இந்திய சந்தையில் மொத்த விற்பனையையும் அள்ள வருகிறது டாடா டியோகோ ஸ்போர்ட் கார்..!!
இந்திய சந்தையில் மொத்த விற்பனையையும் அள்ள வருகிறது டாடா டியோகோ ஸ்போர்ட் கார்..!!
இந்தியாவில் பெரிய விற்பனை திறனை பெற்று வரும் டாடாவின் டியோகா கார், ஸ்போர்ட் திறன் பெற்ற வடிவில் தீவிரமாக தயாராகி வருகிறது.

இதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்ட டாடா, தற்போது டியாகோ ஸ்போர்ட் பதிப்பை விரைவில் வெளியிடலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

டாடா மோட்டார்ஸின் ஹேட்ச்பேக் மாடால் டியாகோ கார் இந்தியாவில் நல்ல விற்பனை திறனை வாடிக்கையாளர்கள் மத்தியில் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

இதற்கான வரவேற்பை இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகரிக்க முடிவு செய்த டாடா, டியோகோ காரை ஸ்போர்ட் திறனுக்கு மாற்றுவதாக அறிவித்தது.

அதன்படி, அதற்கான தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டு, தீவிரமாக நடந்து வந்த வேளையில், தற்போது டியாகோ ஸ்போர்ட் காரின் உருவாக்க பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் டியாகோ ஸ்போர்ட் மாடல் கார் வெளிவரலாம். மேலும் ஹேட்ச்பேக் ஸ்போர்ட் வெர்ஷனில் இந்தியாவிலேயே விலை குறைந்த மாடலாக இந்த கார் இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

டியோகோ ஸ்போர்ட் காரில் ஏரோடைனமிக் பாடி கிட்டுகள், புதிய ரக கிராஃபிக்ஸ் மற்றும் புதிய அலாய் வீல்கள் இடம்பெற்றிருக்கும். மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிற தேவைகளிலேயே ஸ்போர்ட் மாடல் கிடைக்கும்.

1.2 டர்போசார்ஜிடு 3 சிலிண்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினை பெற்றிருக்கும் டியாகோ ஸ்போர்ட் கார்,
அதிகப்பட்சமாக 108 பிஎச்பி பவர் மற்றும் 170 என்.எ, டார்க் திறனை தரவல்லது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இந்த காரில் உள்ளது.
Recommended Video


காருக்கான தொழில்நுட்ப கட்டமைப்புகளில் தற்போதைய டியாகோ காரை விட இந்த ஸ்போர்ட் வெர்ஷனின் சஸ்பென்ஷன் மேலும் சீராக இருக்கும்.

ஸ்போர்டியர் தரத்திற்கான சீட் அமைப்பு, அலாய் கார்களுக்கான பெடல் மற்றும் பிரத்யேக பொலிவூட்டப்பட்ட இன்ட்ரீயல் ட்ரிம் ஆகியவை டியாகோ ஸ்போர்ட் மாடலில் புதிதாக மேற்கொள்ளப்படும்.

ஏர்பேகுகள் மற்றும் ஏபிஸ் உடன் கூடிய பிரேக் அமைப்பு ஆகியவை டியாகோ ஸ்போர்ட் எக்ஸ்.இசட் வேரியன்டில் இடம்பெற்றிருக்கும்.

இந்தியாவில் விற்பனையாகி வரும் டாடா டியாகோ கார் ரூ.4.98 லட்சம் (எக்ஸ்ஷோரூம், டெல்லி) விலையில் இருந்து தொடங்குகிறது.

டாடா டியாகோ ப்ரீமியம் கார் சாதரண மாடலை விட ரூ.1 லட்சம் விலை வரை கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








