ஏஎம்டி உடன் கூடிய புதிய டாடா டிகோர் கார் ரூ. 5.75 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!
ஏஎம்டி உடன் கூடிய புதிய டாடா டிகோர் கார் ரூ. 5.75 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!
டாடா டிகோர் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட வேரியண்ட் ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தனது வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ள டாடா, டிகோர் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் எக்ஸ்டிஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ என இரண்டு வேரியண்டுகளை வெளியிட்டுள்ளது.

டிகோர் காரில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் ஆகிய மாடல்கள் ஏற்கனவே விற்பனையில் உள்ளன.

தற்போது ஏஎம்டி வேரியண்டில் வெளிவரும் இந்த இரண்டு வேரியண்டுகளும் அவற்றை விட கூடுதலாக ரூ. 40,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

| வேரியண்ட் | விலை(டெல்லி) |
| எக்ஸ்.டி.ஏ | ரூ.5.75 லட்சம் |
| எக்ஸ்.இசட்.ஏ | ரூ. 6.22 லட்சம் |
Recommended Video


புதிய டாடா டிகோர் ஏஎம்டி கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்டுள்ளது. எஞ்சினில் 3 சிலிண்டர்களை பெற்றுள்ள இந்த கார் 84 பிஎச்பி பவர் மற்றும் 114 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

புதிய ஏஎம்டி கொண்ட எக்ஸ்டிஏ மற்றும் எக்ஸ்இசட்ஏ கார்களில் ப்ளூடூத், நேவிகேஷன் கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆடியோ கண்ட்ரோல் ஸ்டீயரிங் போன்ற வசதிகள் உள்ளன.

எக்ஸ்டிஏ வேரியண்டில் ஸ்டீல் சக்கரங்கள், 4 ஸ்பீக்கர் சவுண்டு சிஸ்டம் மற்றும் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. ப்ரீமியம் தரம் பெற்ற எக்ஸ்இசட்ஏ காரில் 4-ஸ்பீக்கர், 2 ட்வீட்டர் ஆடியோ அமைப்பு மற்றும் ஸ்போர்டியர் தரத்திற்கான 15இஞ்ச் அலாய் சக்கரங்கள் இடம்பெற்றுள்ளன.

டிகோர் காரில் கிடைக்கப்பெற்றுள்ள ஏடிஎம் கியர்பாக்ஸால் டிராஃபிக் நேரங்களில் மிகவும் உதவிக்கரமாக இருக்கும்.

இதன்காரணமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் டிகோர் காருக்கான விற்பனை திறன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தரம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த டாடா டிகோர் கார் இந்தியாவில் மாருதி டிசையர் காருக்கு போட்டியாக அமையும்.


Click it and Unblock the Notifications








