புதிய மாருதி டிசையர் காரில் கவரும் 12 முக்கிய விஷயங்கள்!

Written By:

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய தலைமுறை மாருதி டிசையர் கார் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், இந்த காரை வாங்குவதற்கு ஆவலோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்காக இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பகிர்ந்து கொள்கிறோம்.

 எடை குறைவு

எடை குறைவு

மாருதி பெலினோ கார் உருவாக்கப்பட்ட இலகு எடை கட்டமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனால், பழைய டிசையர் காரைவிட புதிய கார் 85 கிலோ எடை குறைவானதாக வந்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

விரைவில் இந்தியாவில் நடைமுறைக்கு வர இருக்கும் முன்புற கிராஷ் டெஸ்ட் சோதனையில் வெற்றிபெறுவதற்கான அதிக பாதுகாப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது. அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சைல்டு சீட் பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் சீட் மவுன்ட்டுகளுடன் வந்துள்ளது.

 வேரியண்ட்டுகள் விபரம்

வேரியண்ட்டுகள் விபரம்

இதுவரை மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இனி பெட்ரோல், டீசல் மாடல்கள் தலா 4 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். Lxi/Ldi, Vxi/Vdi,Zxi/Zdi ஆகிய வேரியண்ட்டுகள் தவிர்த்து அதிக வசதிகள் நிரம்பிய Zxi+/Zdi+ ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும்.

டிசைன்

டிசைன்

பழைய மாடலின் கூரை அமைப்பிலும், ஜன்னல் அமைப்பிலும் ஒரு சீரான தோற்றத்தை பெற்றிருக்கிறது. இதனால், முழுமையான செடான் கார் போன்ற தோற்றத்திற்கு மாறி இருக்கிறது. அதேபோன்று, முன்புற பானட் அமைப்பும், க்ரில் அமைப்பும் கூட சிறப்பானதாகவவே மாறி இருக்கிறது. ஹெட்லைட் டிசைனும் அழகு சேர்க்கிறது.

புரொஜெக்டர் ஹெட்லைட்

புரொஜெக்டர் ஹெட்லைட்

புதிய மாருதி டிசையர் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

புதிய மாருதி டிசையர் காரின் இன்டீரியரும் மாறி இருக்கிறது. கருப்பு மற்றும் பீஜ் வண்ண இன்டீரியர் தொடர்கிறது. ஏசி வென்ட்டுகள் டிசைன் மாறி இருக்கிறது. தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல் புதிது.

 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

பிரெஸ்ஸா மற்றும் பெலினோ கார்களில் இருக்கும் 7 இன்ச் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இப்போது டிசையர் காரிலும் இடம்பெற்றுள்ளது.ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட சாஃப்ட்வேர்களை சப்போர்ட் செய்யும் 7 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் டிசைன் உள்ளிட்டவை முக்கிய சிறப்பம்சங்களாக இடம்பெற்று இருக்கிறது.

 கூடுதல் வசதி

கூடுதல் வசதி

இப்போது பின் இருக்கை பயணிகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் கொடுக்கப்பட்டு இருப்பதும் கூடுதல் சிறப்பு. இது நிச்சயம் தொலைதூர பயணங்களின்போது மிகுந்த வசதியை தரும்.

பூட் ரூம் இடவசதி

பூட் ரூம் இடவசதி

இதுவரை 316 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இருந்தது. இது பெரும் குறையாக இருந்தது. இந்த நிலையில், புதிய மாருதி டிசையர் காரில் பூட் ரூம் இடவசதி 376 லிட்டர் கொள்திறன் கொண்டதாக மேம்பட்டு இருக்கிறது.

 ஏஎம்டி கியர்பாக்ஸ்

ஏஎம்டி கியர்பாக்ஸ்

புதிய டிசையர் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அனைத்து வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். தவிர, எல்எக்ஸ்ஐ மற்றும் எல்டிஐ ஆகிய பெட்ரோல், டீசல் வேரியண்ட்டுகள் தவிர்த்து, ஏனைய அனைத்து வேரியண்ட்டுகளிலும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ்[ஆட்டோமேட்டிக்] ஆப்ஷன் கிடைக்கும்.

 எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சினில் மாற்றங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த 83 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 75 பிஎச்பி பவரை வழங்க வல்ல 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும்.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

இதுவரை ஸ்விஃப்ட் டிசையர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இனி டிசையர் என்ற பெயரில் அழைக்கப்படும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

அடுத்த மாதம் 16ந் தேதி புதிய மாருதி டிசையர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

English summary
Top 12 new things in 2017 Maruti Suzuki Dzire.
Story first published: Tuesday, April 25, 2017, 12:44 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark