டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

Written By:

வரும் 29ந் தேதி புதிய டாடா டீகோர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. காம்பேக்ட் செடான் கார் செக்மென்ட்டில் புதிய வரவாக களமிறங்க இருக்கும் புதிய டாடா டீகோர் கார் வடிவமைப்பு, வசதிகள், விலை என அனைத்திலும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

இதனால், இந்த கார் மீது அதிக எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியாக, நாடு முழுவதும் உள்ள டாடா டீலர்ஷிப்புகளுக்கு டெஸ்ட் டிரைவ் டீகோர் கார்கள் வந்துள்ளன.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

பெங்களூரில் உள்ள டாடா டீலர்களிலும் புதிய டீகோர் கார் வந்து சேர்ந்துள்ளன. அவ்வாறு, டீலரின் யார்டு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய டாடா டீகோர் கார் ஒன்றை எமது வாசகர் விக்கி ஹன்ட்டர் படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளார்.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

எனவே, இந்த காரை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட டாடா டீலர்களை தொடர்பு கொண்டு டீகோர் காரை டெஸ்ட் டிரைவ் செய்வதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

புதிய டாடா டீகோர் கார் ஸ்டைல்பேக் என்ற புதிய டிசைன் தாத்பரியத்தில் குறிப்பிடப்படுகிறது. பிற காம்பேக்ட் செடான் கார்களிலிருந்து வித்தியாசமும், தனித்துவம் கொண்ட டிசைனில் வருகிறது.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

புதிய டாடா டீகோர் கார் 84 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 69 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வருகிறது. இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு மாடல்களிலுமே ஈக்கோ மற்றும் சிட்டி என்ற இருவிதமான நிலைகளில் எஞ்சின் இயக்கத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவும் மிக விசேஷமான தொழில்நுட்பமாக குறிப்பிடலாம்.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

ஹார்மன் நிறுவனம் தயாரித்து கொடுத்திருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், டர்ன் பை டர்ன் நேவிகேஷன் வசதி, க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி போன்ற பல வசதிகள் டாப் வேரியண்ட்டில் இருக்கிறது.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

புதிய டாடா டீகோர் காரில் 419 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி இருக்கிறது. காம்பேக்ட் செடான் கார்களில் மிக அதிக பூட்ரூம் கொள்திறன் கொண்ட மாடலாகவும் வருகிறது.

டீலர்ஷிப்புகளுக்கு வந்தது புதிய டாடா டீகோர் கார்!

புதிய டாடா டீகோர் கார் ரூ.4.20 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையை சரியாக நிர்ணயித்துவிட்டால், காம்பேக்ட் செடான் கார் மார்க்கெட்டில் புதிய டாடா டீகோர் கார் நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது.

Photo Credit: Vicky Hunter

புதிய ஹோண்டா சிவிக் காரின் படங்கள்!

English summary
Tata Tigor Spotted at dealer yard.
Story first published: Wednesday, March 22, 2017, 12:22 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark