பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ரிலீசாகிறது புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி!

Written By:

புதிய தலைமுறை டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் குறித்த கூடுதல் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ரிலீசாகிறது புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி!

தற்போது விற்பனையில் இருக்கும் லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி 2007ல் விற்பனைக்கு வந்தது. சில மாறுதல்களுடன் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், 10 ஆண்டுகள் கழித்து முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக வெளிவர இருக்கிறது லேண்ட் க்ரூஸர்.

பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ரிலீசாகிறது புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி!

புதிய மாடல் குறித்த தகவல்கள் கசிந்து விடாமல் ரகசியம் காத்து வருகிறது டொயோட்டா. புதிய மாடல் பாடி ஆன் ஃப்ரேம் கட்டமைப்பில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலமாக, உலகின் பிரம்மாண்ட எஸ்யூவி மாடல்களிலிருந்து இதன் கட்டமைப்பு வேறுபடுகிறது.

பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ரிலீசாகிறது புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி!

இந்த பிரம்மாண்ட எஸ்யூவியில் தினசரி பயன்பாட்டிற்கும், ஆஃப்ரோடு சாகசங்களுக்கும் ஏற்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். பாதுகாப்பு அம்சங்களுக்கும் குறைவில்லாமல் வரும்.

Recommended Video - Watch Now!
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ரிலீசாகிறது புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி!

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவியின் முகப்பு முன்பைவிட மிக மிரட்டலாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும். தோற்றத்திலும் அதே கம்பீரத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ரிலீசாகிறது புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி!

அடுத்த ஆண்டு இந்த புதிய டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் ரிலீசாகிறது புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி!

புதிய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி தவிர்த்து, யாரிஸ் ஜிஆர்எம்என் என்ற அதி செயல்திறன் மிக்க ஹேட்ச்பேக் கார் மாடலையும் டொயோட்டா கார் நிறுவனம் பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

மேலும்... #டொயோட்டா #toyota
English summary
Toyota it would seem has been listening and has now confirmed that the next-generation of the Land Cruiser SUV will make its debut at the 2017 Frankfurt Motor Show which begins in less than a fortnight in Germany.
Story first published: Saturday, September 2, 2017, 15:52 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark