5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

சொந்தமாக புதிய கார் வாங்கி, அதில் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும், அவர்களுடன் உற்சாகமாக பயணிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது.

By Arun

சொந்தமாக புதிய கார் வாங்கி, அதில் குடும்பத்தினரையும், நண்பர்களையும் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும், அவர்களுடன் உற்சாகமாக பயணிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. ஆனால் அதற்கு தடையாக இருக்கும் ஒரே விஷயம் பட்ஜெட். குறைந்த விலையில் தரமான, சொகுசான, மனதுக்கு நிறைவான காரை வாங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கனவு. எனவே 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் என்னென்ன கார்களை வாங்க முடியும் என்பதை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

மாருதி சுசூகி இக்னிஸ்

இளமை ததும்பும் மாருதி சுசூகி இக்னிஸ் பார்ப்பதற்கு, மினி க்ராஸ்ஓவர் போல் காட்சியளிக்கும். புகழ்பெற்ற ஸ்விப்ட், டிசையர் மாடல்களில் வரும், அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இந்த காரிலும் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடூ மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட இக்னிஸ், 6,000 ஆர்பிஎம்மில் 81 பிஎஸ், 4,200 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

மாருதி சுசூகி இக்னிஸ், ஒரு லிட்டருக்கு 20.89 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். இந்த காரில், மேனுவல் ஏர் கண்டிஷனர், சென்ட்ரல் லாக்கிங், ப்ரண்ட் பவர் விண்டோஸ், ஆன்டி த்தெப்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

பயணிகளின் பாதுகாப்பிற்காக, காரின் முன்பகுதியில் 2 ஏர் பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), எலக்ட்ரானிக் ப்ரேக் போர்ஸ் டிஸ்டிரிபியூஷன் (இபிடி) உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப விலை 4.66 லட்ச ரூபாய்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

மாருதி சுசூகி ஸ்விப்ட்

இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஹேட்ச்பேக் கார் என்றால், அது மாருதி சுசூகி ஸ்விப்ட்தான். இதன் அடிப்படை எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டை மட்டும் 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் வாங்கலாம். இதில், ஏபிஎஸ், இபிடி, டிரைவர் மற்றும் பயணிகளுக்கான ஏர் பேக்குகள், ஆன்டி த்தெப்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

மாருதி சுசூகி ஸ்விப்ட் காரில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 82 பிஎஸ், 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இதன் ஆரம்ப விலை 4.99 லட்ச ரூபாய்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

ரெனால்டு க்விட்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ரெனால்டு நிறுவனத்தின் கார் க்விட்தான். இதற்கு முக்கிய காரணம், இதன் எஸ்யூவி போன்ற ஸ்டைல்தான். இதன் அடிப்படை வேரியண்ட் 0.8 லிட்டர் மேனுவல் மாடல் ஆகும். இந்த காரின் விலை 2.67 லட்ச ரூபாய். டாப் வேரியண்ட்டான 1.0 லிட்டர் ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (ஏஎம்டி) மாடல் 4.60 லட்ச ரூபாய்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

இப்படி ரெனால்டு க்விட் காரில் மொத்தம் 20 வேரியண்டுகள் உள்ளன. டாப் வேரியண்ட்டான க்விட் கிளம்பர் ஏஎம்டி, 5,500 ஆர்பிஎம்மில் 67 பிஎஸ், 4,250 ஆர்பிஎம்மில் 91 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த கார் ஒரு லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

ரெனால்டு க்விட் காரில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 7 இன்ச் டச் ஸ்க்ரீன், மீடியா என்ஏவி இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ப்ளூடூத் ஆடியோ ஸ்ட்ரீமிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 180 எம்எம்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

மாருதி செலிரியோ/ செலிரியோ எக்ஸ்

செலிரியோ கார் 12 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில், ஏறத்தாழ 6 வேரியண்ட்கள் 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்கு உள்ளேதான் வருகின்றன. அடிப்படை வேரியண்ட்டான 1.2 லிட்டர் மேனுவல் பெட்ரோலின் விலை 4.20 லட்ச ரூபாய். செலிரியோ விஎக்ஸ்ஐ ஏஎம்டி 4.96 லட்ச ரூபாய்க்கும், எம்டி பெட்ரோல் 4.78 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கிறது.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

ப்ளூடூத் உடனான ஆடியோ சிஸ்டம், ஏயூஎக்ஸ்-ஐஎன் மற்றும் யுஎஸ்பி கனெக்டிவிட்டி, டிரைவர் சீட்டிற்கு ஏர்பேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இதன் கிரவுண்ட் க்ளியரன்ஸ் 165 எம்எம்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

ஹேட்ச்பேக் காரான இதில், கே10பி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 67 பிஎஸ் மற்றும் 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒரு லிட்டருக்கு 23 கிலோ மீட்டர் மைலேஜ் தரும். டாப் ஸ்பீடு மணிக்கு 150 கிலோ மீட்டர்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

செலிரியோ எக்ஸ் காரானது, க்ராஸ்ஓவர் வெர்ஷன் ஆகும். ப்ளாக் அலாய் வீல்கள், ஆட்டோ கியர் ஷிப்ட், முன் பகுதியில் இரண்டு ஏர் பேக்குகள், ரூப் ரெய்ல்ஸ், பின் பக்க ஸ்பாய்லர் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் வரும் இந்த காரின் விலை 4.62 லட்ச ரூபாய்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

ஹுண்டாய் கிராண்ட் ஐ10

ஸ்போர்ட் லுக் தரக்கூடிய, ஹுண்டாய் கிராண்ட் ஐ10 காரின் ஆரம்ப விலை 4.7 லட்சம் மட்டுமே. பவர் ஸ்டியரிங், ஃப்ரண்ட் பவர் விண்டோஸ், டிரைவர் சீட்டிற்கு ஏர்பேக், ஆன்டி த்தெப்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

இதன் 1.2 லிட்டர் கப்பா விடிவிடி பெட்ரோல் இன்ஜின், 6,000 ஆர்பிஎம்மில் 82 பிஎஸ், 4,000 ஆர்பிஎம்மில் 113 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த கார் ஒரு லிட்டருக்கு 18.9 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

மாருதி சுசூகி வேகனார்

கடந்த 1999ம் ஆண்டில் இருந்து இந்திய சாலைகள் வேகனார் காரை பார்த்து கொண்டிருக்கின்றன. ஆனால் இன்னமும் கம்பீரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 5 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷனை வேகனார் வழங்குகிறது.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

அடிப்படை வேரியண்டில் பொருத்தப்பட்டுள்ள எல்எக்ஸ்ஐ 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 67 பிஎஸ், 90 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கார்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

வேகனார் ஏஎம்டியும் இதே வசதிகளுடன்தான் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 4.88 லட்ச ரூபாய். ட்யூயல் டோன் இன்டீரியர், அலாய் வீல்கள், கியர் ஷிப்ட் இன்டிகேட்டர், ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. வேகனார் காரின் ஆரம்ப விலை 4.15 லட்சம் மட்டுமே.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

மாருதி சுசூகி ஆல்டோ 800/ கே 10

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பட்ஜெட் கார் ஆல்டோ 800தான். இதன் அடிப்படையான பெட்ரோல் மாடலின் விலை 2.51 லட்சம்தான். இந்த காரின் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி வேரியண்ட்டின் விலை 3.78 லட்சம்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

ஆல்டோ 800 காரில் பொருத்தப்பட்டுள்ள 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான எப்8 டி பெட்ரோல் இன்ஜின், 47 பிஎஸ், 69 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

அதே நேரத்தில் இதன் சிஎன்ஜி வேரியண்ட், 40 பிஎஸ், 60 என்எம் டார்க் திறனை உருவாக்கும். டாப் வேரியண்ட்டான விஎக்ஸ்ஐ (ஓ) காரில், பவர் ஸ்டியரிங், ரிமோட் ட்ரங்க் ஓபனர், ஏசி, ஃப்ரண்ட் பவர் விண்டோஸ், டியூயல் டிரிப் மீட்டர், டிரைவர் சீட்டிற்கு ஏர் பேக் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

அதிக சக்தி வாய்ந்த கே10 காரில் பொருத்தப்பட்டுள்ள கே சீரீஸ் இன்ஜின் 20 பிஎஸ் மற்றும் 21 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த காரில், இரண்டு ஸ்பீக்கர்கள் உடனான ஆடியோ என்டர்டெயின்மெண்ட் சிஸ்டம், கியர் ஷிப்ட் இன்டிகேட்டர் உள்ளிட்ட கூடுதல் வசதிகளும் உள்ளன.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

மகேந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி

மலிவான விலையில் மார்க்கெட்டில் கிடைக்க கூடிய கச்சிதமான எஸ்யூவி கார்களில் மகேந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி காரும் ஒன்று. ட்யூயல் டோன் எக்ஸ்டீரியர்கள், க்ளியர் லென்ஸ் டெயில் லேம்ப்கள், இந்த காருக்கு மேலும் அழகூட்டுகின்றன.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

இந்த காரின் அடிப்படை வேரியண்ட் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. இது 82 பிஎஸ், 115 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் காரான இது, ஒரு லிட்டருக்கு 18 கிலோ மீட்டர் மைலேஜ் தரக்கூடியது. இதில், இபிஎஸ், இபிடி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் உள்ளன. இதன் ஆரம்ப விலை 4.5 லட்ச ரூபாய்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

டட்சன் ரெடி கோ

பட்ஜெட் ப்ரெண்ட்லியான காராக டட்சன் ரெடி கோ பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படை வேரியண்ட், 799 சிசி ஐ-சேட் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. 5 ஸ்பீடு மேனுவல் காரான இதன் ஆரம்ப விலை 2.50 லட்சம் மட்டுமே.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

டட்சன் ரெடி கோ காரின் டாப் வேரியண்ட், 1.01 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனைக்கு வருகிறது. 5 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் காரான இதன் விலை 4.06 லட்சம். லிட்டருக்கு 22 கிலோ மீட்டர் மைலேஜ் கிடைக்கும்.

5 லட்சத்திற்குள் கிடைக்கும் அற்புதமான கார்களின் பட்டியல்... புதிய கார் கனவை எளிதாக நிறைவேற்றலாம்...

பவர் ஸ்டீயரிங், டிஆர்எல்எஸ் (பகல் நேரத்திலும் எரியும் விளக்குகள்), ஏசி, ப்ரண்ட் பவர் விண்டோஸ், டேக்கோ மீட்டர், ட்யூயல் டிரிப் மீட்டர், டிரைவர் சீட்டிற்கான ஏர்பேக் உள்ளிட்ட வசதிகள் இந்த காரில் உள்ளன.

Most Read Articles
English summary
10 cars you can buy under Rs 5 lakh. read in tamil.
Story first published: Saturday, May 19, 2018, 11:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X