பெட்ரோல், டீசல் கார்களுக்கு விடைக்கொடுக்க தயாராகி வரும் உலக நாடுகள்..!!

பெட்ரோல், டீசல் கார்களுக்கு விடைக்கொடுக்க தயாராகி வரும் உலக நாடுகள்..!!

By Azhagar

பெட்ரோல், டீசல் எரிவாயுக்களால் இயங்கும் வாகனங்களை விரைவில் பல நாடுகள் கைவிடவுள்ளன. இதில் முதற்கட்டமாக மின்சார ஆற்றலில் இயங்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

பெரும்பாலான நாடுகள் தங்களது சுற்றுச்சூழல், புகை மாசு, சுகதார சீர்கேடு ஆகியவற்றில் மிகுந்த ஆக்கறை வைத்திருக்கின்றன.

சுகதார நலனை மீட்டெடுக்கும் முயற்சியாகத்தான் வாகன துறையில் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரவுள்ளது.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

வாகனங்களில் இருந்து வெளியேறும், நைட்ரஜன் டைஆக்சைடு (NO2) நச்சுப்புகையை கடந்த மாதத்தில் பெருவாரியாக குறைத்து காட்டியது ஃபிரான்ஸ்.

Recommended Video

Tata Nexon: Tata's New SUV (Nexon) For India | First Look - DriveSpark
பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

இதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அரசு 2040ம் ஆண்டிற்குள் அனைத்து பெட்ரோல், டீசல் கார்களின் பயன்பாட்டை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

தனது பெய்ஜீங் தலைநகரை மாசு குறைப்பாட்டிற்கு தாரை வார்த்துவிட்ட சீனாவோ, 2020ம் ஆண்டிற்குள் அனைத்து ரக வாகனங்களையும் மின்சாரம் அல்லது ஹைஃபிரிட் ஆற்றலுக்கு மாற்றவுள்ளது.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

வெளிநாடுகளில் மட்டுமல்லாமல், நமது இந்தியாவிலும் மாசு குறைப்பாட்டின் அளவு நாளுக்கு நாள் வாகனங்களால் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க இந்திய அரசு சீரிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என நாட்டில் உள்ள சமூக ஆர்வலர்கள் பலர் குரல்கொடுத்து வருகின்றனர்.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

மாசு குறைப்பாட்டை போக்க இந்தியாவும் இதில் தீவிரமான திட்டங்களை வைத்துள்ளது. அதில் குறிப்பாக வரும் 2030ம் ஆண்டிற்குள் நாட்டில் பெட்ரோல், டீசல் கார்களுக்கு விடைகொடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

மின்சார கார்களின் பயன்பாட்டை பல உலகநாடுகள் முன்னெடுக்க காரணம் நார்வே தான். 52 லட்சம் மக்கள்தொகை கொண்ட நார்வேயில், பெட்ரோல், டீசல் கார்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

பல எதிர்ப்புகள் கிளம்பிய போதும், மின்சார கார் பயன்பாட்டிற்கு அங்கு பெரியளவில் மக்களிடையே ஆதரவு பெருகியது. மக்களிடம் மின்சார கார்களுக்கான பயன்பாட்டை கொண்டு செல்ல நார்வே அரசு பல சலுகைகளையும் கொண்டு வந்தது.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

நார்வே அரசின் இந்த முயற்சிக்கு மக்கள் அளித்த வரவேற்பை வைத்து தான் மின்சார கார்களின் பயன்பாட்டை பல நாடுகள் முன்னெடுத்து வைத்திருக்கின்றன.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

பெட்ரோல், டீசல் இயங்குவதை மின்சார ஆற்றல் பெற்ற கார்களின் செலவு மிக மிக குறைவு. இது நடைமுறைக்கு வந்தால் பல தரப்பினரும் கார்களை வாங்கும் திறன் அதிகரிக்கும்.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

மின்சார ஆற்றலுக்காக மாறும் இங்கிலாந்து அரசின் அறிவிப்பிற்கு பல தரப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர். அதாவது மின்சாரத்தை கூடுதலாக உருவாக்க அரசு என்ன திட்டம் வைத்திருகிறது என்பது தான் அந்த கேள்வி.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

இங்கிலாந்திற்கு மட்டுமல்ல, பல உலக நாடுகளுக்கும் இதே கேள்வி தான். ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு இன்னும் 80 முதல் 100 வருடங்களுக்கே உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

அவற்றோடு இதை ஒப்பிட்டு பார்க்கும் போது, மின்சார ஆற்றலை உருவாக்கும் வகையிலான தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டமைப்புகள் அதிகப்படியாகவே உள்ளது என்பது பல நாடுகளின் எண்ணம்.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

இதை முன்னிறுத்தி தான், இன்று உலகளவில் முன்னணியில் உள்ள பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மற்றும் பல நாடுகள் மின்சார ஆற்றலை வாகனங்களுக்கு கொண்டு வர முயன்று வருகிறது.

பூமியில் இருந்து விரைவில் விடைபெறும் பெட்ரோல்,டீசல் கார்கள்

நாடுகளும், அரசும் முன்னெடுத்தாலும் மின்சார ஆற்றலால் வாகன இயக்கத்தை பெற்று அதை வெற்றியாக்கும் முயற்சி அந்தந்த நாட்டு குடிமக்களுக்கே உள்ளது என்பது தான் இந்த திட்டத்தின் பின்னணியில் இருக்கும் நிதர்சனம்.

Most Read Articles
English summary
Read in Tamil: World Gears Up to Say Goodbye to Petrol and Diesel Cars. Click for the Details...
Story first published: Friday, July 28, 2017, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X