ஜிஎஸ்டி எதிரொலி: டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் விலை குறைப்பு..!!

Written By:

ஜிஎஸ்டி மசோதா அமலாவதை முன்னிட்டு கார் நிறுவனங்கள் போட்டி போட்டு விலை குறைப்பை அறிவித்து வருகின்றன.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

அந்த வகையில் தற்போது டொயோட்டா நிறுவனம் அதன் ஃபார்ச்சூனர் கார்களுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

ஜி.எஸ்.டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை வரும் ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமலாவதால் குறிப்பாக எஸ்யூவி மற்றும் பிரிமியம் கார் செக்மெண்டில் 12% அளவிற்கு விலை குறையும் நிலை உருவாகியுள்ளது

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

இதனை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை குறைப்பின் பலனை அளிக்கும் வகையில் ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் கார்/பைக் மாடல்களின் விலையில் அதிரடி சலுகைகளை அறிவித்து வருகின்றது

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ நிறுவனங்கள் அதன் சொகுசு கார்கள் மீதான விலை குறைப்பை ஏற்கெனவே நடைமுறைப்படுத்தி விட்டது. இதைத் தொடர்ந்து ஃபோர்டு நிறுவனம் அதன் ஈகோ ஸ்போர்ட், ஆஸ்பயர் மற்றும் ஃபிகோ மாடல்கள் விலையில் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை குறைத்தது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

இதே போல சமீபத்தில் டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்கு போட்டியான இசுசூ எம்யூஎக்ஸ் காருக்கு 1.5 லட்ச ரூபாய் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அறிமுகமானதில் இருந்தே பிரீமியம் எஸ்யூவி செக்மெண்டில் சிறந்து விளங்குகிறது. இதற்கு அடுத்த நிலையில் ஃபோர்டு எண்டேவர் கார் நீடிக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

ரூ.26.66 லட்சம் முதல் ரூ.28.35 லட்சம் வரை விலை கொண்ட ஃபார்ச்சூனர் கார்களின் விலையில் தற்போது அதிரடியாக 1.20 லட்ச ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கடந்த ஆண்டில் புதிய தோற்றத்தில் மேம்படுத்தப்பட்டது. இது பெட்ரோல் மற்றும்

டீசல் என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

இதில் 2.8 லிட்டர் டீசல் இஞ்சின் உள்ளது. இது அதிகபட்சமாக 177 பிஹச்பி ஆற்றலையும், 450 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

இதே போல இதன் 2.7 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 166 பிஹச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க்கையும் வழங்கவல்லது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

டீசல் வேரியண்ட் காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது, 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆஃப்ஷனலாக கிடைக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

இதே போல பெட்ரோல் வேரியண்ட் காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது, 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் ஆஃப்ஷனலாக கிடைக்கிறது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் விலை அதிரடியாக குறைப்பு..!!

டொயோட்டா ஃபார்சூனர் 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் என இரண்டு டிரைவிங் ஆஃப்ஷன்களிலும் கிடைக்கிறது. ஆனால் பெட்ரோல் வேரியண்டில் 4 வீல் டிரைவ் ஆஃப்ஷன் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Read in Tamil about toyota reduces fortuner suv price by 1.20 lakh rupees
Story first published: Sunday, June 4, 2017, 9:32 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark