விற்பனையில் செலிரியோவை நெருங்கும் டாடா டியாகோ... படபடப்பில் மாருதி!

Written By:

டிசைன், சிறப்பம்சங்கள் மற்றும் சரியான விலை என பக்கா காம்பினேஷனில் கிடைக்கும் பட்ஜெட் கார் மாடலான டாடா டியாகோவுக்கு வாடிக்கையாளர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதனால், டாடா டியாகோ காருக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாருதி நிறுவனத்தின் விற்பனையில் முக்கிய பங்களிப்பை அளித்து வரும் செலிரியோ காரின் விற்பனையை டாடா டியாகோ நெருங்கி வருகிறது.

To Follow DriveSpark On Facebook, Click The Like Button
விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ காரின் விற்பனை முதல் சில மாதங்கள் சுமாரான அளவிலேயே இருந்ததது. அதன் பின்னர், டாடா டியாகோ காரின் விற்பனை வெகுவாக உயரத் துவங்கியிருக்கிறது.

விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

கடந்த ஜூன் மாதம் 4,901 டாடா டியாகோ கார்களும், ஜூலையில் 5,438 டியாகோ கார்களும், ஆகஸ்ட்டில் 6,274 டாடா டியாகோ கார்களும் விற்பனையாகி உள்ளன. அதாவது, கடந்த மே மாதத்தில் இருந்து டாடா டியாகோ காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் சிறப்பான வளர்ச்சி பெற்று வருகிறது.

Recommended Video
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

இந்த நிலையில், மாருதி செலிரியோ காரின் நேரடி போட்டியாளர்களில் ஒன்றான டாடா டியாகோ காரின் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருவது, மாருதி கார் நிறுவனத்துக்கு நெருக்கடியை தருவதாகவே கருதப்படுகிறது. கடந்த மாதம் 9,210 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகி உள்ளன.

விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

டியாகோ காரின் தற்போதைய வளர்ச்சியை வைத்து பார்க்கும்போது பண்டிகை கால விற்பனையில் மாருதி செலிரியோ காருக்கு இணையான விற்பனையை அல்லது அதிகமாகவோ விற்பனையை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

டாடா டியாகோ காரின் விற்பனை வளர்ச்சிக்கு பல காரணங்கள். அதில், விலையும் முக்கிய காரணம். ரூ.3.21 லட்சம் முதல் ரூ.5.65 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் டாடா டியாகோ கார் விற்பனைக்கு கிடைக்கிறது. அனைத்து வசதிகள் கொண்ட டாப் வேரியண்ட் மாடல் ரூ.6 லட்சம் ஆன்ரோடு பட்ஜெட்டில் கிடைக்கிறது.

விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

புதிய டாடா டியாகோ காரின் வடிவமைப்பு மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. அத்துடன், உட்புறத்திலும் பல நவீன வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் மியூசிக் சிஸ்டம், அலங்கார வேலைப்பாடுகள் உள்ளிட்டவை டாடா டியாகோ காருக்கு அதிக வலு சேர்க்கும் சிறப்பம்சங்கள்.

விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

டாடா டியாகோ கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும் எஞ்சினும் உள்ளது.

விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

பெட்ரோல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கிறது. மைலேஜிலும் சிறப்பான மாடல். பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 27.28 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்று தெரிவிக்கிறது.

விற்பனையில் நெருங்கி வந்த டாடா டியாகோ... படபடப்பில் மாருதி செலிரியோ!

இப்படி பல்வேறு அம்சங்களில் வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த மாடலாக டாடா டியாகோ கார் மாறி இருக்கிறது. டாடா டியாகோ காரின் விற்பனை அதிகரித்து வருவது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. அதேநேரத்தில், டாடா டியாகோ காரின் நெருக்கடியை சமாளிக்க செலிரியோ காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அல்லது இன்னபிற யுக்திகளை நிச்சயம் மாருதி கையாளும் என்பதால் வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Tiago Closing In On Maruti Celerio Sales In India.
Please Wait while comments are loading...

Latest Photos