விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

Written By:

டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. அதன் ஸ்பை படங்களையும், விபரங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவை பெரும் சரிவிலிருந்து மீட்ட பெருமை டாடா டியாகோ காருக்கு உண்டு. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்த கார் விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்த உற்சாகத்தையும், விற்பனையையும் தக்க வைக்கும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் பொருந்திய லிமிடேட் எடிசன் டியாகோ கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

இந்த காரின் ஸ்பை படங்கள் டீம் பிஎச்பி தளத்தில் இரண்டாவது முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே, சாலையில் சோதனை செய்யப்பட்டபோது எடுத்த படங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், உற்பத்தி பிரிவில் டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் இருக்கும் படங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல் Wizz Edition என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது. பெட்ரோல், மற்றும் டீசல் மாடல்களில் இந்த சிறப்பு பதிப்பு மாடல் கிடைக்கும். இந்த காரின் கூரை மற்றும் ரியர் வியூ மிரர்கள் கருப்பு நிற வண்ணம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

உட்புறத்திலும் பல கூடுதல் சிறப்பம்சங்கள் உள்ளன. சென்டர் கன்சோல் பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்தில் பளபளக்கிறது. ஏசி வென்ட்டுகளை சுற்றி சிவப்பு வண்ண அலங்கார தகடு பதிக்கப்பட்டு இருக்கிறது. உட்புறத்தில் இருக்கும் ரியர் வியூ மிரர் எதிரொலிக்காத தன்மையை பெற்றிருக்கிறது.

Recommended Video
2017 Maruti Suzuki Baleno Alpha Automatic Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

புதிய டாடா டியாகோ விஸ் எடிசன் மாடலில் மேம்படுத்தப்பட்ட ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த லிமிடேட் எடிசன் மாடலானது எக்ஸ்டி என்ற விலை உயர்ந்த வேரிண்ட்டில் மட்டும் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 13 அங்குல சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

டாடா டியாகோ காரில் 83 பிஎச்பி பவரையும், 114என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 68 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும். இரண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும்.

விரைவில் வருகிறது டாடா டியாகோ காரின் லிமிடேட் எடிசன் மாடல்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த லிமிடேட் எடிசன் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடல் டாடா டியாகோ கார் வாங்குவோருக்கு சிறப்பான தேர்வாக அமையும். அதேநேரத்தில், இந்த காரில் 14 அங்குல சக்கரங்களுக்கு பதிலாக, 13 அங்குல சக்கரங்கள் கொடுக்கப்பட இருப்பது ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.

English summary
Tata Motors is readying a new variant of its best-selling hatchback, the Tiago. The Wizz limited edition of the hatchback is spotted once again by TeamBHP, this time straight from the assembly line.
Story first published: Wednesday, August 23, 2017, 11:20 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos