ஏப்ரல் விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் மாடல்கள்!

Written By:

உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழக்க செய்யப்பட்டதற்கு பின்னர் மந்த நிலை காணப்பட்ட கார் மார்க்கெட் இப்போது புது எழுச்சி கண்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கார் விற்பனை சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த மாதத்தில் எதிர்பார்த்ததைவிட 15 சதவீத வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த நிலையில், கடந்த மாதம் பல ஆச்சரியமான மாற்றங்களுடன் முதல் 10 இடங்களை பிடித்த கார் மாடல்களின் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

 10. மாருதி செலிரியோ

10. மாருதி செலிரியோ

கடந்த மாதம் 10வது இடத்தில் மாருதி செலிரியோ கார் இடம்பிடித்தது. கடந்த மாதத்தில் 8,425 மாருதி செலிரியோ கார்கள் விற்பனையாகி உள்ளன. பட்ஜெட் விலையில் சிறந்த ஹேட்ச்பேக் மாடலாகவும், சிறிய குடும்பத்தினருக்கு ஏற்ற காராகவும் விளங்குகிறது.

 09. மாருதி டிசையர்

09. மாருதி டிசையர்

விற்பனையில் கொடி கட்டி பறந்து வரும் மாருதி டிசையர் கார் விற்பனை கடந்த மாதம் 8,797 கார்கள் என்ற அளவுக்கு தடாலடியாக குறைந்தது. புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் வருவதே காரணமாகி உள்ளது. பல புதிய சிறப்பம்சங்களுடன் வரும் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் வந்த பின்னர், விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும்.

 08. ஹூண்டாய் க்ரெட்டா

08. ஹூண்டாய் க்ரெட்டா

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி மிகச்சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகிறது. கடந்த மாதம் 9,213 க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் விற்பனைக்கு டிசைன் மிக முக்கிய காரணம்.

07. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

07. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவியின் விற்பனையும் மிகச் சிறப்பான நிலையில் இறுக்கிறது. கடந்த மாதத்தில் 10,653 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கின்றன. மிகச் சரியான விலையில் கிடைக்கும் மாருதி எஸ்யூவி என்பதே இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

06. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

06. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

கடந்த மாதத்தில் 6வது இடத்தில் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் உள்ளது. ஏப்ரலில் 12,001 க்ராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளன. பிரிமியம் அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடலாக இருப்பதே இதற்கு வலுவான சந்தையை பெற்றுத் தந்துள்ளது.

 05. ஹூண்டாய் எலைட் ஐ20

05. ஹூண்டாய் எலைட் ஐ20

ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு மிகச் சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த மாதத்தில் 12,668 எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகி உள்ளன.டிசைன்தான் இந்த காரின் விற்பனைக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

04. மாருதி வேகன் ஆர்

04. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதம் மாருதி வேகன் ஆர் கார் மிகச் சிறப்பான விற்பனையை பதிவு செய்து மீண்டும் 4ம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 16,348 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி உள்ளன. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற மிகச் சிறந்த பட்ஜெட் கார் மாடல்.

 03. மாருதி பெலினோ

03. மாருதி பெலினோ

மாருதி பெலினோ கார் விற்பனை தடாலடியாக உயர பறக்கிறது. கடந்த மாதம் 17,530 பெலினோ கார்கள் விற்பனையாகி உள்ளன. அருமையான டிசைன், வசதிகள் இந்த காருக்கு மிகச் சிறப்பான விற்பனையை பெற்றுத் தந்து வருகிறது.

 02. மாருதி ஆல்ட்டோ

02. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதம் மாருதி ஆல்ட்டோ கார் விற்பனை மிகச் சிறப்பாக அமைந்தது. ஏப்ரலில் 22,549 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. வழக்கம்போல் மிகச் சிறப்பான விற்பனை என்றாலும், தனது ஆஸ்தான முதலிடத்தை இழந்தது. முதல் கார் வாங்குவோரை அனைத்து விதத்திலும் திருப்தி படுத்தி வருகிறது மாருதி ஆல்ட்டோ கார்.

 01. மாருதி ஸ்விஃப்ட்

01. மாருதி ஸ்விஃப்ட்

பெலினோ வரவால் சோர்ந்து போய் கிடந்த மாருதி ஸ்விஃப்ட் விற்பனை, கடந்த மாதம் தடாலடியாக உயர்ந்தது. கடந்த மாதத்தில் 23,802 மாருதி ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி அசத்தி உள்ளது. துள்ளலான டிசைன் மூலமாக இளமை குறையாமல் வலம் வருகிறது. மிக நம்பகமான கார் மாடலாகவும் பெயர் பெற்றுவிட்டது.

 ஏப்ரல் விற்பனையில் இந்தியாவின் டாப் 10 கார் மாடல்கள்!

கடந்த மாதம் டாப் 10 பட்டியலில் மாருதி, ஹூண்டாய் கார் நிறுவனங்களின் மாடல்கள் மட்டுமே இடம்பிடிக்க முடிந்தது. பிற நிறுவனங்களால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்துள்ளது. வரும் மாதங்களில் இந்த பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Top 10 Best Selling Cars In April 2017.
Story first published: Saturday, May 6, 2017, 12:10 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark