2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்கப்போகும் அந்த நிறுவனங்கள் யார்... யார்..?? முழுத் தகவல்கள்..!

Written By:

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

தெற்காசியாவின் முதன்மையான வாகன கண்காட்சிகளில் ஒன்றான டெல்லி ஆட்டோ எக்ஸ்போ, அடுத்தாண்டு பிப்ரவரி 9 முதல் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

இந்தியாவின் மாபெரும் மோட்டார் வாகன கண்காட்சியான இதில் குறைந்தது முன்னணியில் உள்ள 6 வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்காது என கூறப்படுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

இந்தியாவில் இயங்கும் ஃபோர்டு, வோக்ஸ்வேகன், ஸ்கோடா, ஆடி, நிஸான், டுகாட்டி மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆகியவை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிப்பதாக கூறியுள்ளன.

Recommended Video - Watch Now!
2017 Skoda Octavia RS Launched In India | In Tamil - DriveSpark தமிழ்
ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

அந்தந்த நிறுவனங்களின் பெயர் கூற விரும்பாத சில நிர்வாகிகள் இந்த புறக்கணிப்பை உறுதிப்படுத்தியுள்ளதாக சில ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

ராயல் என்ஃபீல்டை நிர்வகித்து வரும் ஐஸர் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் 2016 டெல்லி எக்ஸ்போவில் பங்கேற்கவில்லை.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

போதுமான அளவு விற்பனை திறன் இல்லை என்பதாலும், கண்காட்சியில் பங்கேற்க அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி அந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு எக்ஸ்போவை புறக்கணித்தன.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

இந்திய சந்தைக்கு ஏற்றவாற்றான தயாரிப்புகளை உருவாக்கிட இல்லை என்பதால் 2018 எக்ஸ்போவில் சில முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்கவில்லை.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

மேலும் ஒரு சில நிறுவனங்கள் டெல்லி எக்ஸ்போவில் கலந்துகொள்ளும் அளவிற்கு தற்போது நிதி வரம்புகள் சரியாக இல்லை என்று கருதுகின்றன.

இதுபோன்ற கருத்துகள் சில நிறுவனங்களிடையே இருந்தாலும், அதிகாரிகள் சொல்லும் கருத்து என்பது வேறுவிதமாக உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

இந்தியாவில் பெரியளவில் வாகனங்கள் விற்பனை திறனை பெறுவதில்லை என்றும், அப்படியே விற்பனை ஆனாலும் வரும் லாபத்தில் பாதி இந்திய அரசாங்கத்திற்கு வரியாக சென்றுவிடுவதாக சில நிறுவனங்களின் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

இந்தியாவில் கடந்தாண்டில் பயணிகள் ரக வாகனங்களுக்கான விற்பனை திறனை இந்தாண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால்,

இந்த நிதியாண்டு ஆரம்பித்து கடந்த ஜூலை மாதம் வரையில் ஃபோர்டு நிறுவனத்தின் விற்பனை திறன் கடந்தாண்டை விட 0.24% அதிகரித்துள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

பயணிகள் ரக வாகன விற்பனைக்கான இந்த விகிதாச்சாரத்தில் ஜிஎம் நிறுவனம் 70% வீழ்ச்சியையும், நிஸான் 7.15% வீழ்ச்சியையும் பெற்றுள்ளன.

கடந்தாண்டை விட இந்தாண்டில் வோஸ்வேகன் இதே பிரிவில் 3.84% வளர்ச்சியையும், ஸ்கோடா 29% வளர்ச்சியையும் அடைந்துள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

விலை என்பது மட்டும் காரணமாக இல்லாமல், இடவசதி, கட்டுமானம் மற்றும் வேலையாட்கள் போன்ற தேவைகளிலும் டெல்லி எக்ஸ்போ அதிருப்தி அளிப்பதாக புறக்கணிப்பை அறிவித்துள்ள ஒரு நிறுவனத்தின் கருத்தாக உள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

இந்தியாவில் வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள இதுபோன்ற நிறுவனங்கள் 2018 டெல்லி எக்ஸ்போவை புறக்கணித்திருந்தாலும்,

சாயக் மோட்டார் கார்ப், எம்.ஜி மோட்டார் யூனிட், பியூஜியோட் எஸ்.ஏ மற்றும் கியா மோட்டார்ஸ் போன்ற சில புதுமுகங்கள் டெல்லி எக்ஸ்போவை அலங்கரிக்கவுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

புது டெல்லி அருகே உள்ள நொய்டா பகுதியில் தொடங்கும் 2018 ஆட்டோ எக்ஸ்போ பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி மொத்தம் 6 நாட்கள் நடைபெறுகிறது.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

இந்தியா 2025ல் ஆட்டோமொபைல் துறையில் உலகளவில் மூன்றாவது பெரிய சந்தையை கொண்ட நகரமாக உருவாகும்.

அதை நிலைநாட்டுவதற்காகத்தான் இந்த ஆட்டோ எக்ஸ்போ இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆட்டோ எக்ஸ்போவை புறக்கணிக்க சில முன்னணி நிறுவனங்கள் முடிவு..!!

அமெரிக்காவில் 1000 பேரில் 800 பேர் வாகனங்களை சொந்தமாக வைத்துள்ளனர். ஆனால் இந்தியாவில் 1000 பேரில் 18 பேர் தான் வாகனங்கள் வைத்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையை வைத்தே, பல்வேறு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தடம்பதித்திட போராடி வருகின்றன.

English summary
Read in Tamil: Volkswagen, Ducati, Skoda, Nissan and 3 Others May Skip 2018 Delhi Auto Expo. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark