இந்தியாவில் இனி பழைய கார்களை தாராளமாக ஓட்டுங்கள்- சொல்வது பசுமை தீர்பாயம்
வின்டேஜ், கிளாசிக் கார்கள் மீதான தடையை விலகிக்கொண்ட தேசிய பசுமை தீர்பாயம்.. காரணம் இதுதான்..!!
15 வருட பெட்ரோல், டீசல் மாடல் கார்கள் உட்பட பழைய கிளாசிக், வின்டேஜ் கார்கள் ஆகியவற்றை சாலையில் இயக்குவதற்கு விதித்திருந்த தடையை தேசிய பசுமை தீர்பாயம் விலகிக்கொண்டுள்ளது.

இந்த புதிய உத்தரவின் மூலம், மோட்டார் வாகன சட்டத்தில் இணங்கியிருக்கும் பழைய வின்டேஜ் கார்களை இனி பேரணிகள், கண்காட்சிகள் மற்றும் பராமரிப்பு தேவைகளுக்காக சாலையில் இயக்கலாம்.

மத்திய மோட்டார் வாகன சட்டங்கள் குறித்து நடைபெற்ற அமர்வில், தேசிய பசுமை தீர்பாய தலைவர் ஸ்வதந்தர் குமார், விதி 92 (2)(சி), 1989 பிரிவு 59 மற்றும் மோட்டார் வாகன சட்டம் 1988 ஆகியவற்றின் கீழ் இந்த புதிய உத்தரவை பிறப்பித்தார்.

முன்னர் இருந்த விதிகளின் படி 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் மற்றும் வின்டேஜ் கார்களை சாலையில் எடுத்து வர தடை இருந்தது. இதற்கு பழங்கால கார் ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

தீர்பாயத்தின் உத்தரவை எதிர்த்து இந்திய ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் மூலமாக, வின்டேஜ் கார்களை சாலையில் பயன்படுத்த தற்போது தீர்பாயம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், மரங்களை நடுவது, குப்பைத்தொட்டிகளை அமைப்பது, குறிப்பாக டெல்லி நகர சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசு குறைப்பாட்டை போக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிப்பு செய்ய வேண்டும் என ஹெரிடேஜ் மோட்டரிங் கிளப் அமைப்பிற்கு பசுமை தீர்பாயம் கோரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video


2014, நவம்பரில் 15 வருட பழமையான வாகனங்களை இனி பயன்படுத்தக்கூடாது என தேசிய பசுமை தீர்பாயம் தடை உத்தரவை பிற்பித்தது.
குறிப்பாக டெல்லியில் 10 வருட பழைமையான டீசல் வாகனங்களை சாலையில் ஓட்டவும் தீர்பாயம் தடை வித்திருந்தது.

இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பாலான பழைமையான கார்களால், காற்று மாசு, சுகாதார சீர்கேடு மற்றும் வாகன புகை மூட்டம் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது.

நமது நாட்டில் இந்த சுற்றுச்சூழல் குறைபாடு சென்னை, பெங்களூரு உட்பட பல்வேறு நகரங்களில் உணரப்பட்டு வருகிறது. அதை கருத்தில் கொண்டு தான் 15 வருட பழமையான வகானங்களுக்கு பசுமை தீர்பாயம் தடை அறிவித்தது.

இந்தியாவில் பெருகி வரும் வாகனங்களால், சுகாதார சீர்கேடு, காற்று மாசு மற்றும் ஒலி மாசு போன்றவை சர்வசாதரணமாக அதிகரித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் நிலைமை கையை மீறி வருகிறது. அங்கு பெரும்பாலான பகுதிகளில் மக்கள் மூச்சு விடுவதற்கு கூட சிரமப்படுகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு தான் 15 வருட பழைய வாகனங்களுக்கு தேசிய தீர்பாயம் தடை கொண்டு வந்தது. ஆனால் அது வின்டேஜ் கார்கள் மீதான ஆர்வத்திற்கு ஆபத்தாக அமைந்தது.

இந்நிலையில் விண்டேஜ் கார் ஆர்வலர்களின் கோரிக்கைக்கு ஏற்ப தடையை விலகிக்கொண்டுள்ள தேசிய பசுமை தீர்பாயம், அவர்களை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு பங்களிக்க கோரிக்கை விடுத்திருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications








