விற்பனையில் டாப் -10 கார்கள்... ஜோடி போட்டு சோலியை முடித்த மாருதி, ஹூண்டாய்!

Written By:

கடந்த மாதம் விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த மாடல்களில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மாருதி, ஹூண்டாய் என்ற இரு மாபெரும் ஜாம்பவான்களும் பிற நிறுவனங்களுக்கு எந்தளவு சிம்ம சொப்பனமாக விளங்குகின்றன என்பதை இந்த பட்டியல் காட்டுகிறது.

ஆம், கடந்த மாத விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த மாடல்களில் மாருதி, ஹூண்டாய் தயாரிப்புகளே இடம்பிடித்தன. பிற நிறுவனங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அந்த டாப் 10 கார்களை இந்த செய்தியில் வழங்குகிறோம். இது கார் வாங்கும் உங்களது முடிவை கூட மாற்றி போடும் வாய்ப்புள்ளது.

10. மாருதி எர்டிகா

10. மாருதி எர்டிகா

டாப் 20 இடங்களில் இருந்து வந்த மாருதி எர்டிகா அதிரடியாக டாப் 10 இடங்களுக்குள் வந்து அசத்தி இருக்கிறது. கடந்த மாதம் 7,121 எர்டிகா கார்கள் விற்பனையாகி உள்ளன. 7 பேர் செல்வதற்கான சிறந்த எம்பிவி கார் மாடல் என்பதுடன், நம்பகத்தன்மை, பராமரிப்பு செலவீனம், விலை என அனைத்திலும் சிறந்த மாடலாக விளங்குகிறது.

09. ஹூண்டாய் க்ரெட்டா

09. ஹூண்டாய் க்ரெட்டா

கடந்த மாதம் 10 வது இடத்தில் ஹூண்டாய் க்ரெட்டா கார் பெற்றிருக்கிறது. கடந்த மாதத்தில் 8,377 க்ரெட்டா கார்கள் விற்பனையாகி உள்ளது. இந்த காரின் டிசைன், வசதிகள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து வருகிறது.

 08. ஹூண்டாய் எலைட் ஐ20

08. ஹூண்டாய் எலைட் ஐ20

கடந்த மாதம் 8வது இடத்தில் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பிடித்தது. கடந்த மாதத்தில் 9,257 எலைட் ஐ20 கார்கள் விற்பனையாகி உள்ளன. அசத்தும் டிசைன், வசதிகள், ஹூண்டாய் கார்களின் நம்பகத்தன்மை உள்ளிட்டவை இந்த காரின் மார்க்கெட்டை நிலையாக கொண்டு செல்கிறது.

07. மாருதி டிசையர்

07. மாருதி டிசையர்

கடந்த மாதம் மாருதி டிசையர் கார் 7வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 9,413 டிசையர் கார்கள் விற்பனையாகி உள்ளன. புதிய தலைமுறை டிசையர் கார் வருகையால் விற்பனை மந்தமடைந்தது. வரும் மாதங்களில் மீண்டும் தனது ஆஸ்தான இரண்டாவது இடத்திற்கோ அல்லது முதல் இடத்திற்கோ முன்னேறிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

06. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

06. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா

கடந்த மாதத்தில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா விற்பனையில் அசத்தி இருக்கிறது. கடந்த மாதத்தில் 12,984 மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்கள் விற்பனையாகி உள்ளன. அதிக மைலேஜ், சரியான விலை, சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் என்ற மாருதி பிராண்டின் மீதான பிரியத்திற்கு கிடைத்த வெகுமதியாகவே இதனை பார்க்க முடியும்.

05. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

05. ஹூண்டாய் க்ராண்ட் ஐ10

கடந்த மாதத்தில் 5வது இடத்தை ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 கார் பிடித்தது. கடந்த மாதம் 12,984 க்ராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளது. டிசைன், விலை, வசதிகள் என அனைத்திலும் சிறந்த ஹேட்ச்பேக் கார் மாடல்.

 04. மாருதி பெலினோ

04. மாருதி பெலினோ

கடந்த மாதம் மாருதி பெலினோ கார் 4வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 14,629 மாருதி பெலினோ கார்கள் விற்பனையாகி உள்ளன. அருமையான டிசைன், இடவசதி, வசதிகள், சரியான விலை போன்றவை இந்த காருக்கு அதிக வாடிக்கையாளர் வட்டத்தை பெற்றுத் தந்து வருகிறது.

 03. மாருதி வேகன் ஆர்

03. மாருதி வேகன் ஆர்

கடந்த மாதத்தில் மாருதி வேகன் ஆர் கார் 3வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 15,471 வேகன் ஆர் கார்கள் விற்பனையாகி உள்ளன. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற மிகச் சிறந்த பட்ஜெட் கார் என்பது இதன் மிகப்பெரிய பலம்.

 02. மாருதி ஸ்விஃப்ட்

02. மாருதி ஸ்விஃப்ட்

எத்துனை புதிய மாடல்கள் வந்தாலும் விற்பனையில் அசத்தி வருகிறது மாருதி ஸ்விஃப்ட் கார். கடந்த மாதத்தில் 16,532 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைன், மைலேஜ், செயல்திறன் போன்ற பல சிறப்பம்சங்களை பெற்ற கார் மாடல்.

 01. மாருதி ஆல்ட்டோ

01. மாருதி ஆல்ட்டோ

கடந்த மாதமும் தனது ஆஸ்தானமான நம்பர் 1 இடத்தை தக்க வைத்தது மாருதி ஆல்ட்டோ. கடந்த மாதத்தில் 23,618 ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. மிக குறைவான விலையில் நம்பகமான கார் என்பதே இதன் மிகப்பெரிய பலம்.

விற்பனையில் டாப் 10 கார்கள்!

கடந்த மாத பட்டியலில் மாருதி, ஹூண்டாய் தயாரிப்புகள் மட்டுமே இடம்பெற்றன. வரும் மாதங்களில் மாருதி டிசையர் காரின் விற்பனை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதால் மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

அத்துடன், பிற நிறுவனங்களும் இந்த இரு நிறுவனங்களின் ஆதிக்கத்தை சவாலாக ஏற்று தங்களது தயாரிப்புகளின் விற்பனையை அதிகரிக்க சிறப்பு சலுகைகளை அளித்து விற்பனையை ஊக்கப்படுத்த முயற்சிக்கலாம். எனவே, வரும் மாத பட்டியலில் மாற்றங்கள் ஏற்படுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Top 10 Selling Cars in India May 2017.
Story first published: Saturday, June 10, 2017, 16:39 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark