அமெரிக்க மோட்டார் கண்காட்சியில் அறிமுகமாகும் ஹூண்டாய் கோனா எஸ்.யூ.வி

Written By:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வரும் 14ம் தேதி நடக்கவுள்ள ஆட்டோ ஷோவில் ஹூண்டாய் நிறுவனத்தின் காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலான கோனா கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யூ.வி கார்!

காரின் தோற்றத்தை விட, அதன் பெயர் ஆட்டோமொபைல் உலகில் வைரலாகியுள்ளது. அதன்படி அதற்காக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்தில் உள்ள சிறிய நகரத்தின் பெயர் கோனா.

அமெரிக்காவில் வெளியிடப்படும் கார் என்பதால் அதற்கு கோனா என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யூ.வி கார்!

இந்தியாவில் இந்த காரின் அறிமுகம் எப்போது என்பது குறித்து ஹூண்டாய் நிறுவனம் தற்போது வரை அறிவிக்கவில்லை. ஆனால் ஹூண்டாயின் கோனா எஸ்.யூ.வி காரின் போட்டி என்பது சர்வதேச அளவில் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது.

டொயோட்டாவின் சி.எச்.ஆர், ஹோண்டாவின் ஹெச்.ஆர்- வி மற்றும் மஸ்தா எம்.எக்ஸ்- 3 போன்ற எஸ்.யூ.வி மாடல்களுக்கு போட்டியாக ஹூண்டாயின் கோனா எஸ்.யூ.வி கார் களமிறங்குகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யூ.வி கார்!

ஹூண்டாயின் மற்றொரு தயாரிப்புகளான டூஸான், கெரக்ட்டா ஆகிய எஸ்.யூ.வி கார்களுக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்டுள்ள, கோனா மாடல் கார் நியூயார்க் ஆட்டோ கண்காட்சியில் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யூ.வி கார்!

இந்தியாவில் கிரெட்டா எஸ்.யூ.வி கார் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தி வருவதால், இந்தியர்களிடம் அதற்கான வாங்கும் திறன் அதிகரித்து வருகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யூ.வி கார்!

இதை மனதில் வைத்து, ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய கோனா எஸ்.யூ.வி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தாது என்று தெரிகிறது. மேலும் இந்தக்காரினுடைய செயல்திறன் உள்கட்டமைப்புகள் குறித்த தகவல்கள் என எதையும் தற்போது வரை ஹூண்டாய் வெளியிடவில்லை.

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கோனா எஸ்.யூ.வி கார்!

அமெரிக்காவில் வரும் 14ம் தேதி நடக்கவுள்ள ஆட்டோமொபைல் கண்காட்சியின் போது தான் ஹூண்டாய் கோனா எஸ்.யு.வி கார் குறித்த விவரங்களை நாம் அறியலாம்.

மேலும்... #ஹூண்டாய் #hyundai
English summary
Hyundai Kona will be launched in New York Motor Show. The Hyundai Kona will be introduced in Europe first, followed by Australia.
Story first published: Tuesday, April 4, 2017, 8:30 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark