கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்!

Written By:

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் எம்பிவி செக்மென்ட்டில் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட இன்னோவா க்ரிஸ்ட்டார டூரிங் ஸ்போர்ட் மாடலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் இன்னோவா பிராண்டை அடுத்த லெவலுக்கு எடுத்துச் சென்றது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்!

இந்த நிலையில், இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் மாடலில் மேலும் சில கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டொயோட்டா நிறுவனம் அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. ஆனால், அதன் இணையதளத்தில் இந்த புதிய அம்சங்கள் குறித்து தகவல்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் மாடலில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் அம்சங்கள் குறித்த விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் காரின் டீசல் மாடலில் புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ரூ.19.60 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

Recommended Video - Watch Now!
Tata Tiago XTA AMT Variant Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்!

அதேநேரத்தில், பெட்ரோல் மாடல் தொடர்ந்து 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் தொடர்ந்து கிடைக்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் டீசல் மாடலில் அறிமுகமாகி இருக்கும் புதிய 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் டொயோட்டா நிறுவனத்தின் இன்டெலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. இது 2.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷனில் கிடைக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 148 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்!

டீசல் மாடலில் புதிய மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, டூரிங் ஸ்போர்ட் மாடலில் 17 அங்குல கருப்பு வண்ண அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே, 16 அங்குல அலாய் வீல்களுடன் கிடைத்தது. க்ரோம் கைப்பிடிகள், எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட புதிய ரூஃப் ஸ்பாய்லர் மற்றும் ரியர் டீஃபாகர் உள்ளிட்டவையும் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்!

இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட் மாடலின் உட்புறத்தில் மாற்றங்கள் தென்படவில்லை. ஆனால், இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இப்போது நேவிகேஷன் வசதியுடன் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா டூரிங் ஸ்போர்ட்!

அடுத்து, ஸ்டார்ட்/ ஸ்டாப் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. குறிப்பிட்ட வினாடிகளுக்கு மேல் கார் நகராமல் நிற்கும்போது எஞ்சின் தானாக ஆஃப் ஆகிவிடும். க்ளட்ச் பெடலை மிதித்தால் மீண்டும் உயிர் பெற்றுவிடும். இதன்மூலமாக, கூடுதல் எரிபொருள் சிக்கனம் பெற வழி கிடைக்கும்.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Now, the Toyota Innova Crysta Touring Sport diesel model with the new 6-speed manual gearbox is priced at Rs 19.60 lakh (Ex-showroom Delhi).
Story first published: Friday, September 29, 2017, 11:42 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark