புதிய பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டை அறிமுகப்படுத்துகிறது டொயோட்டா!
புதிய பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டை டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. அதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.
அடுத்த மாதம் புதிய பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டை டொயோட்டா கார் குழுமம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சி ஒன்றில் இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் கார் பிராண்டை டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம் சாதாரண கார்களின் அதிக திறன் வாய்ந்த மாடல்களை எம் பிராண்டில் விற்பனை செய்வது போன்றே, இந்த புதிய பிராண்டை டொயோட்டா அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிகிறது.

பெர்ஃபார்மென்ஸ் கார்களின் விற்பனையில் மீண்டும் தீவிரமாக களமிறங்கும் பொருட்டு, இந்த புதிய பிராண்டை டொயோட்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. சாதாரண ரக கார்களின் அதி சக்திவாய்ந்த மாடல்கள் இந்த புதிய பிராண்டில் வெளிவரும் என்பது இப்போதைய கணிப்பு.
Recommended Video


கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் யாரிஸ் காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடலை டொயோட்டா காட்சிக்கு வைத்திருந்தது. புதிய பிராண்டில் வெளிவர இருக்கும் டொயோட்டா கார்களின் முன்னோட்டமாகவே அந்த யாரிஸ் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன் பார்க்கப்படுகிறது.

லீமான்ஸ் கார் பந்தயத்தில் டொயோட்டா நிறுவனத்துக்கு கார்களை ட்யூனிங் செய்து தரும் காஸு ரேஸிங் நிறுவனம்தான் இந்த யாரிஸ் பெர்ஃபார்மென்ஸ் கார் மாடலையும் மாற்றங்களை செய்து கொடுத்திருந்தது. எனவே, இதே பாணியில் புதிய டொயோட்டா கார்களின் பெர்ஃபார்மென்ஸ் வெர்ஷன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேநேரத்தில், ஜப்பானில் மட்டுமே இந்த பிராண்டு கார்கள் விற்பனை செய்யப்பட்டால் அது நிச்சயம் ஏமாற்றம் தரும் விஷயமாக இருக்கும். சர்வதேச அளவில் செல்லும்போது நிச்சயம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற கார்களை இந்தியாவில் களமிறக்க நிச்சயம் கால அவகாசம் எடுத்துக் கொள்ளும் டொயோட்டா.

ஏனெனில், இந்தியாவில் இதுபோன்ற கார்களுக்கான மார்க்கெட் இன்னும் பக்குவப்பட்ட நிலையை எட்டவில்லை. அதேநேரத்தில், மெல்ல இந்த ரக கார்களுக்கான வரவேற்பு அதிகரித்து வருவதால், நிச்சயம் வெளிநாடுகளை பரிசீலிக்கும்போது அதில் இந்தியாவுக்கும் டொயோட்டா இடம் தரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








