்சயம் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

டாடா டியாகோ காரின் மின்சார மாடல் உருவாக்கப்பட்டு வரும் அதே நேரத்தில், இதே தொழில்நுட்பத்தில் டாடா நானோ காரின் மின்சார மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

டாடா டியாகோ காரின் எலக்ட்ரிக் மாடல் விரைவில் அறிமுகமாகிறது!

டாடா நானோ கார் விற்பனையில் படுமோசமாக இருந்து வரும் நிலையில், மின்சார மாடல் மூலமாக அதற்கு உயிர் கொடுக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், டாடா நானோ காரின் மின்சார மாடலும் ஐரோப்பாவில்தான் முதலில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Tata Tiago EV could launch in India next year.
Story first published: Tuesday, August 8, 2017, 17:46 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark