ஜனவரியில் அறிமுகமாகும் புதிய கார் மாடல்களின் பட்டியல்!
வரும் 2018 ஜனவரியில் அறிமுகமாக இருக்கும் புதிய கார் மாடல்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜீப் காம்பஸ், டாடா நெக்ஸான், புதிய ஹூண்டாய் வெர்னா உள்ளிட்ட பல புத்தம் புதிய மாடல்கள் 2017ம் ஆண்டை அலங்கரித்த நிலையில், புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல புதிய மாடல்கள் அறிமுகமாக இருக்கின்றன. அந்த புதிய கார் மாடல்கள் குறித்த விபரங்களை உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

டட்சன் ரெடி-கோ ஏஎம்டி
டட்சன் நிறுவனத்தின் விற்பனையில் அதிக பங்களிப்பை வழங்கி வரும் பட்ஜெட் மாடல் டட்சன் ரெடிகோ. இந்த காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் ஜனவரியில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ரெனோ க்விட் காரின் எஞ்சின், ஏஎம்டி கியர்பாக்ஸ்தான் டட்சன் ரெடிகோ ஏஎம்டி மாடலிலும் இடம்பெற இருக்கிறது. டட்சன் ரெடிகோ காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும்,, 91 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிட ரூ.30,000 கூடுதல் விலையில் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்திரா டியூவி300 ப்ளஸ்
மஹிந்திரா நிறுவனத்தின் டியூவி300 ப்ளஸ் காரின் கூடுதல் நீளம் கொண்ட மாடலாக வர இருக்கிறது. இந்த காரில் 9 பேர் வரை செல்வதற்கான இடவசதி இருக்கும். இந்த காரும் ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மஹிந்திரா டியூவி300 ப்ளஸ் காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும் 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும். ஏஎம்டி ஆப்ஷனும் எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video


லம்போர்கினி உரஸ்
சூப்பர் கார் பிரியர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் ஆவலைத் துண்டி இருக்கும் புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி ஜனவரி 11ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மிரட்டலான டிசைன், சக்திவாய்ந்த எஞ்சின் ஆப்ஷனில் புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவி வர இருக்கிறது. டர்போசார்ஜ்டு எஞ்சினுடன் வரும் முதல் லம்போர்கினி மாடல் என்பதும் இதன் முக்கிய சிறப்பு.
Trending On DriveSpark Tamil:

புதிய லம்போர்கினி உரஸ் எஸ்யூவியில் இரண்டு டர்போசார்ஜர் கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 641 பிஎச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோடமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. இந்த எஸ்யூவி 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் எட்டிவிடும் என்பதுடன், மணிக்கு 306 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

லெக்சஸ் எல்எஸ்500எச்
டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு பிராண்டாக செயல்படும் லெக்சஸ் நிறுவனம் இந்தியாவில் தனது உயர் சொகுசு அம்சங்கள் கொண்ட எல்எஸ்500எச் காரை ஜனவரி 15ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. அட்டகாசமான செடான் காராக வரும் இந்த கார் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் கார்களுடன் போட்டி போடும்.

புதிய லெக்சஸ் எல்எஸ்500எச் காரில் 3.5 லிட்டர் வி6 எஞ்சினும், இரண்டு எலக்ட்ரிக் மோட்டார்களும் பொருத்தப்பட்ட ஹைப்ரிட் மாடலாக வருகிறது. இரண்டும் சேர்த்து அதிகபட்சமாக 354 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 5.2 வினாடிகளில் எட்டிவிடும். ரூ.1.5 கோடி முதல் ரூ.1.8 கோடி விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி க்யூ5
புதிய ஆடி க்யூ5 கார் மாடல் இந்தியாவில் வரும் ஜனவரி 18ந் தேதி வர இருக்கிறது. பழைய மாடலைவி 100 கிலோ எடை குறைவான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆடியின் பாரம்பரியமும், நவீன டிசைன் தாத்பரியங்களும் இந்த காருக்கு வசீகரத்தை தருகிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் இந்த காரின் முக்கிய அம்சங்கள்.

புதிய ஆடி க்யூ5 காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 163 பிஎச்பி பவரை அளிக்கும் ஒரு மாடலிலும், 190 பிஎச்பி பவரை அளிக்க வல்ல மற்றொரு மாடலிலும் வர இருக்கிறது. மேலும், 252 பிஎச்பி பவரை அளிக்க வல்ல 2.0 லிட்டர் எஞ்சின் ஆப்ஷனிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, வால்வோ எக்ஸ்சி60 மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

போர்ஷே பனமிரா ஸ்போர்ட் டூரிஷ்மோ
போர்ஷே நிறுவனத்தின் பனமிரா ஸ்போர்ட் டூரிஷ்மோ கார் வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சாதாரண பனமிரா காரில் டர்போசார்ஜ்டு எஞ்சின் இல்லாத நிலையில், இந்த புதிய கார் டர்போசார்ஜ்டு எஞ்சினுடன் வர இருக்கிறது.

இந்த காருகக்கு ரூ.28 கோடி எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிரது. போர்ஷே பனமிரா டர்போ எஸ்-இ ஹைப்ரிட் ஸ்போர்ட் டூரிஷ்மோ மாடல் ரூ.2.38 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் வர இருக்கிறது. போர்ஷே பனமிரா காரின் சூட்டிங் பிரேக் ரகத்தில் இந்த கார் வர இருக்கிறது.

வரும் பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற இருக்கும் நிலையில், புத்தாண்டிலேயே புதிய கார்களை களமிறக்கி தங்களின் பக்கம் வாடிக்கையாளர் பார்வையை இழுப்பதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்பதை இந்த பட்டியல் உணர்த்துகிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கும் புத்தாண்டில் அதிக தேர்வு கிடைக்க வாய்ப்பு கிடைக்கிறது.
Trending On DriveSpark Tamil:


Click it and Unblock the Notifications








