2018 ஜாகுவார் எஃப் டைப் காரின் புதிய மாடல் அறிமுகம்: ரூ.40 லட்சம் விலை குறைவு!!
ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் மாடலானது இந்தியாவில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 எஞ்சின் கொண்ட மாடலிலும், 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் கொண்ட மாடலிலும் கிடைத்து வருகிறது. இந்த நிலை
புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சினுடன் 2018 ஜாகுவார் எஃப் டைப் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மிக சவாலான விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய மாடல் குறித்து விரிவானத் தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ஜாகுவார் எஃப் டைப் ஸ்போர்ட்ஸ் கார் மாடலானது இந்தியாவில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 எஞ்சின் கொண்ட மாடலிலும், 5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 எஞ்சின் கொண்ட மாடலிலும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில், தற்போது 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்ட 2018 ஜாகுவார் எஃப் டைப் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

ஜாகுவார் எஃப் டைப் காரின் 3.0 லிட்டர் வி6 மாடல் ரூ.1.29 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும்,, 5.0 லிட்டர் வி8 மாடல் ரூ.2.15 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் பெட்ரோல் எஞ்சின் மாடல் ரூ.90.93 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கன்வெர்ட்டிபிள் மாடல் ரூ.1.01 கோடி எக்ஸ்ஷோரூம் விலையிலும் வந்துள்ளது.

ஏற்கனவே இருந்த 3.0 லிட்டர் மற்றும் 5.0 லிட்டர் மாடல்களைவிட புதிய 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் குறைவான விலையில் வந்துள்ளது. இதனால், இந்த புதிய மாடல் இந்தியர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெறும் என்று கருதப்படுகிறது.

புதிய 2.0 லிட்டர் இன்ஜெனியம் எஞ்சின் அதிகபட்சமாக 300 பிஎஸ் பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 0 - 100 கிமீ வேகத்தை 5.7 வினாடிகளில் தொட்டுவிடும். இந்த காரில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், சக்திவாய்ந்த மாடல்களை ஒப்பிடும்போது புதிய 2.0 லிட்டர் எஞ்சின் கொண்ட ஜாகுவார் எஃப் டைப் காரின் எடை 52 கிலோ குறைவானதாக இருக்கிறது. இது காரின் எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்களுக்கு சாதக அமைந்துள்ளது.

2018 எஃப் டைப் காரின் சேஸீயிலும் குறிப்பிடத்தக்க அளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், கையாளுமை, சொகுசு, செயல்திறன் என அனைத்திலும் மிகவும் சிறப்பான மாடலாக வந்துள்ளதாக ஜாகுவார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








