ரூ. 55.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த புதிய வால்வோ எக்ஸ்.சி 60 எஸ்யூவி கார்..!!
ரூ. 55.90 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த புதிய வால்வோ எக்ஸ்.சி 60 எஸ்யூவி கார்..!!
வால்வோ நிறுவனத்தின் எக்ஸ்.சி 60 எஸ்யூவி கார் ரூ.55. 90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் மிகவும் எதிர்பார்ப்பில் இருந்து வந்த இந்த கார் விற்பனைக்கு வந்திருப்பது, வால்வோ வாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

ஸ்கேலபிள் ப்ராடக்ட் ஆர்கிடெக்ச்சர் என்ற பிளாட்ஃபாரமின் கீழ் தயாராகியுள்ள இந்த ப்ரீமியம் தர கார், இன்ஸ்கிரிப்ஷன் என்ற ஒரே வேரியண்டாக மட்டும் வெளிவந்துள்ளது.

எக்ஸ்.சி 60 காரின் இரண்டாம் தலைமுறை மாடலாக வெளிவந்துள்ள இந்த கார் ஆடி கியூ5, பிஎம்டபுள்யூ எக்ஸ்3, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

மேலும் ஜாகுவார் எஃப்-ஃபேஸ் மற்றும் அடுத்து வெளிவரவுள்ள லெக்சஸ் என்.எக்ஸ் 300 ஹெச் கார்களுக்கும் வால்வோ எக்ஸ்.சி 60 கார் போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டில் தான் வால்வோ நிறுவனம் எக்ஸ்.சி 60 காரை இந்தியாவில் களமிறக்கியது. தற்போது புதிய தலைமுறையாக கார் 7 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது.

1969சிசி 4 சிலிண்டர் ட்வின் டர்போசார்ஜிடு டீசல் எஞ்சினை பெற்றுள்ள இந்த கார், 233 பிஎச்பி பவர் மற்றும் 480 என்.எம் டார்க் திறனை வழங்கும்.
4 வீல் டிரைவிங் திறனை பெற்றுள்ள இந்த கார் 8-ஸ்பீடு கியர்டிரானிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதியை பெற்றுள்ளது.

இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் விற்பனையாகும் எக்ஸ்.சி 60 காரில் வால்வோ நிறுவனம் 2.0 லிட்டர் டர்போசார்ஜிடு டி5 மற்றும் டி6 பெட்ரோல் எஞ்சின்கள் என பல வேரியண்டுகளில் விற்பனை செய்து வருகிறது.

என்ட்ரி-லெவல் டீசல் மாடல் கார்களில் டி4 எஞ்சின் உள்ளது. எனினும் இவற்றில் எந்த வேரியண்டும் தற்போது இந்தியாவில் வெளியிடப்படவில்லை.

பழைய மாடல்களுடன் ஒப்படும் போது புதிய எக்ஸ்.சி 60 மாடல் வால்வோவின் மற்றொரு காரான எக்ஸ்.சி90 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை தருகிறது.

புதிய வால்வோ XC60 வால்வோவின் சிக்னேச்சர் மல்டி-ஸ்லாட் க்ரோம் கிரில், எல்இடி ஹெட்லேம்ப், தார் ஹேமர் பகலில் எரியும் எல்இடி லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

4688மிமீ நீளம், 1902மிமீ அகலம் மற்றும் 1658 மிமீ உயரம் கொண்ட புதிய வால்வோ எக்ஸ்.சி 60 காரின் வீல்பேஸ் 2865 மிமீ.
ஸ்டைலிஷான அலாய் சக்கரங்களை பெற்றுள்ள இந்த கார், நேர்த்தியான மற்றும் மேம்பட்ட தரத்தில் காட்சியளிக்கிறது.

மசாஜ் செய்யும் வசதியுடன் கூடிய காரின் முன்பக்க இருக்கை, 360 டிகிரி கேமரா, பிளைண்டு ஸ்பாட் அசிஸ்ட், செமி-ஆட்டோமேட்டிக் பார்க்கிங் மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங் போன்ற கவர்ந்திழுக்கும் தொழில்நுட்பங்களில் அசரடிக்கிறது.

ப்ரீமியம் அம்சங்கள், ஸ்டைலான அதேசமயத்தில் ஆடம்பரமான தேவைகளுடன் வால்வோ எக்ஸ்.சி 60 கார் களமிறங்கியுள்ளது.

மிகவும் சவாலான விலையில் வந்துள்ள இந்த கார் ஜெர்மன் நாட்டின் தயாரிப்புகளுக்கு உள்ள மேம்பட்ட அம்சத்தை தொடர்ந்து தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








