புதிய டீகோர் காருக்கான புக்கிங்குகளை பெறத் துவங்கியது டாடா நிறுவனம்

Written By:

டாடா மோட்டார்சின் புதிய வடிவ மொழியான இம்பேக்ட் டிசைன் கொண்டு தயாரிக்கப்பட்ட டீகோர் கார் அடுத்த வாரம் அறிமுகமாக உள்ளது. டாடாவின் டியாகோ ஹேட்ச்பேக் காரை அடிப்படையாகக் கொண்ட புதிய டாடா டீகோர் காம்பாக்ட் செடன் காராகும். இந்த காருக்கான புக்கிங்குக்ளை தற்போது டாடா நிறுவனம் பெறத் துவங்கியுள்ளது.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

புதிய டாடா டிகோர் கார் வரும் மார்ச் 29ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள டாடா டீலர்களிடம் இக்காருக்கான புக்கிங் தற்போது ட்தொடங்கியுள்ளது. 5,000 ரூபாய் செலுத்தி புதிய டிகோர் காரை புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

புதிய ஸ்டைலில் கார்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என எண்ணிய டாடா மோட்டார்ஸ், இம்பேக்ட் டிசைன் வடிவத்தை உருவாக்கியது. இந்த புதிய டிசைனில் உருவாக்கப்பட்ட டாடா டியாகோ ஹேட்ச்பேக் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கார் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

கவர்ந்திழுக்கும் வகையில் புதிய டிசைன் அமைந்துள்ளது. டியாகோ காரை விடவும் டியாகோவின் வீல் பேஸ் 50 மிமீ அதிகமாக உள்ளது. உட்புறத்திலும் அதிக இடவசதி

கொண்டதாக உள்ளது டாடா டிகோர்.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

டாடா டிகோரில் கருப்பு வண்ண டேஷ்போர்ட் உள்ளது. மேலும், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இதில் யூஎஸ்பி, பிளூடூத் கனெக்டிவிட்டியுடன் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ட்போன் அடிப்படையிலான நேவிகேசன் வசதியும் உள்ளது. கூடுதலாக ஆடியோ கண்ட்ரோல்கள் ஸ்டீரிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

ரியர் பார்க்கிங் சென்சார், கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், குறைவான எரிபொருள் எச்சரிக்கை, எரிபொருள் அளவினை பொருத்து எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என அறிந்துகொள்ளும் வசதி, டில்ட் ஸ்டீரிங், ஆட்டோ டவுன் பவர் விண்டோ போன்ற கூடுதல் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

இதில் டூயல் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் கண்ட்ரோல்டு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், செண்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

காம்பேக்ட் செடனான டிகோர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடலில் 15 இஞ்ச் அலாய் வீல்கள் மற்றும் டீசல் மாடலில் 14 இஞ்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

டிகோர் பெட்ரோல் வேரியண்டில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 84 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதே போல டீசல் வேரியண்டில் 1.05 லிட்டர் ரெவொரார்க் டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 69 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இரண்டிலுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

டாடா டிகோர் காருக்கான புக்கிங் தொடங்கியது

டாடா டிகோர் கார் ரூ.4.2 லட்சம் முதல் 6.5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மாருதி சுசுகி ஸ்விப்ட் டிசைர் மற்றும் ஹுண்டாய் எக்ஸ்செண்ட் கார்களுக்கு போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

புதிய டாடா டீகோர் காம்பாக்ட் செடன் காரின் படங்களை இங்கு காணுங்கள்:

English summary
tata tigor bookings started by tata motors, read in tamil

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark