மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் அழைக்கப்படும் புதிய பிரிமியம் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் மீண்டும் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கிறது. 2.2 லிட்டர்

By Saravana Rajan

மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் அழைக்கப்படும் புதிய பிரிமியம் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் மீண்டும் இணையதளங்களில் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

சாங்யாங் நிறுவனத்தின் புதிய ரெக்ஸ்டன் எஸ்யூவி இந்தியாவில் மஹிந்திரா பிராண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி700 என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய பிரிமியம் எஸ்யூவி மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

அப்போது எடுக்கப்படும் ஸ்பை படங்கள் தொடர்ந்து ஆட்டோமொபைல் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், நீல வண்ணத்திலான மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் ஸ்பை படங்கள் மீண்டும் வெளியாகி இருக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

மிக பிரம்மாண்டமாக காட்சி தரும் இந்த எஸ்யூவி 4. 85 மீட்டர் நீளமும், 1.92 மீட்டர் அகலமும், 1.8 மீட்டர் உயரமும் கொண்டது. 2,865 மிமீ வீல் பேஸ் கொண்டதாக வடிவமைக்கப்ட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியில் 7 பேர் செல்வதற்கான இருக்கை வசதியை பெற்றிருக்கிறது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

இதன் ரகத்திலான ஃபோர்டு எண்டெவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி மாடல்களைவிட அதிக இடவசதியை பெற்றிருக்கும். இந்த எஸ்யூவியில் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளும், பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற இருக்கை பயணிகளுக்கான 10.1 அங்குல டிவி திரைகள், வைஃபை இணைய தொடர்பு வசதிகள் இருக்கும். ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் காப் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

இந்த புதிய பிரிமியம் எஸ்யூவியில் 9 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், அவசரகால தானியங்கி பிரேக் சிஸ்டம், தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதி என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

இந்த புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியில் 181 பிஎஸ் பவரையும், 420 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 2.2 லிட்டர் யூரோ-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

இந்த காரில் புத்தம் புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 225 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடலில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும்.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவியின் புதிய ஸ்பை படங்கள்!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி700 எஸ்யூவி ரூ.22 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கு இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் போன்ற போட்டியாளர்களைவிட ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை விலை குறைவான மாடலாக இருக்கும்.

Source: MotorBeam And 4x4 India

More from DriveSpark

Article Published On: Thursday, July 5, 2018, 11:53 [IST]
English summary
The 2018 Mahindra XUV700 has been spied testing yet again, launch imminent.
மேலும்... #மஹிந்திரா #mahindra
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+