செப்டம்பர் மாத விற்பனையில் சக்கை போடு போட்ட எஸ்யூவி கார்கள்... முழு விவரம்..!!

செப்டம்பர் மாத விற்பனையில் சக்கை போடு போட்ட எஸ்யூவி கார்கள்... முழு விவரம்..!!

By Azhagar

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு எப்போதும் தனி இடம் தான். அதுவும் காம்பேக்ட் எஸ்யூவி-க்கள் என்றால் அதற்கான விற்பனை திறன் சற்று அதிகம்.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

உயரமான இருக்கை வசதி, எப்படிப்பட்ட சாலைகளிலும் பயணிக்கும் அசாத்திய திறன் போன்றவை எஸ்யூவி-க்களின் மீது ஒரு காதல் உணர்வை கொண்டு வந்துவிடும்.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னதாக ரெனால்ட் மற்றும் ஃபோர்டு காம்பேக்ட் எஸ்யூவி கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தின.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

பிறகு மாருதி சுசுகி விட்டாரா பிரிஸ்ஸா கார் வெளிவந்த பிற்பாடு காம்பேக்ட் எஸ்யூவிக்கான சந்தை இந்தியாவில் சூடு பிடிக்க தொடங்கியது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

இந்திய வாடிக்கையாளர்கள் எஸ்யூவி கார் பயன்பாட்டிற்கு மாறி வெகுகாலம் ஆகிறது. தற்போதைய இந்தியாவில் எஸ்யூவி கார்களில் சிறந்த செயல்பாட்டை தருபவைகள் எவை...? தொடர்ந்து பார்க்கலாம்.

மாருதி பிரிஸ்ஸா

மாருதி பிரிஸ்ஸா

செப்டம்பர் மாத முடிவில் சுமார் 13,628 அளவில் விற்பனை ஆகி, மாருதி பிரிஸ்ஸா கார் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டை விட இந்த காருக்கான தேவை வாடிக்கையாளர்களிடம் 9375 அளவில் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

[Tamil] Skoda kodiaq Launched In India - DriveSpark
அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

டீசல் மாடலில் மட்டுமே இந்த கார் கிடைக்கப்பெற்றாலும், இந்திய வாடிக்கையாளர்களுக்கு பிரிஸ்ஸாவின் வடிவமைப்பு மற்றும் விலை ஆகியவை கட்டுபடியாக உள்ளது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் கொண்ட விட்டாரா பிரிஸ்ஸா கார் 89 பிஎச்பி பவர் மற்றும் 200 என்.எம் டார்க் திறனை வழங்கும்.

5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ள இந்த மாடல் லிட்டருக்கு 24.3 கி.மீ மைலேஜ் வழங்கும் என மாருதி சுசுகி தெரிவிக்கிறது.

ஹூண்டாய் கிரெட்டா

ஹூண்டாய் கிரெட்டா

இந்தியாவில் முதன்மையாக விற்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது ஹூண்டாயின் கிரெட்டா கார்.

2016 செப்டம்பருடன் ஒப்பிடுகையில் இந்தாண்டில் கிரெட்டா கார் 9262 அளவில் இந்தியளவில் விற்பனை ஆகியுள்ளது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

தோதான வடிவமைப்புடனும், திருத்தமான தயாரிப்பு அமைப்பையும் பெற்றுள்ள கிரெட்டா மாடல், காம்பேக்ட் எஸ்யூவி என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

இந்தியாவில் வாடிக்கையாளர்களால் தொடர்ந்து வாங்கப்படும் மாடலாகவும், அதனால் விற்பனை திறனை அதிகம் பெற்ற மாடலாகவும் கிரெட்டா கார் உள்ளது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

கிரெட்டா காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் வேரியண்ட் கார் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

அதேபோல 1.6 லிட்டர் டீசல் திறன் மாடல் 6-ஸ்பீடு ஆட்டோமேடட் கியர்பாக்ஸ் தேவையை பெற்றுள்ளது.

மஹிந்திரா பொலரோ

மஹிந்திரா பொலரோ

மஹிந்திரா நிறுவனத்திற்கு இந்தியாவில் சிறந்த விற்பனை திறனை தரும் மாடலாக இன்னும் வலம் வருகிறது பொலரோ.

குறிப்பாக பொலரோ கார்கள் ஊரகப் பகுதிகளில் அதிக விற்பனை திறனை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

2016 செப்டம்பரில் 5,744 அளவில் விற்பனையான பொலரோ, 2017 செப்டம்பரில் 8930 என்ற அளவில் விற்பனை ஆகியுள்ளது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

மேலும் சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியை அதிகரிக்க, பொலரோ காரில் பவர்+ என்ற மாடலையும் மஹிந்திரா அறிமுகம் செய்துள்ளது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட பொலரோ பவர்+ காரின் சாதாரன மாடல் 2.5 லிட்டர் டீசன் எஞ்சினை பெற்றுள்ளது.

இந்த இரண்டு எஞ்சின்களுமே 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேவையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திராவிற்கு அதிக விற்பனை திறனை பெற்று தரும் மாடல் என்றால் அது ஸ்கார்பியோ தான். எஸ்யூவி மாடல்களின் அரசன் என்ற இதை சொல்லலாம்.

கடந்த மாதம் மட்டும் சுமார் 6260 அளவிலான ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

இந்த எண்ணிக்கையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனை ஆவது இதுதான் முதல் முறை என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

டாடா சாஃபாரிக்கு போட்டியாக மஹிந்திரா அறிமுகப்படுத்திய ஸ்கார்பியோ கார், இந்தியாவில் சிறந்த சந்தை நிலவரத்தை தொடர்ந்து பெற்று வருகிறது.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

2.5 லிட்டர் எம்2சிஆர்டிஇ டீசல் எஞ்சினை கொண்டு இந்த கார் 75 பிஎச்பி பவர் மற்றும் 180 என்.எம் டார்க் திறனை கொடுக்கும்.

அதிக விற்பனை திறன் பெற்ற எஸ்யூவி கார் இதுதான்..!!

இவற்றை தவிர 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் வேரியண்டிலும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார் விற்பனைக்கு உள்ளது. அதன்மூலம் அதிகப்பட்சமாக 120 பிஎச்பி பவர் மற்றும் 320 என்.எம் டார்க் திறன் கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 24, 2017, 8:30 [IST]
English summary
Read in Tamil: the top-selling SUVs in India for September 2017 with sales figures along with more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+