ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!!

புதிய லெக்சஸ் எல்எக்ஸ் 570 சொகுசு எஸ்யூவி கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவியை சமாளிக்கும் விதத்தில்.

By Saravana Rajan

டொயோட்டா நிறுவனத்தின் சொகுசு கார் பிராண்டான லெக்சஸ் பல புதிய சொகுசு ரக கார்களை இந்தியாவில் அடுத்தடுத்து களமிறக்கி வருகிறது. இந்த சூழலில், தனது உயர் வகை எஸ்யூவி மாடலான எல்எக்ஸ் 570 எஸ்யூவியையும் இன்று இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கி இருக்கிறது. இந்த பிரம்மாண்ட சொகுசு எஸ்யூவி கார் குறித்த முழுமையான விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!!

புதிய லெக்சஸ் எல்எக்ஸ்570 எஸ்யூவியில் மிரட்டலான க்ரில் அமைப்பு லெக்சஸ் பாரம்பரியத்தை பரைசாாற்றுகிறது. இந்த எஸ்யூவியில் எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. வலிமையான வீல் ஆர்ச்சுகள் மற்றும் அதற்கு இணையான சக்கரங்கள் இந்த காரின் கம்பீரத்தை கூட்டுகிறது.

ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!!

உட்புறத்தில் பீஜ் மற்றும் கருப்பு என இரட்டை வண்ண தீம் இடம்பெற்றுள்ளது. மென்மையான பாகங்களால் இழைக்கப்பட்டுள்ளது. லெதர் அப்ஹோல்ஸ்ட்ரியும் முக்கிய அம்சம். 19 ஸ்பீக்கர்கள் கொண்ட மார்க் லெவின்சன் ஆடியோ சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!!

14 சென்சார்களுடன் கூடிய ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, பிரம்மாண்ட தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என உட்புறத்தில் ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன. பின் இருக்கை பயணிகளுக்கு தனித்தனியாக டிவி திரைகளும் உள்ளன.

ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!!

டொயோட்டா லேண்ட்க்ரூஸர் எஸ்யூவி உருவாக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில்தான் புதிய லெக்சஸ் எல்எக்ஸ் 570 எஸ்யூவியும் உருவாக்கப்பட்டுள்ளது. லேடர் ஆன் ப்ரேம் சேஸீயில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவி 3,400 கிலோ எடை கொண்டது.

ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!!

இந்த பிரம்மாண்ட எஸ்யூவியை சமாளிக்கும் விதத்தில், 5.7 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 362 பிஎச்பி பவரையும், 530 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. இந்த எஸ்யூவி 0 -100 கிமீ வேகத்தை வெறும் 7.7 வினாடிகளில் தொட்டுவிடும்.

ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!!

புதிய லெக்சஸ் எல்எக்ஸ்570 எஸ்யூவி ஆஃப்ரோடு அம்சங்களிலும் சிறப்பானது.4 வீல் டிரைவ் கொண்ட இந்த காரில் மல்டி டெர்ரெயின் சிஸ்டம் என்ற ஆஃப்ரோடு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. டார்க் மற்றும் பிரேக் திறனை ஒவ்வொரு சக்கரத்திற்கும் சரியான அளவில் அனுப்பும் பணியை இது செவ்வனே செய்யும். இதனால், ஓட்டுனர் பதட்டமில்லாமல் காரை செலுத்தலாம்.

ரூ.2.33 கோடி விலை, 3.4 டன் எடை... இந்தியாவில் களமிறங்கிய புதிய லெக்சஸ் எஸ்யூவி!!

புதிய லெக்சஸ் எல்எக்ஸ் 570 எஸ்யூவி ரூ.2.33 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. நாடுமுழுவதும் உள்ள லெக்சஸ் டீலர்களில் இன்றுமுதல் முன்பதிவும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 21, 2018, 17:28 [IST]
English summary
2018 Lexus LX 570 Luxury SUV Launched In India.
மேலும்... #லெக்சஸ் #lexus
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+