புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஆடி க்யூ5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆடி க்யூ 450 TFSI என்ற பெயரில் இந்த புதிய பெட்ரோல் மாடல் வந்துல்ளது.

By Saravana Rajan

புதிய ஆடி க்யூ5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விபரங்களை இந்த செய்தியில் விரிவாக காணலாம்.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

கடந்த ஜனவரியில் புதிய ஆடி க்யூ5 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், டீசல் மாடலில் மட்டுமே வந்தது. இந்த நிலையில், தற்போது புதிய ஆடி க்யூ5 எஸ்யூவியின் பெட்ரோல் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஆடி க்யூ 450 TFSI என்ற பெயரில் இந்த புதிய பெட்ரோல் மாடல் வந்துல்ளது. ஆடி க்யூ7 காரில் பயன்படுத்தப்படும் அதே 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் இந்த மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 250 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

புதிய ஆடி க்யூ5 எஸ்யூவியில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆடி நிறுவனத்தின் பிரபலமான க்வாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் பெட்ரோல் மாடலில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஏற்கனவே வந்த ஆடி க்யூ5 எஸ்யூவியின் 35 டிடிஐ என்ற டீசல் மாடலுக்கும் தற்போது வந்துள்ள புதிய 45 TFSI பெட்ரோல் மாடலுக்கும் தோற்றத்தில் வித்தியாசம் எதுவும் இல்லை. பேட்ஜ் மட்டுமே வித்தியாசப்படுகிறது. மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், 5 ஸ்போக் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

டீசல் மாடலில் இருப்பது போலவே, இந்த பெட்ரோல் மாடலின் உட்புறத்தில் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்திலான இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டு, சென்டர் கன்சோலில் மென்மையான தொடு உணர்வை தரும் உயர்தர பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் 8.3 அங்குல திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த சிஸ்டம் கூகுள் எர்த் சாஃப்ட்வேருடன் இணைக்கப்பட்டு இருக்கிறது. தொடுதிரை வசதி இல்லாமல், ரோட்டரி நாப் மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை கட்டுப்படுத்தும் வசதி உள்ளது.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

இந்த காரில் பேங்க் அண்ட் ஒலுப்சென் 3டி சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் 12.3 அங்குல திரையுடன் கூடிய விர்ச்சுவல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சராசரி மைலேஜ், எரிபொருளில் செல்லும் தூரம், சராசரி வேகம், வரைபட தகவல் மற்றும் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை அளிக்கும்.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி வாய்ஸ் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜ் வசதி, 10 ஜிபி ஸ்டோரேஜ் வசதி, 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என ஏராளமான வசதிகள் உள்ளன.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

பார்க் அசிஸ்ட் வசதி, கண்ணுக்கு புலப்படாத பகுதியில் இருக்கும் தடைகள், வாகனங்கள் குறித்து எச்சரிக்கும் பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் சிஸ்டம், ஆபத்தை உணர்ந்து செயல்படும் மோதல் தவிர்ப்பு தொழில்நுட்பம், ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை.

புதிய ஆடி க்யூ5 பெட்ரோல் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!!

ஆடி க்யூ5 எஸ்யூவியின் இந்த புதிய பெட்ரோல் மாடல் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும். டெக்னாலஜி வேரியண்ட் ரூ.55.27 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், பிரிமியம் ப்ளஸ் வேரியண்ட் ரூ.59.79 லட்சம் விலையிலும் கிடைக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி, பிஎம்டபிள்யூ எக்ஸ் 3 எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 28, 2018, 13:46 [IST]
English summary
2018 Audi Q5 Petrol SUV Launched In India.
மேலும்... #ஆடி #audi
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+