ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காருக்கு ரூ.6 லட்சம் தள்ளுபடி!
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காருக்கு ரூ.6 லட்சம் வரை நேரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காருக்கு ரூ.6 லட்சம் வரை அதிரடி தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. இதன் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் மிகவும் சக்திவாய்ந்த மாடல் ஜிடிஐ. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் லிமிடேட் எடிசன் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. மொத்தமாக 99 கார்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த காருக்கு இந்தியாவில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை. போலோ ஜிடிஐ காருக்கு வாடிக்கையாளர்களை தேடி சோர்ந்து போன ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இப்போது இருப்பு இருக்கும் கார்களை கழித்துக் கட்டுவதற்கு மெகா தள்ளுபடி ஆஃபரை அறிவித்துள்ளது.

இதுகுறித்து டீம் பிஎச்பி தளம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், மும்பையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் டீலர்கள் இந்த போலோ ஜிடிஐ கார் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதுவரை ரூ.25.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்ட இந்த கார் தற்போது ரூ.19.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுவதாக அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இருப்பில் இருக்கும் கார்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ காரில் சக்திவாய்ந்த 1.8 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 189 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடிஐ கார் 0 -100 கிமீ வேகத்தை வெறும் 7.2 வினாடிகளில் எட்டிவிடுமம். இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 233 கிமீ வேகம் வரை தொடும் வல்லமை கொண்டது. இதற்காக, விசேஷமான சஸ்பென்ஷன் அமைப்பையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

இதுதவிர்த்து, விசேஷமான பம்பர் அமைப்பு, ஸ்பாய்லர் உள்ளிட்டவை கூடுதல் ஆக்சஸெரீகளாக இருக்கின்றன. எல்இடி டெயில் லைட்டுகள், ஜிடிஐ பேட்ஜ் கொடுக்கப்பட்டு இருப்பதும் இதன் சிறப்பம்சங்கள்.

இந்த காரில் 6 ஏர்பேக்குகள், இபிடி நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், கூல்டு க்ளவ் பாக்ஸ், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் உள்ளன.

இப்போது ரூ.6 லட்சம் டிஸ்கவுண்ட் கொடுத்தாலும், இருப்பில் இருக்கும் போலோ ஜிடிஐ கார்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்குமா என்பது சந்தேகமாக உள்ளது. ஏனெனில், இதுபோன்ற அதிக விலையிலான ஹேட்ச்பேக் கார்கள் இந்திய மார்க்கெட்டில் எடுபடுவது சிரமமான விஷயமாகவே இருக்கிறது. இதே விலையில் பல சிறப்பான தேர்வுகள் கிடைப்பதே காரணம்.


Click it and Unblock the Notifications








