மின்சார கார் தயாரிப்பிற்காக புதிய கூட்டணி அமைத்த சுஸுகி மற்றும் டொயோட்டா..!!
மின்சார கார் தயாரிப்பிற்காக புதிய கூட்டணி அமைத்த சுஸுகி மற்றும் டொயோட்டா..!!
எதிர்காலத்தில் வாகன உலகம் அனைத்தும் மின்சார ஆற்றலுக்கு மாறும் என்பது முன்னரே எழுதப்பட்டு விட்டாலும், சில நிறுவனங்கள் அந்த துறையில் கால்பதிக்க தயக்கம் காட்டுகின்றன.

இந்நிலையில் வாகன உலகில் முன்னணி நிறுவனங்களான சுஸுகி மற்றும் டொயோட்டா, மின்சார கார்களை தயாரிக்க புதிய கூட்டணி அமைத்துள்ளன.

ஜப்பானை சேர்ந்த இந்த இரு நிறுவனங்களும், இணைந்து இந்தியாவில் 2020ம் ஆண்டில் மின்சாரத்தால் இயங்கும் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன.

வணிகளவிலான பங்குகள் மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காத, பாதுகாப்பான மற்றும் பல்வேறு தேவைகளைக் கொண்ட மின்சார ரக கார்கள் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்குகின்றன.

சுஸுகி, டொயோட்டா நிறுவனங்களின் இந்த கூட்டணி மூலம், மின்சார கார்களை இந்தியாவிலேயே சுசுகி தயாரிக்கும், அதற்கான பாகங்களை டொயோட்டா வழங்கும்.

இதற்கிடையில் இந்த சுஸுகி மற்றும் டொயோட்டா, இந்தியாவில் மின்சார கார்களுக்கான கட்டமைப்பை அறியும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
Recommended Video


பேட்டரி சார்ஜிங் நிலையங்கள், அதற்குரிய தொழில்நுட்பங்கள் மற்றும் மின்சார கார்களுக்கான பேட்டரி தேவை ஆகியவை இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படவுள்ளன.

2030ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அனைத்து வாகன தேவைகளும் மின்சார ஆற்றலுக்கு மாற்றப்பட வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

அதற்கான திட்டங்களும் சமீபகாலங்களில் பெரியளவில் வலுபெற்று வருகின்றன. இந்த உந்துதல் காரணமாகவே சுஸுகி மற்றும் டொயோட்டோவின் கூட்டணி அமைந்துள்ளது.

டொயோட்டா வழங்கும் தொழில்நுட்ப உதவிகள் மூலம், இந்தியாவில் சுஸுகி மின்சார கார்களை தயாரிக்கும். பின்னர், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கார்கள் பங்காக டொயோட்டோவிற்கு சுஸுகி வழங்கும்.

குஜராத்தில் சுஸுகி புதியதாக கார் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இங்கு மின்சார கார்களுக்கான லித்தியம் அயன் பேட்டரியை தயாரிக்கும் மற்றொரும் ஆலையையும் சுஸுகி நிறுவுகிறது.

கார் பேட்டரிகள் மட்டுமின்றி, மின்சார மோட்டாருக்கான உதிரிபாகங்களும் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கீழ் சுஸுகி உள்நாட்டிலேயே தயாரிக்கும்.

லித்தியம் அயன் பேட்டரி மற்றும் மின்சார மோட்டாருக்கான உதிரிபாகங்கள் ஆகியவை குஜராத்தில் உள்ள ஆலையில் தயாரிக்கப்படுவதால், சுஸுகி மற்றும் டொயோட்டா கூட்டணியில் உருவாகும் மின்சார கார்களும் அங்கேயே தயாரிக்கப்படும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications








