குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்

இந்திய வாடிக்கையாளர்கள் பலரும், குறைவான விலையில் தரமான கார்களை எதிர்பார்ப்பவர்கள். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை கவர, குறைவான விலை கொண்ட கார்களிலும், பல்வேறு வசதிகளை கார் நிறுவனங்கள் வழங்குகின்றன.

By Arun

இந்திய வாடிக்கையாளர்கள் பலரும், குறைவான விலையில் தரமான கார்களை எதிர்பார்ப்பவர்கள். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களை கவரும் வகையில், குறைவான விலை கொண்ட கார்களிலும் கூட, தங்களால் முயன்ற அளவுக்கு, பல்வேறு வசதிகளை கார் உற்பத்தியாளர்கள் வழங்குகின்றனர். அப்படி இந்திய மார்க்கெட்டில் குறைவான விலையில் கிடைக்கும் தரமான 10 ஹேட்ச்பேக் வகை கார்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

ரெனால்டு க்விட்

ரூ.2.67 லட்சம் முதல் ரூ.4.64 லட்சம் வரை

இந்திய மார்க்கெட்டில் ரெனால்டு நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான பிராண்டு என்றால், அது க்விட்தான். இந்த செக்மெண்டில் கார் வாங்க விரும்புவர்களின் முதல் சாய்ஸ் ஆக க்விட் திகழ்கிறது. இந்த காரில் உள்ள டச் சென்சிடிவ் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்ற தனித்துவமான வசதிகள்தான் அதற்கு காரணம்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

க்விட் காரின் கேபின் ஸ்பேஸ் பெரியது. இந்த காரில் 799 சிசி மற்றும் 1.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஏஎம்டி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை ஒரு ஆப்ஷனலாக க்விட் பெற்றுள்ளது. இந்த கார் ஒரு லிட்டருக்கு 24.04 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கவல்லது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

க்விட் கார் ஆப்ஷனலாக டிரைவர் சைடு ஏர்பேக்கை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சாய்ஸ் ஆக கூட ஏபிஎஸ் வசதி இல்லை. வாடிக்கையாளர்கள் மத்தியில் ரெனால்டு க்விட் கார் குறித்து இருக்கும் ஒரே ஒரு குறை இது மட்டுமே.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

டாடா டியாகோ

ரூ.3.35 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை

இந்த செக்மெண்டில் அதிகம் விற்பனையாகும் மற்றும் பிரபலமான கார்களில் ஒன்றான டாடா டியாகோ, ஆர்வமூட்டும் பல தனித்துவமான வசதிகளை உள்ளடக்கியுள்ளது. எகோ மோடு உடன் டாடா டியாகோ கார் விற்பனைக்கு வருகிறது. இந்த செக்மெண்டில் இது ஒரு தனித்துவமான வசதிதான்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

இதுதவிர கனெக்ட் நெக்ஸ்ட் இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தையும் டாடா டியாகோ கார் பெற்றுள்ளது. இதனை ஸ்மார்ட் போன் உடன் கனெக்ட் செய்து கொள்ள முடியும். இதன்மூலமாக இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தில் நாவிகேஷனை பார்த்து கொள்ளலாம்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

டாடா டியாகோ காரில், ஏபிஎஸ் மற்றும் ஏர்பேக் வசதிகளும் உள்ளன. பொதுவாகவே டாடா நிறுவனத்தின் கார்கள் கொடுக்கும் பணத்திற்கு தரமானவைதான். அந்த வகையில்தான் டியாகோ காரும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

பெட்ரோல், டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் டாடா டியாகோ கார் கிடைக்கிறது. இந்த செக்மெண்டில் இது ஒரு அரிதான விஷயம். இதில், பெட்ரோல் வேரியண்ட் ஏஎம்டி ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

மாருதி சுசூகி செலிரியோ

ரூ.4.20 லட்சம் முதல் 5.38 லட்சம் வரை

மாருதி சுசூகி செலிரியோ லான்ச் செய்யப்பட்டபோது, இந்தியாவின் முதல் மலிவான ஏஎம்டி காராக இருந்தது. செலிரியோ வந்த பிறகுதான், மற்ற கார் உற்பத்தியாளர்கள் தங்கள் ஹேட்ச்பேக் கார்களில், ஏஎம்டி வெர்ஷனை கொண்டு வர முயற்சி செய்தனர்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

செலிரியோ காரில் உள்ள 5 ஸ்பீடு ஏஎம்டி ஆப்ஷன், ஸ்மூத்தான டிரைவிங் அனுபவத்தை கொடுக்கிறது. செலிரியோ எக்ஸ் என்ற இதன் மற்றொரு வேரியண்ட்டும் மார்க்கெட்டில் கிடைக்கிறது. ஆனால் ரெகுலர் வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், தோற்றத்தில் மட்டுமே செலிரியோ எக்ஸ் காரில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

மாருதி சுசூகி வேகன் ஆர்

ரூ.4.30 லட்சம் முதல் ரூ.5.50 லட்சம் வரை

2018ம் ஆண்டு மே மாதத்தில் அதிகம் விற்பனையான கார்களின் பட்டியலில், 5வது இடத்தை பிடித்தது வேகன் ஆர். 998 சிசி, 3 சிலிண்டர் பெட்ரோல் அல்லது சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனுடன் மாருதி சுசூகி வேகன் ஆர் கார் கிடைக்கிறது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 68 பிஎஸ் பவரையும் (சிஎன்ஜியில் 59 பிஎஸ்), 90 என்எம் டார்க் திறனையும் (சிஎன்ஜியில் 77 என்எம்) வழங்கவல்லது. இதன் டாப் எண்ட் வேரியண்ட்டான வேகன் ஆர் ஏஎம்டி விஎக்ஸ்ஐ ப்ளஸ் கார்தான், ரூ.5.50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

ஹூண்டாய் கிராண்ட் ஐ10

ரூ.4.70 லட்சம் முதல் ரூ.7.91 லட்சம் வரை

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 கார் , பெட்ரோல், டீசல், எல்பிஜி வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் ஆப்ஷனில் இந்த காரை தேர்வு செய்ய முடியும். டாடா டியாகோ, மாருதி செலிரியோ உள்ளிட்ட கார்களுக்கு இது கடும் போட்டியை வழங்குகிறது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

மாருதி ஸ்விப்ட்

ரூ.4.99 லட்சம் முதல் ரூ.8.29 லட்சம் வரை

மாருதி நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பாக, ஆல் நியூ ஸ்விப்ட் காரை இந்தியாவின் லான்ச் செய்தது. ஆல் நியூ ஸ்விப்ட் கார் தற்போது அதன் மூன்றாவது தலைமுறை ஸ்டேஜில் நுழைந்துள்ளது. ஸ்டாண்டர்டு ஏபிஎஸ் வசதி மாருதி ஸ்விப்ட் காரில் உள்ளது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

இதன் அனைத்து வேரியண்ட்களிலும், முன்பகுதியில் 2 ஏர் பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களுடனும் ஸ்விப்ட் கிடைக்கிறது. இந்த 2 மாடல்களும் ஏஎம்டி ஆட்டோமெட்டிக் ஆப்ஷனை பெற்றுள்ளன.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இன்டிக்ரேடட் டிஸ்ப்ளே உடனான ஏசி கன்ட்ரோல்ஸ் என பல வசதிகள் மாருதி ஸ்விப்ட் காரில் உள்ளன. மாருதி ஸ்விப்ட் காரின் கேபின் ஸ்பேஸ் கூட பெரியதுதான். இதில் உள்ள எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் வசதி கூட, இந்த செக்மெண்ட்டில் ஒரு தனித்துவமான வசதிதான்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

ஹூண்டாய் எலைட் ஐ20

ரூ.5.35 லட்சம் முதல் 9.22 லட்சம் வரை

அப்டேட் செய்யப்பட்ட எலைட் ஐ20 காரை, ஹூண்டாய் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்தான் இந்தயாவில் லான்ச் செய்தது. இந்தியாவில் மிகவும் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில், ஹூண்டாய் எலைட் ஐ20 காரும் ஒன்று.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் பேஸ் வேரியண்ட் கூட, 2 ஏர் பேக்குகள், ஏபிஎஸ், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், பவர் விண்டோஸ் உள்ளிட்ட வசதிகளை பெற்றுள்ளன. ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், கூல்டு க்ளவ் பாக்ஸ், ஸ்லைடிங் ஆர்ம்ரெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களையும் ஹூண்டாய் எலைட் ஐ20 கார் பெற்றுள்ளது. இதில், பெட்ரோல் வேரியண்ட் காரில், சிவிடி ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

போக்ஸ்வேகன் போலோ

ரூ.5.42 லட்சம் முதல் 9.69 லட்சம் வரை

ஜெர்மனி நிறுவனமான போக்ஸ்வேகனால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரே ஒரு ஹேட்ச்பேக் கார் போலோ மட்டும்தான். இதன் பெர்பார்மென்ஸ் மிக சிறப்பானதாக உள்ளது.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

போலோ கார், மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன்களுடன் இணைந்து, பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின் வேரியண்ட்களுடன் கிடைக்கிறது. போலோ ஜிடி டிஎஸ்ஐ (பெட்ரோல்) மற்றும் ஜிடி டிடிஐ (டீசல்) ஆகியவை போலோ காரின் ஸ்போர்ட்டியர் வெர்ஷன்களாகும்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

பலினோ ஆர்எஸ்

ரூ.8.45 லட்சம்

பலினோ ஆர்எஸ் கார், பிய்-செனான் ப்ரொஜெக்டர் லேம்ப்ஸ், டச் ஸ்கீரின் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 2 ஏர் பேக்குகள், ஏபிஎஸ் பல பல்வேறு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள பவர்புல் 1.0 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் 101 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

ஃபோர்டு ஃப்ரீஸ்டைல்

ரூ.5.09 லட்சம் முதல் 7.89 லட்சம் வரை

இந்த செக்மெண்ட்டின் லேட்டஸ்ட் என்ட்ரி ஃபோர்டு ஃப்ரீஸ்டைல். ஆனால் அதற்குள்ள சேல்ஸ் ச்சார்ட்டில், டாப் இடத்தை பிடித்துவிட்டது. விரைவில் லான்ச் ஆகவுள்ள பேஸ்லிப்டட் ஃபிகோ காரை அடிப்படையாக கொண்டதுதான் ஃபோர்டு ஃப்ரீ ஸ்டைல்.

குறைவான விலையில் நிறைவான தரம்... உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் தரமான 10 ஹேட்ச்பேக் கார்கள்..

எமர்ஜென்ஸி காலிங் சர்வீஸ் உள்பட பல்வேறு வசதிகளை ஃபோர்டு ஃப்ரீ ஸ்டைல் உள்ளடக்கியுள்ளது. ஆல் நியூ 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் ஃபோர்டு ஃப்ரீ ஸ்டைல் கார் கிடைக்கிறது. (கார்களின் விலை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

Most Read Articles
English summary
10 affordable hatchback cars in india:From Renault Kwid to Baleno RS-Read in tamil
Story first published: Monday, July 2, 2018, 11:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X