டாடா டீகோர் மின்சார கார் உற்பத்தியை ரத்தன் டாடா துவக்கி வைத்தார்!

Written By:

பேட்டரியில் இயங்கும் டாடா டீகோர் மின்சார காரின் உற்பத்தியை டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மற்றும் தற்போதைய டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.

 டாடா டீகோர் மின்சார கார் உற்பத்தி துவங்கியது!

குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து வந்த முதல் டாடா டீகோர் மின்சார காரில் டாடா மோட்டார்ஸ் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குனர் குவென்ட்டர் பட்செக் ஓட்டி வந்தார். டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனைப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் பக்கத்தில் அமர்ந்து வந்தார். இந்த கார்களை டாடா ஆலை பணியாளர்கள் இருபுறமும் நின்று கைதட்டி வரவேற்றனர்.

 டாடா டீகோர் மின்சார கார் உற்பத்தி துவங்கியது!

முதல்கட்டமாக 250 டாடா டீகோர் மின்சார கார்கள் மத்திய அரசுத் துறை பயன்பாடுகளுக்காக EECL நிறுவனத்திடம் டெலிவிரி கொடுக்கப்பட உள்ளன. பின்னர், படிப்படியாக 10,000 கார்களையும் டெலிவிரி செய்ய திட்டமிட்டுள்ளது.

 டாடா டீகோர் மின்சார கார் உற்பத்தி துவங்கியது!

அரசுத் துறை ஒப்பந்தத்தின்படி டாடா டீகோர் மின்சார கார்கள் டெலிவிரி கொடுக்கும் பணிகள் நிறைவடைந்தவுடன், இந்த கார்கள் தனிநபர் மார்க்கெட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

 டாடா டீகோர் மின்சார கார் உற்பத்தி துவங்கியது!

டாடா டீகோர் மின்சார கார்களில் ஏசி 3 பேஸ் மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. டீகோர் மின்சார கார் மணிக்கு 55 கிமீ வேகத்தில் பயணிக்கும்போது அதிகபட்சமாக, 40 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும்போது அதிகபட்சமாக 16 பிஎச்பி பவரை அளிக்கும்.

Recommended Video - Watch Now!
[Tamil] Tata Tiago XTA AMT Variant Launched In India - DriveSpark
 டாடா டீகோர் மின்சார கார் உற்பத்தி துவங்கியது!

அராய் அமைப்பு 30 நிமிடங்கள் நடத்திய மின்மோட்டார் சோதனையின்போது அதிகபட்சமாக 40 பிஎச்பி பவரை அளிக்கிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று தெரிகிறது. இதுவரை பயண தூரம் குறித்த முறையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

 டாடா டீகோர் மின்சார கார் உற்பத்தி துவங்கியது!

இந்த கார் 0 -97 கிமீ வேகத்தை 11 வினாடிகளில் எட்டும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 135 கிமீ வேகம் வரை செல்லும்.

மேலும்... #டாடா #tata
English summary
Tata Tigor EV rolled out from Sanand plant.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark