மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியை பென்ஸ் ஜி வேகன் போன்று மாற்றிய கோவை நிறுவனம்!

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் போன்று மாற்றி இருக்கிறது கோவையை சேர்ந்த நிறுவனம். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் சொகுசு எஸ்யூவி போன்று மாற்றி அசத்தி இருக்கிறது கோவை சேர்ந்த ஜீப் ஸ்டூடியோ நிறுவனம். இதன் விபரங்களையும், படங்களையும் இந்த செய்தியில் காணலாம்.

பென்ஸ் ஜி வேகன் அவதாரம் எடுத்த பொலிரோ!

கோவையை சேர்ந்த ஜீப் ஸ்டூடியோ நிறுவனம் எஸ்யூவிகளை மாடிஃபிகேஷன் செய்து தருவதில் கைதேர்ந்து விளங்குகிறது. இந்த நிறுவனம் தற்போது மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியை மெர்சிடிஸ் ஜி வேகன் சொகுசு எஸ்யூவி போன்று மாற்றி இருக்கிறது.

Recommended Video

Bangalore City Police Use A Road Roller To Crush Loud Exhausts
பென்ஸ் ஜி வேகன் அவதாரம் எடுத்த பொலிரோ!

வாடிக்கையாளர் ஒருவரின் மஹிந்திரா பொலிரோ ஜீப்பின் வெளிப்புறத்தை அச்சு அசலாக மெர்சிடிஸ் ஜி வேகன் போன்று மாற்றி இருக்கிறது ஜீப் ஸ்டூடியோ.

பென்ஸ் ஜி வேகன் அவதாரம் எடுத்த பொலிரோ!

மஹிந்திரா பொலிரோ காரின் சேஸியில் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் போன்று உருவாக்கப்பட்ட பாடி பேனல்களை பொருத்தி இருக்கின்றனர். சிலர் வெறும் லோகோ மற்றும் முகப்பில் மட்டும் செய்து தருவார்கள்.

பென்ஸ் ஜி வேகன் அவதாரம் எடுத்த பொலிரோ!

ஆனால், ஜீப் ஸ்டூடியோ நிறுவனத்தால் முழுமையாக பாடி பேனல்களை மாற்றம் செய்து தருவதால், இதற்கான கால அவகாசமும், விலையும் சற்று கூடுதலாக இருக்கிறது.

பென்ஸ் ஜி வேகன் அவதாரம் எடுத்த பொலிரோ!

பொலிரோ எஸ்யூவியை வாங்கி கொடுத்து ரூ.7.35 லட்சம் கூடுதல் தொகையை கொடுத்தால், உங்களது மஹிந்திரா பொலிரோ எஸ்யூவி இதுபோன்று மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு எஸ்யூவியாக உயிர் பெற்றுவிடும்.

பென்ஸ் ஜி வேகன் அவதாரம் எடுத்த பொலிரோ!

இந்த மாற்றங்களை செய்து தருவதற்கு 3 முதல் 4 மாதங்கள் ஆகும் என்று ஜீப் ஸ்டூடியோ நிறுவனம் தெரிவிக்கிறது. இன்டீரியரை கஸ்டமைஸ் செய்து தருவதற்கு கூடுதலாக ரூ.30,000 முதல் ரூ.50,000 வரை செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பென்ஸ் ஜி வேகன் அவதாரம் எடுத்த பொலிரோ!

மஹிந்திரா பொலிரோ தவிர்த்து, ஃபோர்ஸ் குர்கா எஸ்யூவியையும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி வேகன் போன்று மாற்றி தர முடியும் என்று ஜீப் ஸ்டூடியோ நிறுவனத்தால் எம்மிடம் தெரிவித்தனர்.

பென்ஸ் ஜி வேகன் அவதாரம் எடுத்த பொலிரோ!

மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியை மிக நேர்த்தியான முறையில் இதுபோன்று மாற்றம் செய்து கொள்வதற்கு 9843128999 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரங்களை பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 13, 2017, 10:47 [IST]
English summary
Transform Your Mahindra Bolero To Mercedes Benz G Wagen: Complete details.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+