ஃபோக்ஸ்வேகன் போலோ ஹைலைன் பிளஸ் கார் ரூ. 7.24 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!
ஃபோக்ஸ்வேகன் போலோ ஹைலைன் பிளஸ் கார் ரூ. 7.24 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம்..!!
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ ஹைலைன் பிளஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.7.24 லட்சம் எக்ஸ்-ஷோரூம் இந்தியா மதிப்பில் இதனுடைய ஆரம்ப விலை தொடங்குகிறது.

போலோ ஹைலைன் பிளஸ் வேரியன்ட் கார் பல புதிய அம்சங்கள் டீசல் மற்றும் பெட்ரோல் என இருவேறு தேர்வுகளிலும் விற்பனைக்கு கிடைக்கும் என ஃபோக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.

| போலோ ஹைலைன் பிளஸ் | விலை |
| பெட்ரோல் | ரூ.7.24 லட்சம் |
| டீசல் | ரூ.8.78 லட்சம் |

ஃபோக்ஸ்வேகன் போலோ ஹைலைன் பிளஸ் காரில் உள்ள கூடுதல் அம்சங்கள்
- 16- இஞ்ச் அலாய் சக்கரங்கள்
- அடர் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான உள்கட்டமைப்பு
- உயர் ரக லெதரால் வேயப்பட்ட இருக்கைகள்
- ரெயின் -சென்சிங் வைபர்கள்
- ஒளிக்கு ஏற்றவாறு இயங்கும் ரியர்வியூ கண்னாடி
- முன்பக்க பகுதியில் மத்தியில் அமைக்கப்பட்ட ஆர்ம்ரெஸ்ட் உள்ளது
- இவற்றுடன் ஏசி வென்டுகள் இடம்பெற்றுள்ளன

கூடுதலான இந்த வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் அம்சங்களுடன் டூயல் ஏர்பேகுகள், ஏபிஸ், ஆன்டி-பிஞ்ச் பவர் ஜன்னல்கள், க்ரூஸ் கன்ட்ரோல்,

தானாக இயங்கும் ஏசி, மின்சாரத்தால் இயங்கும் ஓ.ஆர்.வி.எம், தொடுதிரைக்கொண்ட இன்ஃபொடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு போன்ற அமைப்புகள் இந்த காரில் உள்ளன.
Recommended Video


பெட்ரோல், டீசல் ஆகிய தேர்வுகளில் வெளிவரும் இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் ஏஸ்பிரேடட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் உள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஹை-லைன் பிளஸ் காரின் பெட்ரோல் வேரியன்ட் மூலம் 74 பிஎச்பி பவர் மற்றும் 110 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். அதேபோல டீசல் தேர்வு கொண்ட எஞ்சின் மூலம் 89 பிஎச்பி பவர் மற்றும் 230 என்.எம் டார்க் திறன் கிடைக்கும். இந்த காரின் இரண்டு எஞ்சின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

இந்தியாவில் விற்பனையில் உள்ள என்ட்ரி-லெவல் கார்களில் ஃபோக்ஸ்வேகன் கார் தனது போலோ மாடலை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

தற்போது விற்பனைக்கு வந்துள்ள போலோ காரில் இடம்பெற்றுள்ள இந்த கூடுதல் அம்சங்கள் போலோவிற்கான சந்தை நிலவரத்தை மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








