விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

Written By:

டாடாவின் டியாகோ ஹேட்ச்பேக் காரை அடிப்படையாகக் கொண்ட புதிய டாடா டிகோர் காம்பாக்ட் செடன் கார், டாடா மோட்டார்சின் புதிய வடிவ மொழியான இம்பேக்ட் டிசைன் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். புதிய இம்பேக்ட் டிசைனில் டியாகோ, ஹெக்ஸா கார்களுக்கு அடுத்ததாக இந்த கார் வெளிவந்துள்ளது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

கைட்5 என அழைக்கப்பட்ட மாடலின் புதிய பெயரே டிகோர் ஆகும். டியாகோ கார் போன்றே முன்புற வடிவமைப்பு கொண்ட டிகோரில் சில குறிப்பிடத்தக்க கவர்ச்சிகரமான அம்சங்களும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

டிகோரில் கருப்பு ஷேடில் ப்ரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ஃபாக் லைட்டுகள், எலெட்ரிக் அட்ஜஸ்டபிள் எல்ஈடி இண்டிகேட்டர்களுடன் கூடிய வெளிப்புற ரியர் வியூ மிர்ரர்கள், ஸ்டைலிஷான பின்புற விளக்குகளுடன், பின்பக்க ரூஃபில் ஸ்டாப் லைட்டும் உள்ளது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

காம்பேக்ட் செடனான டிகோர் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் மாடலில் 15 இஞ்ச் அலாய் வீல்கள் மற்றும் டீசல் மாடலில் 14 இஞ்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

உட்புறத்தில் அதிக இடவசதி கொண்டதாக இருக்கும் டாடா டிகோரில் கருப்பு வண்ண டேஷ்போர்ட் உள்ளது. மேலும், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய இன்ஃபோடெய்ன்மெண்ட் சிஸ்டம் உள்ளது. இதில் யூஎஸ்பி, பிளூடூத் கனெக்டிவிட்டியுடன் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்ட்போன் அடிப்படையிலான நேவிகேசன் வசதியும் உள்ளது. கூடுதலாக ஆடியோ கண்ட்ரோல்கள் ஸ்டீரிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

ரியர் பார்க்கிங் சென்சார், கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர், குறைவான எரிபொருள் எச்சரிக்கை, எரிபொருள் அளவினை பொருத்து எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என அறிந்துகொள்ளும் வசதி, டில்ட் ஸ்டீரிங், ஆட்டோ டவுன் பவர் விண்டோ போன்ற கூடுதல் சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

டாடா டிகோர் முன்பக்க டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்க டிரம் பிரேக்குகளும் கொண்டுள்ளது. இதில் டூயல் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் கண்ட்ரோல்டு ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், செண்ட்ரல் லாக்கிங், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ லாக் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

டாடா டிகோர் பெட்ரோல் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 83 பிஹச்பி ஆற்றலையும் 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

டீசல் மாடல் டிகோரில், 3 சிலிண்டர்கள் கொண்ட ரெவோடார்க் 1.05 லிட்டர் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 69 பிஹச்பி ஆற்றலையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. சிட்டி மற்றும் இகோ என இரண்டு டிரைவிங் ஆப்ஷன்கள் தரப்படுகிறது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

புதிய டாடா டிகோர் கார் 3992 மிமீ நீளமும், 1677 மிமீ அகலமும், 1537 மிமீ உயரமும் கொண்டது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ ஆகவும், வீல் பேஸ் 2450 மிமீ ஆகவும் உள்ளது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

தற்சமயம் விற்பனையில் உள்ள காம்பேக்ட் ரக செடான் மாடலில் குறைந்த ஆரம்ப விலை கொண்ட மாடலாக வரவுள்ள டிகோர் விலை ரூ.4.60 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

புதிய டிகோர் காரை வரும் மார்ச் 29ஆம் தேதி டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இக்காருக்கான புக்கிங் தொடங்கிவிட்டதாக தெரிகிறது.

 அறிமுகமாகவுள்ள டாடா டிகோர் கார் பற்றிய முழு விவரம்

புதிய காம்பேக்ட் செடனான டிகோர் கார் மாருதி சுசுகியின் ஸ்விப்ட் டிசைர், ஃபோர்டு ஆஸ்பயர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஹுண்டாய் எக்ஸ்செண்ட் கார்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாசகர்கள் படித்துவரும் மேலும் சில சுவாரஸ்யமான செய்திகள்...

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ் காரான புதிய ஐ8 காரின் படங்களை காணலாம்..

English summary
The Tata Tigor features projector headlamps and LED tail lamps. Tigor comes with two engine options - 1.2 petrol and 1.05 diesel.
Story first published: Saturday, March 18, 2017, 16:45 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos