ஜிஎஸ்டி: சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைபிரிட் கார்களை மக்களால் இனி வாங்க இயலுமா?

ஜிஎஸ்டி: சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைபிரிட் கார்களை மக்களால் இனி வாங்க இயலுமா?

By Arun

நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஜூலை1 முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமலாக உள்ளது.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

ஜிஎஸ்டி அமலாவது ஆட்டோமொபைல் துறையில் சாதகம் மற்றும் பாதகம் என இரண்டையும் ஒருசேர தர உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது என்னவோ ஹைபிரிட் கார்களே. எந்த அளவுக்கு ஹைபிரிட் கார்களின் விலை ஏற்றம் இருக்கப்போகிறது என்பதற்கான ஒரு உதாரணத்தை இங்கு காணலாம்.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

ஹைபிரிட் கார்களை பொருத்த வரையில் 12 சதவீதமாக இருக்கும் தற்போதைய வரி ஜிஎஸ்டியில் 43 சதவீதமாக உயர உள்ளது. இதன் காரணமாக ஜிஎஸ்டிக்கு பிறகு ஹைபிரிட் கார்களின் விலை கனிசமாக உயர உள்ளது.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஹைபிரிட் கார்களுக்கு அரசு அளித்து வந்த ஃபேம் மாணியமும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த விலை ஏற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

இதன் காரணமாக ரூ.31.98 லட்சம் விலை கொண்ட கேம்ரி ஹைபிரிட் காரின் விலை 8 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் டொயோட்டா நிறுவனம் உயர்த்தும் என தகவல் வெளியாகியுள்ளது. இதே போல பிரையஸ் காரின் விலையும் மிக அதிக அளவில் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

ஜப்பானைச்சேர்ந்த டொயோட்டா நிறுவனம், இந்தியாவில் கேம்ரி மற்றும் பிரையஸ் என இரண்டு ஹைபிரிட் கார்களை சந்தைப்படுத்தியுள்ளது.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

டொயோட்டா கேம்ரி காரில் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைப்பு பெற்ற 2.5 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 202 பிஹச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இதில் சிவிடி கியர் பாக்ஸ் உள்ளது.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

மிகவும் குறைந்த வேகத்தில் செல்லும் போது மட்டுமே கேம்ரி ஹைபிரிட் கார் முழுமையான எலக்ட்ரிக் மோட்டாரின் சக்தியில் இயங்கும்.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

அதிக வேகத்தில் செல்லும் போது பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் என்ற கலவையில் இஞ்சின் இயங்குகிறது. மேலும் பிரேக் பயன்படுத்தும்போது இதன் பேட்டரி தானாகவே சார்ஜ் ஏற்றிக்கொள்ளும்.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

0 - 100 கிமீ வேகத்தை வெறும் 9.2 வினாடிகளில் இந்தக் கார் எட்டிப்பிடித்து விடுகிறது. இது லிட்டருக்கு 19.16 கிமீ மைலேஜ் தருவதாக டொயோட்டா நிறுவனம் கூறுகிறது.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

ஜிஎஸ்டி மூலமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைபிரிட் கார்கள் விலை ஏற இருக்கும் நிலையில், சொகுசுக் கார்களின் விலை குறைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டியால் விலை ஏறப்போகும் ஹைபிரிட் கார்கள்..!!

ஜிஎஸ்டி மூலமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த ஹைபிரிட் கார்கள் விலை ஏற இருக்கும் நிலையில், சொகுசுக் கார்களின் விலை குறைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Read in Tamil about hybrid cars to cost more post gst
Story first published: Thursday, June 29, 2017, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X