ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.77 லட

By Saravana Rajan

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

ஹூண்டாய் எலைட் ஐ20 காரின் அடிப்படையிலான க்ராஸ்ஓவர் ரக மாடல்தான் ஐ20 ஆக்டிவ். அண்மையில் புதுப்பொலிவு பெற்ற ஹூண்டாய் எலைட் ஐ20 கார் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

இந்த நிலையில், தற்போது அதன் அடிப்படையிலான ஐ20 ஆக்டிவ் காரும் புதுப்பொலிவுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. தோற்றத்தில் பழைய மாடலைப் போன்றே இருக்கிறது. ஆனால், சில கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் புதிய இரட்டை வண்ணக் கலவையில் வந்துள்ளது. மரினா புளூ என்ற வண்ணத்தில் போலார் ஒயிட் என்ற வெள்ளை வண்ணக் கூரையுடன் விற்பனைக்கு கிடைக்கும். இந்த கலர் ஐ20 ஆக்டிவ் காரின் டாப் வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும்.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

இதுதவிர்த்து, சிவப்பு, ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ணக் கலவை, வெள்ளை - கருப்பு வண்ணக் கலவைகளில் கிடைக்கும். வெளிப்புற வண்ணத்திற்கு ஏற்ப உட்புற பாகங்களில் அதே வண்ண அலங்காரங்கள் கவர்ச்சியாக இருக்கிறது.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் காரின் பூட் ரூம் கதவில் புதிய ஆக்டிவ் பேட்ஜ் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த காரில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கூடுதல் சிறப்புகளுடன் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

அர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு மொபைல் செயலி அடிப்படையில் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் கொடுக்கப்படுகிறது. முன்பக்க இருக்கைகளுக்கு இடையிலான புதிய ஆர்ம் ரெஸ்ட்டில் கப் ஹோல்டர்கள் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

டாப் வேரியண்ட்டில் சைல்டு சீட் பொருத்துவதற்கான ஐசோஃபிக்ஸ் ஆங்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த வசதிகளும் தக்க வைக்கப்பட்டுள்ளன.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

சில தினங்களுக்கு முன் ஐரோப்பிய மார்க்கெட்டிற்கான ஐ20 ஆக்டிவ் கார் வெளியிடப்பட்டது. அதில், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. பின்பக்க நம்பர் பிளேட் அமைவிடத்திலும் மாறுதல் இருந்தது.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

ஆனால், அவை இந்திய மாடலில் இல்லை என்பது ஏமாற்றம். புதிய ஐ20 ஆக்டிவ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், டீசல் மாடலில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும் கொடுக்ககப்பட்டு இருக்கின்றன.

 ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வந்தது: முழு விபரம்!!

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் ரூ.6.99 லட்சம் முதல் ரூ.9.77 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். அண்மையில் வந்த ஃபோர்டு ஃப்ரீஸ்டைல், ஹோண்டா டபிள்யூஆர்வி, ஃபியட் அவென்ச்சுரா, டொயோட்டா எட்டியோஸ் க்ராஸ் ஆகிய கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Article Published On: Wednesday, May 2, 2018, 10:12 [IST]
English summary
2018 Hyundai i20 Active Facelift launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+