இந்தியாவில் மாருதி, ஹூண்டாய் சந்தையை தூக்கி சாப்பிட ஃபோக்ஸ்வேகன் போட்ட புதிய கேமிங் பிளான்..!!
இந்தியாவில் மாருதி, ஹூண்டாய் சந்தையை தூக்கி சாப்பிட ஃபோக்ஸ்வேகன் போட்ட புதிய கேமிங் பிளான்..!!
இந்திய வாகன விற்பனையில் முன்னணியாக இருந்தாலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் துரித விற்பனைக்கான பட்டியலில் இன்னும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஃபோக்ஸ்வேகன் இதுவரை பின்பற்றி வந்த கார் தயாரிப்பிற்கான நெறிமுறைகளை அது மாற்றியமைத்துள்ளதாக இடி ஆட்டோ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து ரூ. 7,600 கோடியை ஃபோக்ஸ்வேகன் பல புதிய கார்களை தயாரிக்க முதலீடு செய்துள்ளதாகவும் இடி ஆட்டோ தனது செய்தியில் வெளியிட்டுள்ளது.

அதற்குவேண்டி மஹாராஷ்ராவின் பூனே நகரில் உள்ள சக்கன் என்ற பகுதியில் புதிய கார் தயாரிக்கும் ஆலையை ஃபோக்ஸ்வேகன் விரைவில் நிறுவவுள்ளது.
Recommended Video


இதுதவிர இந்தியாவிற்கு ஏற்ற வாகன தயாரிப்புகளை உருவாக்க புதிய பொறியாளர்கள் குழுவையும் ஃபோக்ஸ்வேகன் அமைக்க முடிவு செய்துள்ளது.

புதிய ஆலை மற்றும் பொறியாளர்கள் குழு உடன், எதிர்கால வாகன பயன்பாட்டிற்கான மின்சார கார் பயன்பாட்டிலும் ஃபோக்ஸ்வேகன் தன்னை ஈடுபடுத்தவுள்ளது.

இந்திய சந்தையில் அனைவருக்கும் பயன்படக்கூடிய கார்களை உருவாக்க ஃபோக்ஸ்வேகன் மற்றும் டாடா மோட்டார்ஸ் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தன.

மாருதி சுஸுகி, ஹூண்டாய் நிறுவனங்களை விட ப்ரீமியம் தர கார்களை ஃபோக்ஸ்வேகன் அதிகளவில் உருவாக்கி வருகிறது.
தற்போது இதை விடுத்து, அனைவருக்கும் ஏற்ற கார் மாடலை தயாரிக்க ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, எம்.கியூ.பி-ஏ0 பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படும் இந்த கார்கள், தற்போதை விற்பனையில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் கார்களை விட விலை குறைந்த மாடல்களாக உருவாகவுள்ளது.

மேலும் ஃபோக்ஸ்வேகன் இனி தயாரிக்கும் அனைத்து கார்களும் எம்.கியூ.பி ஃபிளாட்ஃபார்மில் தான் தயாரிக்கப்பட்டவுள்ளன. இதற்கு வேண்டி அந்நிறுவனம் ஸ்கோடா உடன் கைக்கோர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கூட்டணியில் எம்.கியூ.பி ஃபிளாட்ஃபார்மில் தயாராகும் கார்கள், இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி பலனோ, கிரெட்டா போன்ற கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

எம்.கியூ.பி பிளாட்ஃபார்மில் உருவாகும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் அனைத்தும், இவற்றை குறிவைத்தே போட்டி மாடலாக தயாராகும் என தெரியவருகிறது.

அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்றவகையிலான கார்கள் தயாரிக்கும் முடிவை ஃபோக்ஸ்வேகன் வெளியிட்டு இருப்பது, பல எதிர்பார்ப்புகளை வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் என்ட்ரி லெவல் கார் விற்பனையில் மாருதி, ஹூண்டாய் உட்பட சில நிறுவனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்த பட்டியலில் ஃபோக்ஸ்வேகனும் இணைந்திருப்பது மிகுந்த போட்டியை உருவாக்கும்.

புதிய ஃபிளாட்ஃபார்ம் மற்றும் அதில் தயாராகும் கார்கள் குறித்த அறிவிப்புகளை விரைவில் ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா நிறுவனங்கள் இணைந்து வெளியிடவுள்ளன.


Click it and Unblock the Notifications








