இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய கார்கள் குறித்த விரிவான தகவல்கள்..!

Written By:

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார் மாடல்கள் என்னென்ன? அதில் உள்ள சிறப்புகள், அவற்றின் விலை, தொழில்நுட்பங்கள், அறிமுகமாக இருக்கும் தேதி உள்ளிட்ட தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இந்த மாதம் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட், மாருதி சுசுகி டிசையர் உள்ளிட்ட புதிய கார்கள் அறிமுகமாக உள்ளது. இதில் முதலாவதாக இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் குறித்து காணலாம்.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட்

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட்

இந்தியாவின் சிறந்த பிரீமியம் எஸ்யூவீக்களில் ஒன்றாக விளங்கும் இன்னோவா காரின் புதிய மாடலான கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் சில நாட்களில் அறிமுகமாக இருக்கிறது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இந்தியாவில் டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா கார் அறிமுகமாகி ஒராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி இந்த புதிய மாடலை டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இன்னோவா காரின் இரண்டாம் தலைமுறை மாடலாக, டொயோட்டா கிரிஸ்டா காரை கடந்த ஆண்டு டொயோட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

பெயருக்கு ஏற்றார் போல் இது இன்னோவா கிரிஸ்டாவின் ஸ்போர்ட் எடிஷன் மாடலாக, புதிய டிசைன் பரிபாலனைகளுடன் வெளிவர இருக்கிறது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

டிசைனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் மாடலில் பல்வேறு அம்சங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய வைன் ரெட் பாடி கலர், பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகளுடன் கூடிய ஃரொஜெக்டர் முகப்பு விளக்குகள்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

காரின் கீழ் பாகம் முழுவதும் பிளாஸ்டிக் கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான கிரோம் வேலைப்பாடுகள் இதில் கவர்ச்சிகரமாக செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இதன் பி மற்றும் சி பில்லர்கள் கருப்பு வண்ணத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது, இண்டிகேட்டர்களுடன் கூடிய கருப்பு வண்ண வெளிப்புற ரியர் வியூ கண்ணாடிகள் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இதில் புதிய கருப்பு வண்ண 17 இஞ்ச் அலாய் வீல்கள் உள்ளது. உட்புறத்தில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் இல்லாமல் முழுவதும் கருப்பு நிற வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பு அம்சங்கள்

புதிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் காரில் உள்ள சிறப்பு அம்சங்களை கீழே காணலாம்.

 • தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்,
 • ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல்
 • எலக்ட்ரானிக் முறையில் மாற்றியமைத்துக்கொள்ளும் ஓட்டுநர் இருக்கை
 • ரியர் பார்கிங் கேமரா
 • இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை சீட்களுக்கும் ரியர் ஏசி வசதி
 • 6 ஏர்பேக்குகள்
 • ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி
 • ஹில் அஸிஸ்ட் வசதி
 • எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்கிராம்
 • எஞ்சின் ஸ்டார்/ஸ்டாப் வசதியுடன் கூடிய கீலெஸ் எண்ட்ரீ
இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் காரில் 2.8 லிட்டர் ஜிடி சீரீஸ் டீசல் இஞ்சின் உள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இது அதிகபட்சமாக 171 பிஹச்பி ஆற்றலையும், 360 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இஞ்சினின் ஆற்றலை 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் பின்சக்கரங்களுக்கு அளிக்கிறது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இது ஸ்பெஷல் எடிஷன் கார் என்பதால் குறிப்பிட்ட காலத்திற்கு குறிப்பிட்ட அளவு கார்களே விற்பனைக்கு கிடைக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

மேம்படுத்தப்பட்ட மற்றும் கூடுதல் அம்சங்கள் கொண்ட புதிய இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் கார் நடப்பு இன்னோவா கிரிஸ்டா காரைக் காட்டிலும் ரூ.15,000முதல் ரூ.20,000 வரை கூடுதல் விலை கொண்டிருக்கலாம்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

நடப்பு இன்னொவா கிரிஸ்டா கார் ரூ.22.08 லட்சம் என்ற விலையில் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய இன்னோவா கிரிஸ்டா டூரிங் ஸ்போர்ட் காரை வரும் மே மாதம் 4ஆம் தேதி அறிமுகப்படுத்த இருக்கிறது டொயோட்டா நிறுவனம்.

2017 மாருதி சுசுகி டிசையர்

2017 மாருதி சுசுகி டிசையர்

அடுத்து நாம் பார்க்க இருப்பது இந்தியாவின் தலைசிறந்த கார் நிறுவனமான மாருதி அறிமுகம் செய்யவுள்ள புதிய டிசையர் காம்பாக்ட் செடன் காரைப் பற்றித்தான்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இது மாருதி சுசுகி டிசையர் காரின் மூன்றாம் தலைமுறை மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய காரை கடந்த ஏப்ரல்24ம் தேதி காட்சிப்படுத்தியது மாருதி நிறுவனம்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இந்த புதிய டிசையர் காரின் முகப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அகலமான முகப்பு கிரில், பகல் நேரத்தில் எரியும் வகையிலான எல்ஈடி விளக்குகளுடன் கூடிய ஃரொஜெக்டர் முகப்பு விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இதே போல பின்புற விளக்குகளும் எல்ஈடி விளக்குகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ரீடிசைன் செய்யப்பட்ட ரெஃப்லக்டர்களுடன் கூடிய பின்புற பம்பர், டூயல் டோன் 15 இஞ்ச் அலாய் வீல்கள் ஆகியவையும் உள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

முந்தைய மாடலைக் காட்டிலும் இதன் வீல் பேஸ் 20 மிமீ நீளமும், 40 மிமீ அகலமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 7 மீமீ குறைக்கப்பட்டு 163 மிமீ ஆக உள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

2017 டிசையர் காரின் உட்புறம் கூடுதல் வசதிகள் கொண்டதாகவும் சில கூடுதல் அம்சங்கள் கொண்டதாகவும் உள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இதில் புதிய கிளைமேட் கண்ட்ரோல் வசதி, சென்சர்களுடன் கூடிய ரியர் பார்க்கிங் கேமரா, ரியர் ஏசி, சார்ஜிங் சாக்கெட்டுடன் கூடிய மொபைல் ஹோல்டர் ஆகியவை உள்ளன.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

மேலும் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி, இரண்டு ஏர்பேக்குகள் ஸ்டேண்டர்ட் அம்சங்களாக இதில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்டர்ட் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதில் உள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய 2017 மாருதி சுசுகி டிசையர் காரின் உட்புற பூட் ஸ்பேஸ், 60 லிட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தற்போதைய பூட் ஸ்பேஸ் 376 லிட்டர்கள் ஆகும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய 2017 டிசையர் கார் 6 புதிய வண்ணங்களில் கிடைக்கிறது.

 • ஆக்ஸ்ஃபோர்டு புளூ (Oxford Blue)
 • ஷெர்வுட் பிரவுன் (Sherwood Brown)
 • கேலண்ட் ரெட் (Gallant Red)
 • மேக்மா கிரே (Magma Gray)
 • சில்கி சில்வர் (Silky Silver )
 • ஆர்க்டிக் ஒயிட் (Arctic White)
இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

மாருதி சுசுகி 2017 டிசையர் கார் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இதில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் அதிகபட்சமாக 84.3 பிஎஸ் ஆற்றலை அளிக்கவல்லது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இதேபோல இதில் உள்ள 1.3 லிட்டர் டீசல் இஞ்சின் அதிகபட்சமாக 73 பிஎஸ் ஆற்றலை அளிக்கவல்லதாகும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

இரண்டு மாடல்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. அதே நேரத்தில் இரண்டு வேரியண்டுகளிலும் புதிதாக ஆட்டோ கியர் ஷிஃப்ட் வசதி ஆப்ஷனலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய 2017 மாருதி சுசுகி டிசையர் கார் வரும் மே 16ஆம் தேதி அறிமுகம் ஆக உள்ள நிலையில் இதற்காக புக்கிங்குகளை ரூ. 11,000 முன்பணமாக பெற்றுக்கொண்டு ஏற்கெனவே மாருதி நிறுவனம் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

2017 டிசையர் கார் ரூ.5.50 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2017 செவர்லே பீட்

2017 செவர்லே பீட்

அடுத்து நாம் பார்க்க இருப்பது புதிய 2017 செவர்லே பீட் காரை பற்றித்தான்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

மேம்படுத்தப்பட்ட செவர்லே பீட் கார் செவர்லே இண்டெலி பீட் என்ற பெயரில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கிறது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

டிசைன் மாறுதல்கள் கொண்டதாக புதிய பீட் கார் வெளிவர இருக்கிறது. இதன்முகப்பு அமைப்பில் பல மாறுதல்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய முகப்பு மற்றும் பின்புற விளக்குகள், புதிய 7 இஞ்ச் டச் ஸ்கிரீன் கொண்ட மைலிங்க் என்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதில் இடம்பெறும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

ரீடிசைன் செய்யப்பட்ட பம்பர், முகப்பு கிரில் அமைப்பில் கிரோம் வேலைப்பாடுகள், புதிய ஃபாக் லைட்டுகள் ஆகிய மாற்றங்கள் இருக்கும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய எண்டெலி பீட் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் பெட்ரோல் இஞ்சின் மற்றும் 1.0 லிட்டார் எஸ்டிஇ டீசல் இஞ்சின் ஆகியவை உள்ளது. இரண்டுமே 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டிருக்கும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆக இருக்கும் புதிய கார்கள்..!

புதிய இண்டெலி பீட் கார் ரூ.5 லட்சம் முதல் ரூ. 7.5 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Read in Tamil about upcoming new car launches in india 2017.

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more