வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 10 கார்கள்!

Written By:

திரைப்படங்கள், இணையதளங்கள் அல்லது சாலைகளில் சில ஸ்போர்ட்ஸ் கார்களை பார்க்கும்போது, என்ன காருடா இது? வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த காரை ஓட்டிப் பார்த்துவிட வேண்டும், என்ற உந்துதலை ஏற்படுத்தும். டிசைன், பவர்ஃபுல் எஞ்சின் போன்றவை அனைவரின் மனதிலும் ஆர்வத்தையும், உந்துதலையும் ஏற்படுத்தும். அவ்வாறு, வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டிப் பார்த்துவிட வேண்டும் என தூண்டும் 10 கார்களின் பட்டியலை இந்த செய்தியில் வழங்கியிருக்கிறோம்.

01. ஏரியல் ஆட்டம்

01. ஏரியல் ஆட்டம்

வித்தியாசத்தை விரும்பும் கார் ஆர்வலர்களுக்கான மிகச் சரியான தேர்வு. வழக்கமான கார்கள் போன்று இல்லாமல் மிக வித்தியாசமான கட்டமைப்பு கொண்டது. இங்கிலாந்து நாட்டின் சோமர்செட் என்ற இடத்தை சேர்ந்த ஏரியல் மோட்டார் நிறுவனத்தின் திறந்த கூரை அமைப்புடைய ரோட்ஸ்டெர் மாடல்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 310 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மேலும், 2.2 லிட்டர், 3.0 லிட்டர், 2.4 லிட்டர் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் ஆக்சிலரேசனை பல்வேறு ஆட்டோமெபைல் பத்திரிக்கைகள் வியந்து பாராட்டி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில், வேடிக்கையான விஷயம் என்னவெனில், இந்த கார் மாடல் கோவென்ட்ரி பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர்களுக்கான கார் வடிவமைப்பு திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

02. ஹென்னிஸி வெனோம் ஜிடி

02. ஹென்னிஸி வெனோம் ஜிடி

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஹென்னிஸி பெர்ஃபார்மென்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்தின் தயாரிப்பு. கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. புகாட்டி வேரான் காரை குறித்து வைத்து களமிறக்கப்பட்ட உலகின் அதிவேக கார் மாடல்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

கடந்த 2013ம் ஆண்டு உலகின் அதிவேக ஆக்சிலரேஷன் கொண்ட கார் மாடல் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. அதாவது, 0- 300 கிமீ வேகத்தை சராசரியாக 13,63 வினாடிகளில் இந்த கார் எட்டிவிடுவதாக கூறி கின்னஸ் சாதனை புத்தகம் உலகின் சிறந்த ஆக்சிலரேஷன் கொண்ட தயாரிப்பு நிலை கார் மாடலாக அறிவித்தது.

 03. புகாட்டி வேரான்

03. புகாட்டி வேரான்

உலகின் அதிவேக கார் மாடல் என்ற பெருமைக்குரியது. ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் செயல்படும் பிரான்ஸ் நாட்டின் புகாட்டி நிறுவனத்தின் தயாரிப்பு. உலகில் சில நூறு கோடீஸ்வரர்களால் மட்டுமே வாங்கி வைத்து தீணி போடக்கூடிய விலையையும், பராமரிப்பு செலவையும் கொண்ட கார் மாடல்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

புகாட்டி வேரான் காரின் சூப்பர்ஸ்போர்ட் என்ற மாடல் மணிக்கு 431 கிமீ வேகத்தை தொட்டு உலகின் அதிவேக தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையை பெற்றது. இந்த சாதனையை இன்னமும் எந்த நிறுவனங்களாலும் உடைக்க முடியாமல் இருந்து வருகிறது. இந்த காரின் உற்பத்தி இலக்கு நிறைவு பெற்றதையடுத்து, இந்த காரின் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தற்போது புகாட்டி சிரோன் கார் விற்பனையில் இருக்கிறது.

 04. அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் கார்பன்

04. அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் கார்பன்

ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அஸ்டன் மார்ட்டின் கார்களை பார்த்தவுடன், இந்த பிராண்டு கார்களை ஓட்ட வேண்டும் என்ற உந்துதல் எழுவது இயல்பு. தோற்றத்திலும், செயல்திறனிலும் மிகச் சிறப்பான கார் மாடல்களை அஸ்டன் மார்ட்டின் தயாரித்து வருகிறது.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

அதில், அஸ்டன் மார்ட்டின் டிபிஎஸ் கார்கள் பலரையும் ஓட்டி பார்த்துவிட தூண்டும் வகையில் இருந்து வருகின்றன. இந்த காரில் இருக்கும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 510 எச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்தது. கட்டுக்கடங்கா ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போன்ற உணர்வை தரும்.

05. மெக்லாரன் ஸ்பைடர்

05. மெக்லாரன் ஸ்பைடர்

திறந்த கூரையுடன் கூடிய அதிவேக கார்களை ஓட்டுவது புதிய அனுபவத்தையும், பரவசத்தையும் ஏற்படுத்தும். அவ்வாறான கார்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாடல்களில் ஒன்றுதான் மெக்லாரன் ஸ்பைடர்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

இந்த கார்களில் இருக்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் 616 எச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் 2.50 லட்சம் டாலர் விலை மதிப்பு கொண்டது. ஓட்டத் தூண்டும் கார் மாடல்களில் முக்கியமானதாக இதனையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

06. கும்பெர்ட் அப்போலோ

06. கும்பெர்ட் அப்போலோ

ஜெர்மனியை சேர்ந்த கும்பெர்ட் ஸ்போர்ட்வேகன்மேனுஃபேக்சுரர் நிறுவனத்தின் தயாரிப்புதான் கும்பெர்ட் அப்போலோ. கடந்த 2005ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது. மேல் நோக்கி திறக்கும் கல்விங் ரக கதவுகள் பொருத்தப்பட்ட மாடல்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

இந்த காரில் 4.2 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் மூன்றுவிதமான பவரை வெளிப்படுத்தும் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டது. 0- 100 கிமீ வேகத்தை 3.1 வினாடிகளில் எட்டும் ஆற்றல் வாய்ந்த இந்த கார் மணிக்கு 360 கிமீ வேகம் வரை பறக்கும்.

 07. லம்போர்கினி அவேன்டேடார்

07. லம்போர்கினி அவேன்டேடார்

சூப்பர்கார் வாங்க விரும்புவோரின் முதல் சாய்ஸாக இருப்பது லம்போர்கினி பிராண்டு மாடல்கள்தான். அந்தளவுக்கு வடிவமைப்பிலும், செயல்திறனிலும் கோடீஸ்வர்களை சுண்டி இழுத்து வருகிறது இந்த கார்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

இந்த காரில் இருக்கும் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 700 எச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 225 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்தியர்கள் மட்டும் என்றில்லை, உலகில் உள்ள கார் ஆர்வலர்கள் எண்ணத்தில் ஒருமுறையாவது ஓட்டிவிட வேண்டும் என்ற பட்டியலில் இருக்கும் முதன்மையான மாடல்.

08. ஃபோர்டு மஸ்டாங்

08. ஃபோர்டு மஸ்டாங்

அமெரிக்காவின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் அம்சங்களுடன் வடிவமைக்கப்படும் மஸில் ரக ஸ்போர்ட்ஸ் கார் மாடல்தான் ஃபோர்டு மஸ்டாங். நெடிய பாரம்பரியத்துடன் இந்தியா உள்ளிட்ட பல டுகளில் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டது.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

வெளிநாடுகளில் மூன்றுவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்தியாவில் சக்திவாய்ந்த 5.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்ட மஸ்டாங் ஜிடி மாடலில் மட்டும் கிடைக்கிறது. இந்த எஞ்சின் 395 பிஎச்பி பவரையும், 542 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. வாழ்வில் ஒருமுறையாவது ஓட்டி பார்த்துவிட வேண்டும் என்ற பட்டியலில் இந்த காருக்கும் மிக முக்கிய இடம் உண்டு.

09. ஃபெராரி எஃப்40

09. ஃபெராரி எஃப்40

ஃபெராரி நிறுவனத்தின் தயாரிப்புகளிலேயே மிகச் சிறந்த மாடலாக பாராட்டப்படும் மாடல். கடந்த 1987ம் ஆண்டு முதல் 1992ம் ஆண்டு வரை உற்பத்தியில் இருந்தது.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

இந்த காரில் இருக்கும் 2.9 லிட்டர் எஞ்சின் 471 எச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்தது. ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கை உலகினர் பலரும் இந்த காரை ஓட்டிப் பார்த்து புகழ்ந்து தள்ளியுள்ளனர். எனவே, வாய்ப்பு இருந்தால் வாழ்வில் ஒருமுறையாவது இந்த காரையும் ஓட்டி பார்த்துவிட முயற்சிக்க வேண்டும்.

10. பகானி ஹூவைரா

10. பகானி ஹூவைரா

பகானி ஸோண்டா காருக்கு மாற்றாக வந்த மாடல். டாப் கியர் இதழுக்கு சொந்தமான டெஸ்ட் டிராக்கை அதிவேகத்தில் கடந்த தயாரிப்பு நிலை கார் மாடல் என்ற பெருமையும் இதற்கு உண்டு.2011ல் டாப் கியர் டெஸ்ட் டிராக்கை ஏரியல் ஆட்டம் வி8 கார் 1:15.1 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்திருந்த நிலையில், பகானி ஹூவைரா கார் 1:13.8 நிமிடத்தில் டெஸ்ட் டிராக்கை கடந்து சாதனை படைத்தது. மொத்தமாக 100 பகானி ஹூவைரா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

இந்த காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு போல்ட்- நட்டின் விலை 80 டாலர்களாம். காரில் இருக்கும் போல்ட்டுகளின் மதிப்பு மட்டும் 1.12 லட்சம் டாலர்களாம். மொத்தம் 1,400 போல்ட்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பகானி ஹூவைரா காரில் மெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்தின் இரட்டை டர்போசார்ஜர் கொண்ட 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது. அதிகபட்சமாக 720 பிஎச்பி பவரையும், 1,100 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்க்கத் தூண்டும் டாப் 9 கார்கள்!

0- 100 கிமீ வேகத்தை வெறும் 3.0 நொடிகளில் தொட்டுவிடும் இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 370 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது.இந்த காரில் இருக்கும் பெட்ரோல் டேங்க்கும் விசேஷமானது. ஆம், இந்த பெட்ரோல் டேங்க் குண்டு துளைக்காத விசேஷ அம்சம் கொண்டது. எனவே, கோடீஸ்வரர்கள் பயமில்லாமல் வெளியில் எடுத்துச் செல்ல முடியும். இதன் சிறப்பம்சங்களை பார்க்கும்போதே வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓட்டி பார்த்துவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

புதிய மெக்லாரன் பி1 ஜிடிஆர் சூப்பர் காரின் படங்கள்!

புதிய மெக்லாரன் பி ஜிடிஆர் சூப்பர் காரின் கண்குளிர கண்டு மகிழ கீழே உள்ள கேலரியை க்ளிக் செய்யுங்கள்.

English summary
Top 9 Super cars to drive before you die.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark