டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

By Saravana Rajan

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வை அளிக்கும் விதத்தில், டாடா டீகோர் காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

டாடா டீகோர் XM என்ற பெயரில் இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள எக்ஸ்இ மற்றும் எக்ஸ்டி வேரியண்ட்டுகளுக்கு இடையிலான விலையில் இந்த புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

டாடா டீகோர் எக்ஸ்எம் வேரியண்ட்டில் 9 முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

மேனுவல் சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ், வேகத்தை உணர்ந்து கதவுகள் பூட்டிக் கொள்ளும் வசதி, இரவில் பார்க்கிங் செய்த பின்னர் சற்று நேரம் வெளிச்சம் தந்து அணையும் ஃபாலோ மீ ஹெட்லைட் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

எரிபொருள் அளவை காட்டும் எல்இடி ஃப்யூவல் கேஜ், முழுவதும் ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஃபுல் வீல் கவர்கள் போன்ற வசதிகள் இந்த வேரியண்ட்டில் இடம்பெற்று இருக்கிறது.

 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

புதிய டாடா டீகோர் எக்ஸ்எம் வேரியண்ட்டில் ஹார்மன் நிறுவனத்தின் இன்ஃபோடெயினமென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த சாதனத்தில் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டமும் உண்டு.

 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

புதிய டாடா டீகோர் காரின் எக்ஸ்எம் வேரியண்ட் காப்பர் டாஸில், எஸ்ப்ரெஸ்ஸா பிரவுன், பியர்ல்சென்ட் ஒயிட், பிளாட்டினம் சில்வர், ஸ்ட்ரைக்கர் புளூ மற்றும் பெர்ரி ரெட் உள்ளிட்ட வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

டாடா டீகோர் காரின் எக்ஸ்எம் வேரியண்ட் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இருக்கிறது.

 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

அதேநேரத்தில், புதிய டாடா டீகோர் எக்ஸ்எம் வேரியண்ட் 5 மேனுவல் கியர்பாக்ஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்காது.

 டாடா டீகோர் காரின் புதிய மத்திய தர வேரியண்ட் அறிமுகம் - முழு விபரம்!

டாடா டீகோர் காரின் பெட்ரோல் எக்ஸ்எம் வேரியண்ட் ரூ.4.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், டீசல் மாடலின் எக்ஸ்எம் வேரியண்ட் ரூ.5.80 லட்சம் விலையிலும் கிடைக்கும். வரும் 15ந் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து டாடா டீலர்ஷிப்புகளிலும் டாடா டீகோர் காரின் இந்த புதிய எக்ஸ்எம் வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கும்.

English summary
Tata Motors has launched a new variant of its compact sedan, the Tigor, named as the Tigor XM. The Tigor XM is priced at Rs 4.99 lakh for the petrol version and the diesel variant carries a price tag of Rs 5.80 lakh. All prices are ex-showroom (Delhi).
Story first published: Sunday, September 10, 2017, 7:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X