கருப்பு- சிவப்பு அலங்காரத்தில் டாடா டியாகோ காரின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்!

Written By:

பண்டிகை காலத்தில் டாடா டியாகோ காரை வாங்க திட்டமிட்டிருப்போருக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும் விதத்தில், சிறப்பு பதிப்பு மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா டியாகோ காரின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

டாடா டியாகோ Wizz Edition என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. சாதாரண டாடா டியாகோ காரை விட பல கவர்ச்சிகர அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. கூரை, பி பில்லர் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு தனித்துவம் பெற்றிருக்கின்றன.

டாடா டியாகோ காரின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

க்ரில், வீல் கவரில் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்டிருப்பதுடன் மிக கவர்ச்சியான அம்சம். புதிய ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

டாடா டியாகோ காரின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

காரின் உட்புறம் இரட்டை வண்ணத்தில் காட்சி தருகிறது. பியானோ பிளாக் என்ற பிரத்யேக கருப்பு வண்ணத்தில் சிவப்பு வண்ண பாகங்கள் அலங்காரம் கண்களை கவர்கின்றன. புதிய ஃபேப்ரிக் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
டாடா டியாகோ காரின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

டாடா டியாகோ காரின் எக்ஸ்டி வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு ஸ்பெஷல் எடிசன் மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. டாடா டியாகோ காரின் சாதாரண எக்ஸ்டி வேரியண்ட்டை விட இந்த மாடல் ரூ.15,000 கூடுதல் விலையில் கிடைக்கும்.

டாடா டியாகோ காரின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

டாடா டியாகோ காரின் பெட்ரோல், டீசல் மாடல்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 85 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல 1.2 லிட்டர் எஞ்சினும், டீசல் மாடலில் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் அளிக்க வல்ல எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது. பெட்ரோல் மாடல் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும், டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

டாடா டியாகோ காரின் ஸ்பெஷல் மாடல் அறிமுகம்- முழு விபரம்!

டாடா டியாகோ காரின் விஸ் எடிசன் மாடல் ரூ.4.52 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போருக்கு இந்த அலங்காரமான டாடா டியாகோ கார் சிறந்த தேர்வாக அமையும்.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Tiago Wizz launched in India. Prices for the new Tata Tiago Wizz starts from Rs 4.52 lakh for the petrol version, while the diesel version of the Tiago Wizz is priced at Rs 5.30 lakh ex-showroom (Delhi).
Story first published: Tuesday, September 12, 2017, 17:56 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark