தீபாவளிக்கு வெளியாகும் புத்தம் புதிய கார் ரகங்களின் அசத்தலான விவரங்கள்..!!

Written By:

ஒளியை கொண்டாடும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் களமிறங்க பல்வேறு புதிய கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

விழாக்காலம் நெருங்க இன்னும் சிறிது நாட்களே உள்ளது. தீபாவளி ரேஸில் பங்கேற்கும் கார்களுக்கான தயாரிப்பு பணிகளை விரைந்து முடிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வேகமாக ஆய்த்தமாகி வருகின்றன.

செடான் முதல் எஸ்.யூ.வி, ஆடம்பர கார்கள் என பல்வேறு ரக கார்கள் இந்த வருட தீபாவளிக்கு களமிறங்குகின்றன. அதுகுறித்த விவரான தகவல்களை வரிசையாக பார்க்கலாம்.

டாடா நெக்ஸான்

டாடா நெக்ஸான்

டாடா மோட்டார்ஸ் தனது ஆக்கத்திறனுக்கு சரியான சவாலை அளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள மாடல் தான் நெக்ஸான்.

டியோகோவின் விற்பனைக்கு பிறகு டாடாவின் தயாரிப்புகள் டியோகோவின் தோற்றத்தை பின்பற்றியே தயாரிக்கப்படுகிறது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

அதே கான்செப்டில் அடுத்து வெளிவரும் டாடாவின் மாடல் தான் நெக்ஸான். சப்-காம்பேக்ட் எஸ்.யூ.வி காரான இது இந்தியாவில் பெரிய விற்பனை திறனை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் நெக்ஸானுக்கான புக்கிங் அள்ளுகிறது. இதனால் தயாரிப்பு பணிகளையும் டாடா துரித்தப்படுத்தி வருகிறது.

Recommended Video - Watch Now!
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

டீசல் மாடல் நெக்ஸான் காரில் 1.5 லிட்டர் ரெவோடார்க் எஞ்சின் உள்ளது. அதேபோல பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் திறன் பெற்ற எஞ்சின் உள்ளது.

டாடா நெக்ஸான் காரில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு எஞ்சின்களுமே டார்போசார்ஜிடு திறன் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

டாடா நெக்ஸானில் உள்ள முக்கியமான அம்சங்கள் என்றால் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டார்ய்டு ஆட்டோ என இரண்டிலும் இயங்கும் ஃபிளோட்டிங் 6.5 இஞ்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்மெண்ட் சிஸ்டம்.

டாடாவின் பெருமித தயாரிப்பாக இந்தாண்டு வெளிவரும் இந்த கார் மாருதி பிரிஸ்ஸா, ஃபோர்டு ஈகோஸ்போர்டு மற்றும் மஹிந்திரா டியூவி 300 கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

மேலும் இதில் ப்ரோஜெக்டர் ஹேட்லேம்ப்ஸ், 8-ஸ்பீக்கர் சரௌண்ட் சிஸ்டம், ஸ்மார்ட் கீ, புஷ்-பட்டர்ன் ஸ்டார்ட் மற்றும் 209மிமீ கூடிய கிரவுண்ட் கிளயரன்ஸ் போன்ற அம்சங்கள் உள்ளன.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு : 2017 செப்டம்பர் இறுதி.

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 6 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை.

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்

ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட்

ஃபோர்டு இந்தியா நிறுவனம் அடுத்து வெளியிடும் ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் காரின் உள்புற மற்றும் வெளிப்புற கட்டமைப்புகளில் அதிக மாற்றத்தை உருவாக்கியுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

காரின் முன்புற பகுதிகளில் பம்பர் பகுதி நீங்களாக புதிய ஒரே துண்டிலான கிரில் மற்றும் பனி படர்ந்த ஃபாக் லேம்ப் ஆகியவற்றை பெற்றுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

உள்புற கட்டமைப்பில், புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஸ்டீயரிங் வீல், ஸ்விட்ச்கியர் ஆகியவற்றுடன் டாடா நெக்ஸானில் உள்ள ஃபிளோடிங் டச்ஸ்கீரின் இன்ஃபோடெயின்மெண்ட் அம்சம் இதிலும் உள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

பெட்ரோல் மாடல் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரில் 1.5 லிட்டர் திறன் கொண்ட 3 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

டீசல் மாடல் காரில் 1.5 லிட்டர் திறன் பெற்ற 4 சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான், மாருதி பிரிஸ்ஸா மற்றும் ஹோண்டா டபுள்யூ.ஆர்-வி ஆகிய காருக்கு போட்டியாக ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் களமிறங்குகிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு : 2017 செப்டம்பர் இறுதி

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.7 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை

ரெனால்ட் கேப்டூர்

ரெனால்ட் கேப்டூர்

காம்பேக்ட் எஸ்.யூ.வி மாடல் காரில் ரெனால்ட் நிறுவனம் முதலாவதாக டஸ்டர் காரை களமிறக்கியது. இதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து டஸ்டர் பிளாட்பாரமில் ரெனால்ட் தயாரித்துள்ள கார் தான் கேப்டூர்.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

பெட்ரோல் மற்றும் டீசல் தேர்வுகளில் வெளிவரும் கேப்டூர் கார், டஸ்டரின் 1.5 லிட்டர் திறன் பெற்ற எஞ்சினையே பெற்றுள்ளது. இது 5-ஸீட்டர் கிராஸோவர் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

இந்திய சந்தையில் கேப்டூர் எஸ்.யூ.வி கார் ஹூண்டாய் கிரெட்டா, மாருதி எஸ்-கிராஸ் மற்றும் எண்ட்ரி லெவல் ஜீப் காம்பஸ் காருக்கு போட்டியாக களமிறங்குகிறது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு : அக்டோபர் 2017

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.13 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை

ஸ்கோடா கோடியாக்

ஸ்கோடா கோடியாக்

அலாஸ்காவில் காணப்படும் ஒரு கரடி இனத்தின் பெயர் தான் கோடியாக், அந்த பெயரில் ஒரு புதிய எஸ்.யூ.வி காரை தயாரித்து இந்த தீபாவளிக்கு இந்தியாவில் வெளியிடுகிறது ஸ்கோடா.

7 இருக்கைகள் கொண்ட கோடியாக் எஸ்.யூ.வி காரில் கவர்ந்திழுக்கும் பல்வேறு உயர்தரமான அம்சங்கள் ஸ்மார்ட் திறத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

2.0 லிட்டர் டிடிஐ டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞின் என இருவேறு தேர்வுகளில் வரும் இந்த கார் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஸ்கோடா கோடியாக் காருக்கு போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஃபோர்டு எண்டவர் ஆகிய மாடல்கள் இருக்கின்றன.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு : அக்டோபர் 2017

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை.

ஆடி கியூ 5

ஆடி கியூ 5

ஜெர்மனின் ஆடி கார் நிறுவனம் 2வது தலைமுறைக்கான கியூ 5 மாடல் காரை விரைவில் வெளியிடுகிறது. கூர்மையான, கெத்தான தோற்றம் பெற்ற இந்த கார் மிகவும் ஸ்டைலிங்கான தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

90 கிலோ எடைக்கொண்ட இந்த கியூ5 எஸ்.யூ.வி கார் முந்தைய தலைமுறை மாடலை விட மிகவும் இலகுவான எடையில் உள்ளது. வோக்ஸ்வேகனின் எம்.எல்.பி ஈவோ பிளாட்ஃபாரமில் இந்த கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

கையெழுத்தின் மூலம் உணரும் திறன் பெற்ற 8.3 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது. கூடுதலாக பாங்க் மற்றும் ஒலுபிஸன் ஒலி அமைப்பை கொண்ட

ஆடியின் எம்.எம்.ஐ இண்டர்ஃபேஸ் (நேவிகேஷன் உடன்), 12.3 இஞ்ச் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

முன்னர் இருந்த கியூ 5 மாடலில் இடம்பெற்றிருந்த அதே எஞ்சின் தான் புதிய காரிலும் உள்ளன. கியூ 5 காரில் 2.0 லிட்டர் திறன் பெற்ற டீசல் எஞ்சின் 249 பிஎச்பி பவரை வழங்கும்.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 187 பிஎச்பி பவரை வழங்கும். இரண்டு கார்களும் 7-ஸ்பீடு எஸ்-ட்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் வெளியீடு: அக்டோபர் 2017

எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.45 லட்சம் முதல் ரூ.55 லட்சம் வரை

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

ஆனால் விழாக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே பல கார் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளை இந்தியாவில் வரிசைக்கட்டி வெளியிட்டு விட்டன

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

அதில் குறிப்பாக ஹீண்டாயின் புதிய வெர்னா செடான், ஜீப் காம்பஸ் எஸ்.யூ.வி ,ஸ்கோடாவின் ஆக்டேவியா ஆர்.எஸ் மற்றும் ஆடி கியூ7 போன்ற கார்கள் நல்ல வரவேற்பில் உள்ளன.

தீபாவளிக்கு ரிலீஸாகும் புதிய கார்கள் பற்றிய முழு விவரங்கள்..!!

உற்சாகமான தீபாவளி பண்டிகையை வரவேற்க நாம் மிகவும் குதுகலத்தோடு இருக்க பல்வேறு வகையான நடைமுறைகள் புதியதாக அமையும்.

அதுபோன்ற சிறந்த தேர்வுகளோடு தான் 2017 தீபாவளிக்கு முன்னணி நிறுவனங்கள் தயாரித்துள்ள கார்கள் வெளிவருகின்றன.

English summary
Read in Tamil: Carmakers in India are set to launch new cars Upcoming Deepavali
Story first published: Wednesday, September 6, 2017, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark