புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. டீசல் மாடல் 5 வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் மாடல் ஒரேயொரு வேரியண்ட்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. டீசல் மாடலான

By Saravana Rajan

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புதுப்பொலிவுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்கள் மற்றும் விலை விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் டீசல் மாடல் 5 வேரியண்ட்டுகளிலும், பெட்ரோல் மாடல் ஒரேயொரு வேரியண்ட்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. டீசல் மாடலானது W5, W7, W9, W11 வேரியண்ட்டுகளிலும், அதிக பட்ச வசதிகளை அளிக்கும் W11 Option Pack என்ற டாப் வேரியண்ட்டிலும் கிடைக்கும். பெட்ரோல் மாடல் G என்ற வேரியண்ட்டில் மட்டும் வந்துள்ளது.

Recommended Video

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்! வீடியோ2018 Mahindra XUV500 Launched
புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவியின் முகப்பில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. க்ரில் அமைப்பில் குரோம் வில்லைகள் பொருத்தப்பட்டு அழகு கூட்டப்பட்டு இருக்கிறது. அதற்கு கீழாக ஏர்டேம் இடம்பெற்றுள்ளது. புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. பம்பர் அமைப்பும் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

செங்குத்தான டிசைனிலான டெயில் லைட்டுகள் இப்போது முக்கோண வடிவில் மாற்றம் கண்டுள்ளன. பின்புற கதவும் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது. நம்பர் பிளேட்டை சுற்றிலும் புதிய க்ரோம் அலங்கார பட்டை கொடுக்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் டோர் சில் பகுதியில் புதிய க்ரோம் பட்டைகள் கொடுக்கப்பட்டு இருப்பதும், புதிய அலாய் வீல்களும் மாற்றங்களாக தெரிகின்றன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

மஹிந்திரா எக்ஸ்யூ500 எஸ்யூவியின் உட்புறத்தில் பார்த்தவுடன் வசீகரிப்பது டேன் லெதர் வண்ண இருக்கைகள். கருப்பு வண்ண டேஷ்போர்டு மற்றும் சாஃப்ட் டச் எனப்படும் மென்மையான உணர்வை தரும் பாகங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கிின்றன. சென்டர் கன்சோல், ஸ்டீயரிங் வீல், கியர் நாப் ஆகியவற்றில் சில்வர் கம்பிகள் மூலமாக அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் முக்கிய மாற்றமாக எஞ்சின் திறன் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் இருக்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் இப்போது 153 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பழைய மாடலைவிட 15 எச்பி கூடுதல் பவரையும், 30 என்எம் கூடுதல் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்ரபாபக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும். டீசல் டாப் வேரியண்ட்டில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. இந்த மாடல் லிட்டருக்கு 15.4 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாமக 138 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியில் பல்வேறு சிறப்பு வசதிகளை அளிக்கும் புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனுடன் அர்காமிஸ் சவுண்ட் சிஸ்டமும் இணைக்கப்பட்டு இருக்கிறது. இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் புளூசென்ஸ் அப்ளிகேஷனுடன் வந்திருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முதல்முறையாக இந்த காருக்கு விசேஷமான ஸ்மார்ட்வாட்ச் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, ஆடியோ சிஸ்டம், க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி, எமர்ஜென்ஸி அசிஸ்ட், டயர் பிரஷர், எரிபொருள் அளவு, கதவு திறப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டுப்படுத்தவும், தகவல்களையும் பெற முடியும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவியின் உயர்வகை மாடல்களில் 18 அங்குல அலாய் சக்கரங்களும், குறைவான விலை வேரியண்ட்டுகளில் 17 அங்குல சக்கரங்களும் கொடுக்கப்படுகின்றன.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

விலை உயர்ந்த வேரியண்ட்டுகளில் 6 ஏர்பேக்குகள், இபிடி.,நுட்பத்துடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் ஏராளமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ரூ.12.32 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 போட்டியாக இருக்கும்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி டீசல் விலை விபரம்

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை
டபிள்யூ- 5 (மேனுவல்) ரூ.12.32 லட்சம்
டபிள்யூ-7 (மேனுவல்) ரூ.13.58 லட்சம்
டபிள்யூ-7 (ஆட்டோமேட்டிக்) ரூ.14.78 லட்சம்
டபிள்யூ-9 (மேனுவல்) ரூ.15.23 லட்சம்
டபிள்யூ-9 (ஆட்டோமேட்டிக்) ரூ.16.43 லட்சம்
டபிள்யூ-11(மேனுவல்) ரூ.16.43 லட்சம்
டபிள்யூ-11 (ஆட்டோமேட்டிக்) ரூ.17.63 லட்சம்
டபிள்யூ-11 ஆப்ஷன் பேக் (மேனுவல்) ரூ.16.68 லட்சம்
டபிள்யூ-11 ஆப்ஷன் பேக் (ஆட்டோமேட்டிக்) ரூ.17.88 லட்சம்

2018 மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி பெட்ரோல் விலை விபரம்

வேரியண்ட் எக்ஸ்ஷோரூம் விலை
ஜி வேரியண்ட்(ஆட்டோமேட்டிக்) ரூ.15.43 லட்சம்
Article Published On: Wednesday, April 18, 2018, 13:35 [IST]
English summary
2018 Mahindra XUV500 SUV launched In India.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+