அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்கள் தேர்வில் இந்தியாவிலேயே இந்தக் காருக்கு தான் முதல் இடம்..!!
அனைத்து அம்சங்களிலும் வாடிக்கையாளர்கள் தேர்வில் இந்தியாவிலேயே இந்தக் காருக்கு தான் முதல் இடம்..!!
இந்திய கார் வாடிக்கையாளர்கள் எந்தக் காரை அதிகம் விரும்புகின்றனர் என்பது குறித்து அறிந்துகொள்ள ஜேடி பவர் நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வுநடத்தியுள்ளது.

‘2016 இந்தியா இனிஷியல் குவாலிட்டி ஸ்டடி' என்ற பெயரிலானஇந்த ஆய்வில், புதிதாக கார் வாங்கியவர்கள், கார்களில் இரண்டு முதல் 6 மாதங்களில் எந்த வகையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் என்று இதில் ஆராயப்பட்டது.

நாடு முழுவதும் 30 நகரங்களில் 8,330 வாகன உரிமையாளர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

8 வகையான வாகன வகையினங்களில், இஞ்சின் & கியர்பாக்ஸ், வாகனம் ஓட்டும் அனுபவம், ஏசி காற்றோட்டம், ஹீட்டிங், கண்ட்ரோல்கள், டிஸ்பிளே, எக்ஸ்டீரியர், ஆடியோ & பொழுதுபோக்கு, சிறப்பு அம்சங்கள், சீட்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட அம்சங்கள் இந்த ஆய்வில் கணக்கில் கொள்ளப்பட்டன.

இந்த ஆய்வில் 100 வாகனங்களுக்கு / பிரச்சனைகள் என்ற அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது.
இதில் குறைந்த மதிப்பெண் பெரும் காரில் குறைந்த அளவே பிரச்சனைகள் உள்ளதென்றும், அதிக மதிப்பெண் பெரும் காரில் அதிக பிரச்சனைகள் உள்ளதென்றும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜேடி பவர் நடத்திய இந்த ஆய்வு முடிவில் பிரீமியம் காம்பாக்ட் ஹேட்ச்பேக் செக்மெண்ட் கார்களில் 55/100 மதிப்பெண்களை பெற்றுள்ளது ஃபோக்ஸ்வேகன் போலோ கார்.

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டைக் காட்டிலும் அதிகமான மதிப்பெண்களை போலோ கார்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட் 89/100 என்ற தரநிலையை பெற்ற நிலையில், ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறை 95/100 என்ற மதிப்பெண்ணை பெற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

ஜெர்மனியைச் சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போலோ ஹேட்ச்பேக் கார்களை கடந்த 1975ம் ஆண்டு முதல் தயாரித்து வருகிறது. உலகின் பல சந்தைகளில் இந்தக் கார் விற்பனையில் உள்ளது,

பெர்ஃபார்மன்ஸ் மட்டும் அல்லாமல் பில்டு குவாலிட்டியிலும் இந்தக் கார்கள் சிறந்து விளங்குகின்றன. 40 ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ள போலோ கார்கள் மீது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








