மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

சீனா என்றால் காப்பியடிப்பதும் டுப்பிளிகேட்டை தாயாரிப்பதும் தான் முதலில் நமது நினைவுக்கு வருகிறது. அவர்கள் எல்லா தயாரிப்புகளையும் காப்பியடிப்பது, அதே போன்ற ஒரு டுப்ளிகேட் பொருளை தயாரித்து சந்தையில் ம

By Balasubramanian

சீனா என்றால் காப்பியடிப்பதும் டுப்பிளிகேட்டை தாயாரிப்பதும் தான் முதலில் நமது நினைவுக்கு வருகிறது. அவர்கள் எல்லா தயாரிப்புகளையும் காப்பியடிப்பது, அதே போன்ற ஒரு டுப்ளிகேட் பொருளை தயாரித்து சந்தையில் மிக குறைந்தவிலையில் விற்பனைக்கு கொண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

சீனர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக இதே வேலையை செய்து வருவதால் மார்கெட்டில் இது ஒரிஜினல் பொருள் இது சீனா பொருள் என்ற வித்தியாசத்தை கண்டு பிடிக்க துவங்கிவிட்டனர். தற்போது ஒரிஜினல் என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லே சீனா என்று சொல்லும் அளவிற்கு இந்த பேச்சு வளர்ந்து விட்டது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

இப்படி எல்லா துறையில் உள்ள பொருட்களையும் காப்பியடித்து வரும் சீனர்கள் நமது ஆட்டோமொபைல் துறையை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன? அங்கு தயாரிக்கப்படும் கார்கள், மற்றும் பைக்குகளின் தோன்றத்தை போன்றே டுப்ளிகேட்டை தயார் செய்து வருகின்றனர். இப்படியாக சீனா காப்பியடித்த மாருதி 800 காரில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார் வரை உள்ள டாப் 10 பட்டியலை கீழே காணலாம்.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

கிலே ஜிஇ Vs ரோல் ராய்ஸ் பாந்தோம்

உலகின் மிக அதிக விலைக்கொண்ட ஆடம்பர கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் மிக முக்கிய இடத்தில் இருக்கும் நிறுவனம் ரோல் ராய்ஸ். இந்த நிறவனத்தின் பாந்தோம் மாடல் காரை கிலே ஜிஇ என்ற பெயரில் காப்பியடித்து விற்பனை செய்து வருகின்றனர். சீனர்கள்.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

இந்த காரில் ரோல் ராய்ஸ் என்ற தனித்துவ டிசைன்களான முகப்பு பக்க கிரில், ஹெட்லைட், ஏன் காரின் முன் பக்கம் உள்ள ஹூட் ஆர்னமெண்டையும் காப்பியடித்துள்ளது. ரோல்ராய்ஸ் நிறுவனம் இதை ஸ்பிரிட் ஆப் எஸ்டெஸி என்ற பெயரில் பெருமையாக பொருத்தும் ஒரு அலங்கார பொருள். ஒரிஜின் பாந்தோம் காரில் 6.75 லிட்டர் வி 12 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஜிஇ யில் 3.5 லிட்டர் வி6 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

ஏமா பி11 Vs பிஎம்டபிள்யூ ஐ3

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெகட்ரிக் ஹெட்ச் பேக் காரான ஐ3 காரை காப்பியடித்துள்ளது. அந்நாட்டில் விற்பனையாகும் ஏமா பி11 என்ற கார்கள் பிஎம்டபிள்யூ ஐ3 போன்றே அப்பட்டமாக காட்சியளிக்கிறது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

பிஎம்டபிள்யூ ஐ3 கார் முழுவதுமாக பவர்டெரைன் இன்ஜினை கொண்டது. பி11 காரும் எலெக்ட்ரிக் தான் ஆனால் எலெக்ட்ரிக்-ஹைபிரிட் டெரைனை கொண்டு. ஆனால் ஐ3 காரில் உள்ள பிரிமியமை லுக்கை பி11 காரில் ஒரு இடத்தில் கூட பார்க்க முடியவில்லை.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

சான் லிங்சுவான் Vs டொயோட்டா இன்னோவா

நம்மூரில் பலர் மாருதி எர்டிகா காரின் லுக் டொயோட்டா இன்னோவா காரை போலவே இருக்கிறது என விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்கள் எல்லாம் சீனாவின் சான் லிங்சுவான் காரை பார்த்தால் என்ன சொல்லுவார்கள். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எம்பிவி ரக காரான இன்னேவாவையும் அவர்கள் காப்பியடித்துள்ளனர்.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

இந்த கார் இன்னோவாவை போன் அதே தோற்றத்தில்தான் இருக்கிறது. ஆனால் அதை விட விலை மிகக்குறைவு, காரின் பக்கவாட்டு பகுதி இன்னோகாரின் டிசைனில் நூல் அளவு கூட மாறாத படி ஈ அடிச்சான் காப்பி செய்து வைத்திருக்கிறார்கள் சீனர்கள்.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

ஜியாங்னன் டிடி Vs மாருதி 800

இந்தியாவிங் சிறிய ரக மற்றும் விலை குறைந்த காரில் பெரும் வெற்றியை பெற்ற கார் மாருதி 800 தான். இந்த காரை சீன கார் தயாரிப்பாளரான ஜூவாய்டி என்ற நிறுவனம் காப்பியடித்துள்ளது. ஆனால் இதை காப்பியடிக்க சுசூகி நிறுவனத்திடம் நிபந்தனைகளின் பெயரில் அனுமதி வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

மாருதி 800 இன்று மார்கெட்டில் விற்பனையாவதில்லை. ஏற்கனவே ஒருவர் பராமரித்து வரும் மாருதி 800 காரை நாம் வாங்கினால் தான் உண்டு. ஆனால் சீனாவில் இன்னுமும் ஜூவாய்டி கார் நிறுவனம் இந்த காரின் காப்பியடிக்கப்பட்ட டிசைனான ஜியாங்னன் காரை விற்பனை செய்து வருகிறது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

கிலே மெர்ரி 300 Vs மெர்ஸிடியஸ் பென்ஸ் சி கிளாஸ்

மெர்ஸிடியஸ் பென்ஸ் சி கிளாஸ் காரின் முந்தைய தலைமுறை மாடலை காப்பியடித்து கிலோ மெர்ரி 300 என்ற காரை விற்பனை செய்து வருகின்றனர். இந்த கார் ஒரிஜினல் காரை விட மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. பென்ஸ் காரை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்றால் இதை நீங்கள் பயன்படுத்தலாம்.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

டயபிலோ விடி Vs லாம்போர்கினி டயபிலோ

உலகின் மிக பிரபலமான சூப்பர் காரான லாம்போர்கினி டயபலோ காரின் டிசைனை மட்டும் அல்ல காரின் பெயரையும் சீனர்கள் காப்பியடித்துள்ளது. டயபலோ என்ற பெயரில் ஒரு நிறுவனத்தை துவங்கி அந்நிறுவனம் சார்பில் விடி என்ற காரை தயாரித்து விற்பனை செய்கின்றனர். அந்த கார் பார்ப்பதற்கு அச்சு அசல் லாம்போர்கினி டயபலோ காரை போன்றே தோற்றம் அளிக்கிறது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

இந்த காரை தயாரித்து விட்டு சீனாவில் முதல் சூப்பர் கார் தயரித்த நிறுவனம் என்று அந்நாட்டில் அவர்களே பெருமையடித்து கொள்கின்றனர். இந்த காரில் டொயோட்டா செக்யூர்டு, வி8 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 450 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும்

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

விக்டரி எஸ் 10 Vsகாடிலாக் எஸ்கலேடு

கார்லாக் எஸ்கலேடு என்பது அமெரிக்காவில் விற்பனையாகி வரும் ஆடம்பர எஸ்யூவி கார். இந்த காரை காப்பியடித்த சீனர்கள் இந்த காரின் உள்ள அனைத்தையும் அச்சு அசலாக காப்பியடித்து விட்டனர். இந்த காரின் ஒரிஜினல் மற்றும் டுப்ளிகேட் கார்கள்களில் 2.0 லிட்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 116 பி.எச்.பி பவரை வெளிப்படுத்தக்ககூடியது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

சுஷோசு ஈகிள் கேரீ Vs போர்ஸே கேமேன்

போர்ஸே நிறுவனத்தின் கேமேன் என்ற பிரபலமான காரையும் சீனர்கள் காப்பிடியத்துள்ளனர். இந்த காருக்கு சுஷோசு ஈகிள் கேரீ என்ற பெயரிட்டு விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் ஒரிஜினல் கேமேன் காரும் ஃபெராரி காரின் காப்பிய என்ற பேச்சும் நிலவுகிறது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

காப்பியடித்த காரையே காப்பியடித்தவர்கள் சீனர்கள் தான் போல. இந்த கார் எலெக்ட்ரிக் பவர்டெரைன் இன்ஜினை கொண்டது.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

ஹூண்காய் அரோரா Vs ஷாங்யாங் ரெக்ஸ்டான்

புதிய தலை முறை ஷாங்யாங் ரெக்ஸ்டான் என்ற கொரிய நிறுவனத்தின் காரை ஹூண்காய் அரோரா என்ற பெயரில் சீனர்கள் காப்பியடித்துள்ளது. ரெக்ஸ்டான் காரை முதன் முதலில் மஹேந்திரா நிறுவனம கொரிய நிறுவனத்தை வாங்கிய பின்பு தயாரிக்கப்பட்ட கார்.

மாருதி 800 முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை சீனர்கள் செய்யும் ஈ அடிச்சான் காப்பி

ஹூண்காய் சியூவி Vs ஹூண்டாய் சாண்டா எப்இ

ஹூண்டாய் நிறுவனத்தின் எஸஅயதுவி கார் மாடலான சாண்டா எப்இ என்ற காரின் மாடலை ஹூண்காய் சியூவி என்ற பெயரில் சீனர்கள் காப்பியுள்டித்துள்ளது. காப்பியடிக்கப்பட்ட காரின் முகப்பு பகுதி ஒரு கொரியன் காரின் மாடல் போலவும் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
10 copycat cars from China: Rolls Royce Phantom to mauthi 800.Read in Tamil
Story first published: Monday, May 28, 2018, 12:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X