இந்தியாவில் மாருதி சுசுகி அடுத்தடுத்து களமிறக்கும் 12 புதிய கார்கள்... முழுத் தகவல்கள்..!!

Written By:

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12 புதிய கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

மாருதி சுசுகியின் இந்த அறிவிப்பின் மூலம் அது தயாரிக்கவுள்ள கார்களை குறித்த விவரங்களை அறியலாம்.

புதிய தலைமுறையின் மாருதி வேகன் ஆர் எம்.பி.வி (7 இருக்கைகள்)

புதிய தலைமுறையின் மாருதி வேகன் ஆர் எம்.பி.வி (7 இருக்கைகள்)

2013 இந்தோனேஷியாவில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியின் போது மாருதி சுசுகி நிறுவனம் 7 இருக்கைகள் கொண்ட வேகன் ஆர் எம்.பி காரை அறிமுகப்படுத்தியது.

Recommended Video - Watch Now!
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
மாருதி சுசுகி களமிறக்கும் 12 புதிய கார்கள்..!!

அடுத்தாண்டு இதே ஹேட்ச்பேக் மாடல் கார் புதிய தலைமுறை வாகனமாக வேகன் ஆர் எம்.பி.வி என பெயரில் இந்தியாவில் வெளிவரவுள்ளது.

குஜராத்தில் உள்ள மாருதி சுசுகி-யின் தொழிற்சாலையில் தயாராகவுள்ள இந்த கார், டட்சன் நிறுவனத்தின் கோ கோ மாடலுக்கு போட்டியாக சந்தையில் அறிமுகமாகவுள்ளது.

புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

புதிய மாருதி சுசுகி ஸ்விஃப்ட்

இந்தியாவில் சூப்பர்ஸ்டார் அந்தஸ்தை பெற்ற ஹேட்ச்பேக் மாடல் என்றால் அது ஸ்விஃப்ட் தான். 2017 மாருதி ஸ்விஃப்ட் மாடலாக 2018ல் நடக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகமாகிறது.

மாருதி சுசுகி களமிறக்கும் 12 புதிய கார்கள்..!!

மூன்றாவது தலைமுறைக்கான மாடலாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட் இந்தியாவில் அடியெடுத்து வைக்கிறது.

மேலும் மாருதியின் நவீனத்தை ஒருங்கே பெற்ற ஹேட்ச்பேக் மாடல் கார் என்ற பெருமையையும் 2017 ஸ்விஃப்ட் பெறுகிறது.

மாருதி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்

மாருதி எஸ்-கிராஸ் ஃபேஸ்லிஃப்ட்

தற்போது ஜப்பானிய மற்றும் ஐரோப்பா சந்தைகளில் சக்கைப்போடு போட்டு வரும் எஸ்-கிராஸ் காரை இந்தியாவில் வெளியிடுகிறது மாருதி சுசுகி.

தீபாவளியை முன்னிட்டு அறிமுகமாகும் இந்த காரை மாருதி சுசுகி 2016 பாரீஸ் மோட்டார் கண்காட்சியில் முதன்முதலாக உலகிற்கு காட்டியது.

மாருதி சுசுகி களமிறக்கும் 12 புதிய கார்கள்..!!

எஸ்.யூ.வி ரக காரான இது இந்தியாவிலும் மிகப்பெரிய வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதியின் ப்ரீமியம் மாடல் கார்களை விற்பனை செய்யும் நெக்ஸஸ் ஷோரூமில் இந்த கார் விற்பனைக்காக வருகிறது.

மாருதியின் புதிய ’கிராஸ் ஹேட்ச்’

மாருதியின் புதிய ’கிராஸ் ஹேட்ச்’

ஹேட்ச்பேக் மாடலை புதிய தோற்றத்தோடு மாருதி தயாரிக்கும் இந்த காருக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.

2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் இந்த கிராஸ் ஹேட்ச்பேக் கார் எஸ்.யூ.வி-யின் தோற்றப் பொலிவையும் கொண்டு இருக்கும்.

மாருதி சுசுகி களமிறக்கும் 12 புதிய கார்கள்..!!

ஹேட்ச்-கிராஸ் மாடல் கார் அல்டோ-விற்கான புதிய பதிப்பு என்று கூறுவது முற்றிலும் பொய்யானது என்றும், 2019ல் இந்த மாடல் கார் விற்பனைக்கு வரும் என்றும் மாருதி சுசுகி கூறுகிறது.

மாருதி எர்டிகா

மாருதி எர்டிகா

தற்போதிருக்கும் எர்டிகா மாடலை காட்டிலும் மிகவும் பெரிய இடவதசியோடு புதிய தலைமுறைக்கான எர்டிகா காரை மாருதி தயாரித்து வருகிறது.

இந்தியாவில் எஸ்.யூ.வி மற்றும் எம்.பி.வி ரக கார்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதில் எம்.பி.வி ரக கார் சந்தையை கைப்பற்றவே இந்த மாடல் எர்டிகா காரை மாருதி களமிறக்குகிறது.

மாருதி சுசுகி களமிறக்கும் 12 புதிய கார்கள்..!!

’ஹார்ட்டெக்ட்’ பிளாட்ஃபாரமில் தயாராகும் இந்த காரை சுசுகி மிகவும் இலகுவான பயன்பாடுகளுடன் வடிவமைத்துள்ளது. மேலும் இதில் எரிவாயு சேமிப்பு திறனும் கூடுதலாக இருக்கும் என தெரிவிக்கிறது.

கான்செப்ட் மாடலாக தயாராகி வரும் இந்த காரை 2018 ஆட்டோ எக்ஸ்ஃபோவில் மாருதி சுசுகி காட்சிப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி விட்டாரா பிரிஸ்ஸா பெட்ரோல்

மாருதி விட்டாரா பிரிஸ்ஸா பெட்ரோல்

இந்தியாவில் மாருதி விட்டாரா பிரிஸ்ஸா காரின் விற்பனை உச்சத்தில் உள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் இதே மாடலில் புதிய பெட்ரோல் தேவை உடன் காரை மாருதி சுசுகி களமிறக்குகிறது.

இந்த புதிய பெட்ரோல் மாடல் கார் டீசலை விட மிகவும் விலை குறைந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி களமிறக்கும் 12 புதிய கார்கள்..!!

புதிய மாருதி சுசுகி விட்டரா பிரிஸ்ஸா பெட்ரோல் காருக்கு போட்டியாக ஃபோர்டு ஈகோஸ்போர்ட் மற்றும் ஹோண்டா டபுள்யூ.ஆர்.ஆர் கார்கள் உள்ளன.

ஜியா ஃபேஸ்லிஃப்ட்

ஜியா ஃபேஸ்லிஃப்ட்

சன்ரூஃப் மற்றும் ப்ரீமியர் அப்ஹோல்ஸ்ட்ரி லெதர் தேவைகள் கொண்டு மாருதி தயாரித்து வரும் மற்றொரு கார் ஜியா ஃபேஸ்லிஃப்ட்.

7-இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொண்ட இந்த காரில் ஏப்பிள் கார்பிளே மற்றும் மிரர் லிங்க் வசதிகள் உள்ளன.

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல்

ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல்

இந்தியாவில் பலருக்கும் இருக்கும் கேள்வி புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்பது தான்.

இதை முடிவிற்கு கொண்டு வர மாருதி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் இறுதியாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

மாருதி சுசுகி களமிறக்கும் 12 புதிய கார்கள்..!!

பேலேனோ ஆர்.எஸ் காரின் விற்பனை திறனை பொறுத்து, ஸ்விஃப்ட் காருக்கான விற்பனை அளவை இந்தியாவில் மாருதி சுசுகிமுடிவு செய்யும்.

இந்த புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் காரின் புதிய ரேடியேட்டர் கிரில், பிளாக் பம்பர் ஸ்பாய்லர், புதிய பனி படர்ந்த விளக்குகள் ஆகியவை அதன் தோற்றத்திற்கு பொலிவு சேர்கின்றன.

மாருதி ஜிம்மி

மாருதி ஜிம்மி

2012 ஆட்டோ எக்ஸ்போவில் தான் ஜிம்மி மாடல் காரை மாருதி அறிமுகப்படுத்தியது. தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இந்த கார் இந்தியா வருகிறது.

முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் தயாராகியுள்ள இந்த கார் ஜிப்ஸி, கிராண்ட் விட்டாரா கார்களுக்கு மத்தியிலான தோற்றத்தை பெற்றுள்ளது.

மாருதி சுசுகி களமிறக்கும் 12 புதிய கார்கள்..!!

டாடா, ரெனால்ட், நிஸான் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு மத்தியில், மாருதி சுசுகி வரிசையாக கொண்டு வரும் இந்த கார்கள் நிச்சயம் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மிகப்பெரிய அதிரடியை தரவுள்ளன.

English summary
Read in Tamil: 12 new cars to be launched by Maruti for India. Click for Details...
Story first published: Wednesday, September 6, 2017, 14:02 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark