’நியூ-ஜென் கார்கள் தயாரிப்பு’ ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட டாடா மற்றும் வோக்ஸ்வேன்..!!

Written By:

கார் தயாரிப்பில் ஜாம்பவான்களான டாடா மோட்டார்ஸ், ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனங்கள் கடந்த மே மாதத்தில் ஏற்படுத்திக்கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நிறுத்திக்கொள்ளும் முடிவில் உள்ளன.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

கார் தயாரிப்பு வளர்ச்சிக்கான நீண்ட கால கூட்டணியை ஏற்படுத்திக்கொள்ள வோக்ஸ்வேகன், ஸ்கோடா டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடந்த மே மாதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமைத்துக்கொண்டன.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

இந்த ஒப்பந்தத்தில், டாடாவின் மேம்படுத்தப்பட்ட மாடுலர் பிளாட்ஃபார்ம் மற்றும் எஞ்சின் அசெம்பிளி முறையில் புதிய வடிவமைப்பைக் கொண்ட வோக்ஸ்வேகனின் MQB-A தொழில்நுட்பம் போன்றவற்றில் கார்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

மேலும், மேம்படுத்தப்பட்ட மாடுலர் பிளாட்ஃபார்மில் (AMP) தயாரிக்கப்படும் கார்கள் அதிகளவில் செலவுகளை ஏற்படுத்தும் என ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் நிறுவனம் கருதுகிறது.

AMP மூலம் கார்களை உருவாக்க சுமார் 140 மில்லியன் யூரோக்கள் அதாவது ரூ.1000 கோடி வரை செலவாகும் என அந்த நிறுவனங்கள் காரணம் தெரிவித்துள்ளன.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

இதனால் ஸ்கோடாவில் பணிபுரியும் பல தலைமை பொறியாளர்கள், இந்தியாவில் MQB-A பிளாட்ஃபாரமில் கார்களை தயாரிப்பது மிகப்பெரிய கடினம் என தெரிவிக்கின்றனர்.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

மேலும் அதிகசெலவு செய்தாலும் இந்திய சந்தையில் லாபத்தை பெற முடியுமா என்ற எண்ணத்தில் MQB-A பிளாட்ஃபாரத்தில் இருந்து வோக்ஸ்வேகனும் பின்வாங்குகிறது.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

பல செலவுகளை குறைத்துக்கொண்டு, வோக்ஸ்வேகனின் டிகுவான், ஸ்கோடாவின் ஆக்டோவியா மற்றும் சூப்பர்ப் போன்ற கார்கள் MQB-A பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டன.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

MQB-A பிளாட்ஃபாரத்தால் வருவாய் இழப்பு ஏற்படும் என்ற வாய்ப்பு உள்ளதால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை ஆராய்ந்து வருகின்றன.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

மேலும் இந்த முறையில் தயாரிக்கப்படும் கார்களின் அனைத்து தயாரிப்பு பணிகளையும் இந்தியாவில் மேற்கொள்ளவும் திட்டமிட்டு வருகின்றன. இதனால் எம்.கியூ.பி-ல் கார் தயாரிக்கும் செலவுகள் குறையும்.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

ஏற்கனவே இந்த கூட்டணியை குறித்த நம்பகத்தன்மை பெரியளவில் ஆட்டோமொபைல் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இருந்தாலும் தற்போது டாடா வோக்ஸ்வேகன் செய்துள்ள இந்த பிரேக் அப் அதிகாரப்பூர்வமாக்க அந்நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

டாடா, வோக்ஸ்வேகன் கூட்டணி முறிந்தது..!!

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் அடுத்த தலைமுறைக்கான MQB-A பிளாட்ஃபாரத்தில் கார்கள் தயாரிப்பது பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்தன.

இதன்மூலம் சர்வதேச தரத்திலான கார்கள் இந்திய சந்தைக்கு ஏற்றவாறான சூழ்நிலையோடு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. தற்போது அது கேள்விக்குறி ஆகியுள்ளது.

English summary
Memorandum of Understanding signed by Tata Motors, Volkswagen and Skoda Might Be Called Off. Click for Details...
Story first published: Thursday, June 29, 2017, 11:04 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos