ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் கவனம் ஈர்க்கும் ஸ்போர்ட்ஸ் கார்கள்

Written By: Azhagar

சிறந்த செயல்திறன், மிரட்டும் தோற்றம், சுண்டியிழுக்கும் வசீகரம் மற்றும் அசாத்திய திறன் இதெல்லாம் தான் ஒரு ஸ்போர்ட்ஸ் காருக்கு இருக்கவேண்டிய தகுதி. இவையனைத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இருகக்கூடிய கார்களை இனி வரிசையாக பார்ப்போம்

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

ஆங்கில வரிசை எழுத்துப்படி மட்டுமல்லாமல், கார் உற்பத்தியிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ள நிறுவனம் ஆடி. இந்தாண்டிற்கான கண்காட்சியில் அனைவரையும் ஈர்த்திருக்கும் ஸ்போர்ட்ஸ் கார் ஆடி நிறுவனத்தின் புதிய தயரிப்பான RS5 கூப்.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

கார் ஓட்டுநர் எந்த புகாரையும் கூறமுடியாத வகையில் ஆடி RS5 கூப் காரின் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ட்வின் - டர்போ எஞ்சினில் வடிவமைக்கப்பட்டு இருக்கும் இந்த கார் 450பிஎச்பி பவர், 430என்எம் டார்க் திறனை வழங்கும். 100 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் ஒரு மணி நேரம் மூன்று விநாடிகளில் சென்றடைய முடியும்.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

பார்க்கவும், பயணிக்கவும் உடனே வசியப்படுத்தும் இந்த காரில் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங், ட்ரேக்கிங் கண்ட்ரோல் உட்பட கவனிக்கத்தக்க பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. விரைவில் விற்பனைக்கு வரவுள்ள இந்த காரின் விலை 54000 அமெரிக்க டாலர்கள் என ஆடி நிறுவனத்தின் அதிகார்ப்பூர்வ வலைதளம் தெரிவிக்கிறது. கிட்டத்தட்ட சிவப்பு, க்ரே, கருப்பு உட்பட 8 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ள இந்த ஆடி RS5 கூப் காரை இந்தியர்களும் புக்கிங் செய்ய காத்திருக்கின்றனர்.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

காரின் எக்ஸாட் அமைப்பு செயல் படும்போது, எஞ்சன் சத்தம் அதிகரித்து கேட்கும், இதற்காகவே ஃபோர்ட் ஃபியஸ்டா ST மாடல் அதிக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ஃபியாஸ்டாவின் அப்டேட் வெர்ஷனாக வரவுள்ள இந்த காரின் பிரேக்கிங் அமைப்புகள் மெக்லேரனின் 650S மாடல் காருடன் பொருந்திபோவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

60 புதிய மாடல் கார்களை வெளியிட திட்டமிட்டு வரும் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் முதல் வெளியீடாக விற்பனைக்கு வருகிறது ஏர்டியன். 2008ம் ஆண்டில் அந்நிறுவனம் வெளியிட்ட பாஸாட் சிசி மாடலுக்கான மாற்றாக இந்த காரை வோக்ஸ்வேகன் வடிவமைத்துள்ளது.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

தொடுதிரையுடன் இன்ஃபோடெய்ன்மெண்ட் அமைப்பு, அடியோ சென்ஸிபிலிட்டி ஆகியவற்றுடன் வோக்ஸ்வேகன் ஏர்டியன் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜூனில் இந்த காரை வோக்ஸ்வேகன் சில ஐரோப்பிய நாடுகளில் கொண்டுவருகிறது, அதற்கு பிறகே அமெரிக்கா, ஆசிய நாடுகளில் எர்டியன் காரை விற்பனை செய்ய வோக்ஸ்வேகன் முடிவு செய்திருக்கிறது.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் ஒரு காரை பார்க்க கூட்டம் சேர்ந்தது என்றால் அது லெம்போகர்னி ஹுரெகேன் பிர்ஃபாமெனேட் காருக்குத்தான். முன்னர் லெம்போகர்னி வெளியிட்ட ஹுரெகேன் காரின் அப்டேட் வெர்ஷனாக வெளிவந்திருக்கும் இது ஒரு நுட்பமான சாதனையும் படைத்துள்ளது.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

88 பவுண்டுகளுள்ள லெம்போகர்னி ஹுரெகேன் பிர்ஃபாமெனேட் கார், ஜெனிவாவில் இடம்பெற்றுள்ள கார்களிலேயே குறைந்த நேரத்தில் துரிதமாக தயாரிக்கப்பட்ட ஒரே காராகும். 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார் 640 பிஎச்பி பவரையும், 600 என்எம் டார்க் திறனையும் கொடுக்கவல்லது. மேலும் லெம்போகர்னி நிறுவனத்தின் வரலாற்றிலேயே 10 சிலிண்டரைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கார் என்ற பெருமையையும்

ஹுரெகேன் பிர்ஃபாமெனேட் கார் பெற்றுள்ளது.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

ஜெனிவா கண்காட்சியில் சிறந்த ஸ்போர்ட்ஸ் கார் பட்டியலில் கான்சப்ட்டுன் தயாரிக்கப்பட்டு, நமது பட்டியலில் இடம்பெறிருக்கும் ஒரே கார் மெர்சடிஸ்- ஏஎம்ஜி ஜிடி. தோற்றத்தில் ஆடி RS5 கூப் காருக்கு சவால் விடும் இது போர்சேவின் பெனமெர்ரா காருக்கு போட்டியாக இருக்கும் என ஆட்டோமொபைல் உலகம் கருத்து தெரிவிக்கிறது.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

மேலும் மெர்சடிஸ்- ஏஎம்ஜி ஜிடி ஒரு தனித்துவமான வடிவமைப்புடனும் தயாரிக்கப்பட்டுள்ளது. 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்சின் கொண்ட இதில், உயர் செயல்திறனின் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் இலகுரக பேட்டரி இடம்பெற்றிருந்தாலும் அது 805 பிஎச்பி பவரை வழங்கும் அளவிற்கான திறன் கொண்டது.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

ஒரு காலத்தில் ஸ்போர்ட்ஸ் கார்களை மற்ற நிறுவனங்கள் ஃபெராரியை பார்த்து தயாரித்த காலம் போய், இன்று ஃபெராரிக்கு சவால் விடும் வகையில் பிரபல நிறுவனங்கள் ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரித்து வெளியிட்டு வருகின்றன. இதற்கு இணையான நெருக்கடியை மற்ற நிறுவனங்களுக்கு ஃபெராரி உருவாக்கி உள்ளதா என்பது தான் இன்றைய ஆட்டோ மொபைல் உலகின் எதிர்பார்ப்பு.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

ஆனால் அந்த எதிர்பார்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு இந்த ஆண்டு மார்கெட்டில் ஃபெராரி தன்னை மீண்டும் நிரூபித்துள்ளது. அந்நிறுவனத்தால், ஸ்போர்ட்ஸ் கார் உலகில் 2012ம் ஆண்டு வெளியிடப்பட்ட F12 berlinettaவின் வாரிசாக ஃபெராரி இந்த ஆண்டு ஜெனிவாவில் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியிருக்கும் கார் Ferrari 812 Superfast.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

LED முகப்பு விளக்குகள், சுழலலும் பின் விளக்குகள், சீறும் ஏர் வெண்ட்ஸ் என அட்டகாசமாக தயாராகியுள்ள ஃபாராரி 812 Superfast கார் பிரம்ப்பின் உச்சக்கட்டம். காண்போரை பரவசித்து வரும் இந்த கார் இந்தாண்டு வெறும் காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகள் அடுத்தாண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2018 இறுதியில் தான் ஃபாராரி 812 Superfast விற்பனைக்கே வருகிறது. அதுவரை நாம் இந்தியாவில் சில இடங்களில் ஒட்டிக்கொண்டுயிருக்கும் F12 berlinettaவை பார்த்து மனதை ஆற்றுப்படுத்திக் கொள்ளவேண்டும்.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

சில கார்கள் காண்போருக்கு பிரம்பு ஏற்படுத்துகிறது என்றால், ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் சில கார்கள் வசீகரிக்கிறது, அப்படி ஒரு வசீகராமன தோற்றத்தோடு அனைவரும் பார்க்கும் காராக உள்ளது பானகி ஹுயரா ரோட்ஸ்டர்.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

இந்த கார் எப்போது அறிமுகமாகும் என கடந்த 2 ஆண்டுகளாக ஆட்டோமொபைல் உலகம் தவமிருக்கிறது. 6 லிட்டர் அளவு கொண்ட மெர்சடிஸ்-பென்ஸ் ஏஎம்ஜி வி12 எஞ்சின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

அழகான, திருத்தமான, ஸ்டைலான இந்த கார் ஆண்களை விட பெண்கள் விரும்புவார்கள் என்பது கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

மேற்கூறிய அனைத்து கார்களுக்கும் மணிமகுடமாக இந்தாண்டு ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் கார் மெக்லேரன் நிறுவனத்தின் 720S. 4.0 ட்வின் டர்போ எஞ்சினில் 720 பிஎச்பி பவரை வழங்கும் இது முற்றிலும் ஏய்ரோடைனமிக்ஸ் வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

இந்தாண்டிற்கான கண்காட்சியில் 720S மற்றும் 720S விலாசிட்டி என இரண்டு கார்களை மெக்லேரன் அறிமுகப்படுத்தியிருந்தாலும், மெக்லேரன் நிச்சயம் 720S காரின் மூலமே வருமானம் ஈட்டும் என்பது ஆட்டோமொபைல் உலகின் எண்ணமாக உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் முதலில் விற்பனை காணவுள்ள 720S கார் இந்தியாவில் 2.50 கோடிக்கு விற்பனை செய்யப்படாலம் என கணக்கிடப்பட்டுள்ளது.

 மிரட்சி, புதுமை, வலிமை எது பெஸ்ட்?

2017 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது பெருமைபிகு படைப்புகளை அறிமுகப்படுத்தியிருந்தாலும், அவற்றில் எதெல்லாம் விற்பனைக்கு தயாராகவுள்ளது என்பது கேள்விக்குறிதான். இருந்தாலும் இந்தாண்டு கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் கார்கள் பல பெரும்பாலும், 2018 இறுதிக்குள் உலகில் அனைத்து நாடுகளிலும் விற்பனை செய்யப்படலாம்.

மெக்லேரனின் நிறுவனத்தின் புதிய 720S மாடல் காரின் புகைப்பட தொகுப்புகளை கீழே காணுங்கள்

English summary
The Geneva Motor Show is where all the exotic car companies debut their newest supercars. This upscale show is a mecca for horsepower and crazy designs
Story first published: Friday, March 10, 2017, 19:20 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark