விரைவில் விற்பனைக்கு வரும் புதிய ஹூண்டாய் வெர்னா கார் பற்றிய 10 முக்கிய விஷயங்கள்!

விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

இந்தியாவின் மிட்சைஸ் செடான் கார் ரகத்தில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்குரிய மாடல் ஹூணடாய் வெர்னா. குறிப்பாக, வெர்னா காரின் டிசைன் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆனால், ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ் கார்கள் கொடுத்த நெருக்கடியால் இப்போது மார்க்கெட்டில் பின்தங்கி இருக்கிறது.

இந்த நிலையில், போட்டியாளர்களை ஒரு கை பார்க்கும் விதத்தில் கூடுதல் சிறப்பம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் மாறுதல்களுடன் புதிய ஹூண்டாய் வெர்னா கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. புதிய ஹூண்டாய் வெர்னா காரில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் சிறப்புகள் மற்றும் மாற்றங்களை இந்த செய்தியில் காணலாம்.

Recommended Video

New Mercedes E-Class Edition E India Launch, Specs, Features - DriveSpark
பரிமாணம்

பரிமாணம்

புதிய ஹூண்டாய் வெர்னா கார் தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட வடிவத்தில் சற்று பெரிதாக மாற்றம் கண்டிருக்கிறது.

புதிய ஹூண்டாய் வெர்னா கார் நீளத்தில் 70 மிமீ வரையிலும், அகலத்தில் 29 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. வீல் பேஸ் 10 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், உட்புற இடவசதி சிறப்பாக மேம்பட்டு இருக்கும். அதேநேரத்தில் உயரத்தில் மாற்றம் இல்லை.

டிசைன்

டிசைன்

ஹூண்டாய் எலான்ட்ரா காரின் டிசைன் தாத்பரியங்கள் அதிக அளவில் புதிய ஹூண்டாய் வெர்னா காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

முன்புற க்ரில் அமைப்பும், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டரும் ஹூண்டாய் எலான்ட்ரா காரின் டிசைனை நினைவூட்டுகின்றன. முகப்பு க்ரில் பிரம்மாண்டமாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது.

 புதிய ஹூண்டாய் வெர்னா கார் பற்றிய 10 முக்கிய சிறப்பம்சங்கள்!

பக்கவாட்டில் தாழ்வான கூரை அமைப்பு பின்புற பூட் ரூமுடன் வெகு நேர்த்தியாக இணைக்கப்பட்டு இருக்கிறது. புதிய அலாய் வீல்களும் ஹூண்டாய் வெர்னாவுக்கு சிறப்பு சேர்க்கின்றன.

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி இண்டிகேட்டர்கள், எல்இடி டெயில் லைட்டுகள் மற்றும் 17 இன்ச் அலாய் வீல்களுடன் புதிய வெர்னா கார் வருகிறது.

 புதிய ஹூண்டாய் வெர்னா கார் பற்றிய 10 முக்கிய சிறப்பம்சங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் வென்டிலேட்டேட் இருக்கைகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் இந்த செக்மென்ட்டில் சிறப்பான விஷயமாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படும்.

இன்டீரியர்

இன்டீரியர்

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் இன்டீரியர் முற்றிலும் புதிதாக இருக்கும். ஐரோப்பிய கார்களை போன்று ஓட்டுனருக்கு இயக்குவதற்கு தோதுவான விதத்தில், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை கொடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம்போல் இன்டீரியர் பாகங்களின் தரமும் சிறப்பாக இருக்கும்.

 புதிய ஹூண்டாய் வெர்னா கார் பற்றிய 10 முக்கிய சிறப்பம்சங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரில் 7 இன்ச் டச்ஸ்கிரீனுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே சாஃப்ட்வேர்களை இந்த சிஸ்டம் சப்போர்ட் செய்யும். விலை குறைவான வேரியண்ட்டுகளில் 5 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

 புதிய ஹூண்டாய் வெர்னா கார் பற்றிய 10 முக்கிய சிறப்பம்சங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா காரின் டாப் வேரியண்ட் மாடலில் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.

அதேபோன்று, விலை குறைவான மாடல்களில் இரண்டு ஏர்பேக்குகள் மற்றும் இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

தற்போது பயன்படுத்தப்படும் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினிலும், டீசல் மாடல்களில் பயன்படுத்தப்படும் 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அதேநேரத்தில், இந்த எஞ்சின்கள் கூடுதல் பவரை வெளிப்படுத்தும் திறனும் மேம்படுத்தப்பட்டு இருப்பதாக ஹூண்டாய் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 புதிய ஹூண்டாய் வெர்னா கார் பற்றிய 10 முக்கிய சிறப்பம்சங்கள்!

புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா கார் சீனா மற்றும் ரஷ்யாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. அடுத்து, இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

அடுத்த மாதம் 22ந் தேதி புதிய ஹூண்டாய் வெர்னா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

 புதிய ஹூண்டாய் வெர்னா கார் பற்றிய 10 முக்கிய சிறப்பம்சங்கள்!

புதிய ஹூண்டாய் வெர்னா கார் ரூ.9 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பு மற்றும் வசதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் இந்த புதிய வெர்னா கார் நிச்சயம் ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் கார்களுக்கு தக்க போட்டியை தரும் என நம்பலாம்.

Most Read Articles
English summary
Ten Important things about 2017 Hyundai Verna.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X